Published:Updated:

மத்திய அரசு நடவடிக்கை தமிழக மீனவர்களுக்கு சி்க்கலை ஏற்படுத்தும்: கருணாநிதி

Vikatan Correspondent
மத்திய அரசு நடவடிக்கை தமிழக மீனவர்களுக்கு சி்க்கலை ஏற்படுத்தும்: கருணாநிதி
மத்திய அரசு நடவடிக்கை தமிழக மீனவர்களுக்கு சி்க்கலை ஏற்படுத்தும்: கருணாநிதி
மத்திய அரசு நடவடிக்கை தமிழக மீனவர்களுக்கு சி்க்கலை ஏற்படுத்தும்: கருணாநிதி

சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்தால் அபராதம் விதிக்க மத்திய அரசு உத்தேசித்திருப்பது தமிழக மீனவர்களுக்கு புதிய சிக்கல்களை ஏற்படுத்தும் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "மீன் பிடித் தடைக்காலம் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், தமிழக மீனவர்கள் குறிப்பாக ராமேஸ்வரம் மீனவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அவர்களது கவலைக்குக் காரணம், மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்திருக்கும் புதிய நடைமுறை ஆகும். இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் அவர்களின் மீன் பிடிப்பு உரிமைகளும் ரத்து செய்யப்படும் என்ற மத்திய அரசின் உத்தேச நடைமுறை மீனவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.

இலங்கைக் கடல் தொழில் மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்தின என்பவர் சீன மீன்பிடிக் கப்பல்கள் இலங்கைக் கொடியுடன் சர்வதேசக் கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடிக்க உள்ளன என்று தெரிவித்துள்ளார். ஆழ்கடல் மீன் பிடிப்பில் இலங்கைக்கு உள்ள உரிமைகளைப் பயன்படுத்த சீனாவை அனுமதித்திட இலங்கை அரசு முடிவெடுத்துள்ளதாகவும் அந்த அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

##~~##
இலங்கை அமைச்சர் குறிப்பிடும் பகுதிகளில் இந்திய மீனவர்களை விரட்டிவிட்டு, சீனப் படகுகளைக் கொண்டுவர உத்தேசித்திருக்கும் இலங்கை அரசின் நடவடிக்கை தமிழக மீனவர் களை மேலும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. ஏற்கனவே பல்வேறு பிரச்னைகளோடு தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக நாள் தோறும் போராடிக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை, இந்த இரண்டு சிக்கல்களில் இருந்தும் தமிழக அரசும் மத்திய அரசும் கப்பாற்ற வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.