Published:Updated:

அரசை கலைத்து பாருங்கள்: மத்திய அரசுக்கு மம்தா சவால்

Vikatan Correspondent
அரசை கலைத்து பாருங்கள்: மத்திய அரசுக்கு மம்தா சவால்
அரசை கலைத்து பாருங்கள்: மத்திய அரசுக்கு மம்தா சவால்
அரசை கலைத்து பாருங்கள்: மத்திய அரசுக்கு மம்தா சவால்

ஹவுரா: "அரசியல் சட்டம் 365வது பிரிவை பயன்படுத்தி மேற்கு வங்க அரசை கலைத்து பாருங்கள்" என்று மத்திய அரசுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி சவால் விடுத்து உள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், ஹவுரா நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தல் பிரசாரத்தை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்து பேசுகையில், "மேற்கு வங்க மாநிலத்தை மத்திய அரசு பொருளாதர ரீதியாக புறக்கணித்து வருகிறது. எங்களுக்கு எதிராக சி.பி.ஐ.யை பயன்படுத்தி மிரட்டி வருகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து நாங்கள் விலகியதில் இருந்து காங்கிரஸ் கட்சி எங்களை பழிவாங்கி வருகிறது. காங்கிரஸ் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் கூட்டு சேர்ந்து கொண்டு எனக்கு எதிராகவும், எங்கள் கட்சிக்கு எதிராகவும் செயல்படுகின்றன.

இரு கட்சிகளும் சேர்ந்து சதி செய்து, பொருளாதார ரீதியாக எங்களுக்கு இடையூறை ஏற்படுத்தி, மாநிலத்தின் வளர்ச்சியை தடுக்கின்றன, முட்டுக்கட்டை போடுகின்றன. என் சொந்த வாழ்கைக்கு மட்டுமல்ல, என் உயிருக்கு எதிராகவும் அச்சுறுத்தல்கள் உள்ளன. அவற்றுக்கெல்லாம் பயப்படாமல், கடந்த 34 வருடங்களாக கடுமையாக போராடி வருகிறேன்.

##~~##
தைரியம் இருந்தால், அரசியல் சட்டம் 365வது பிரிவை பயன்படுத்தி என் ஆட்சியை கலைத்துப் பாருங்கள். அதன் விளைவை நீங்கள் பார்ப்பீர்கள். உங்கள் அச்சுறுத்தல்களுக்கெல்லாம் பயந்து கொண்டு, நான் ஒருபோதும் உங்கள் முன் மண்டியிட மாட்டேன். உங்கள் சதியை முறியடித்துக் காட்டுவேன்.
என்னையும், என் ஆட்சியையும் அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சி மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டு சேர்ந்துகொண்டு பழி வாங்கத்துடிக்கிறது.
கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒழுங்காக நடந்து கொள்ள வில்லை. கூட்டணி கட்சிகளை காங்கிரஸ் கட்சி சரியாக, முறையாக நடத்த வில்லை. 2வது முறையாக காங்கிரஸ் கட்சி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியை அமைத்து மத்தியில் ஆட்சியை பிடித்து இருக்கலாம். ஆனால், 3-வது முறையாக அந்தக் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது" என்றார் மம்தா பானர்ஜி.