Published:Updated:

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: பாஜக அரசு மீது நடிகை நக்மா சாடல்

Vikatan Correspondent

பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை நக்மா குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினரான நடிகை நக்மா, பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறுகிறது என்றார்.

##~~##
2004 முதல் 2012 ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் மொத்தம் 27,104 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது என்றும் இதன்படி பார்த்தால், தினசரி சராசரியாக 9 பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் கூறினார்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இத்தகைய குற்றத்திற்கு எதிராக பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் நக்மா குற்றம்சாட்டினார்.