Published:Updated:

2ஜி ஏலத்தில் பங்கேற்க ஸ்வான் நிறுவனத்திற்கு தகுதி இல்லை: நீரா ராடியா வாக்குமூலம்

Vikatan Correspondent

புதுடெல்லி: 2ஜி ஒதுக்கீட்டு ஏலத்தில் பங்கேற்க ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திற்கு தகுதி இல்லை என  2ஜி வழக்கில் நீரா ராடியா இன்று வாக்குமூலம் அளித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், சி.பி.ஐ.யின் முக்கிய சாட்சியான  பிரபல அரசியல் தரகர் நீரா ராடியா இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜாரானார்.

அப்போது அவர், "2ஜி ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டின் போது ஏலத்தில் பங்கேற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமானது என்று ஊடகங்கள் பரவலாக செய்தி வெளியிட்டன.

இதன் மூலமாகவும் டாடா குழுமத்தின் வழக்கறிஞர்கள் மூலமாகவும் 2ஜி ஒதுக்கீட்டு ஏலத்தில் பங்கேற்க ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திற்கு தகுதி இல்லை என்பது எனக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் எனக்கு எதுவும் தெரியாது.

டாடா டெலிகாம் மற்றும் டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்திற்கு தொலைத்தொடர்பு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் எனது நிறுவனம் ஆலோசனை வழங்கி வந்தது"என்று தெரிவித்தார்.

##~~##
இதன் பின்னர் நீரா ராடியாவின் உரையாடல் அடங்கிய சி.டி.,யை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.அதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 2 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.