Published:Updated:

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க.: நெல்லை, குமரி மாவட்டங்கள் பிரிப்பு!

Vikatan Correspondent
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க.: நெல்லை, குமரி மாவட்டங்கள் பிரிப்பு!
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க.: நெல்லை, குமரி மாவட்டங்கள் பிரிப்பு!

நெல்லை: நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராகி வருகிறது. இதன் முன்னோட்டமாக நிர்வாக வசதிக்காக நெல்லை, குமரி மாவட்ட எல்லைகளை புதிதாக வடிவமைத்து, நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க.: நெல்லை, குமரி மாவட்டங்கள் பிரிப்பு!

நெல்லை மாவட்டம்

நெல்லை மாவட்ட அ.தி.மு.க.வை பொறுத்தவரை, நெல்லை மாநகரம், நெல்லை புறநகர் (வடக்கு), நெல்லை புறநகர் (தெற்கு) என மூன்றாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. தற்போது அதனை நெல்லை மாநகர் மாவட்டம், நெல்லை புறநகர் மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்து இருக்கிறார்.

அதன்படி, நெல்லை மாநகர் மாவட்டம் என்பது நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். நெல்லை புறநகர் மாவட்டத்துடன் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய ஐந்து தொகுதிகளும் இடம்பெற்று இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவரான முருகையா பாண்டியனும், ஜெ.பேரவை செயலாளராக சுதா.பரமசிவனும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நெல்லை புறநகர் மாவட்ட செயலாளராக கே.பி.குமார் பாண்டியன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

நெல்லை மாநகர், புறநகர் மாவட்டங்களுக்கு கட்சி மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை தற்போது உள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டத்துக்கு உடபட்டு செயலபடுவார்கள்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க.: நெல்லை, குமரி மாவட்டங்கள் பிரிப்பு!

குமரி மாவட்டம்

இதேபோல குமரி மாவட்டமும் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டு உள்ள அறிக்கையில், குமரி மாவட்ட அ.தி.மு.க. இனிமேல் குமரி கிழக்கு, குமரி மேற்கு என இரண்டாக பிரிக்கப்படுவதாக தெரிவித்து உள்ளார்.

##~~##
குமரி கிழக்கு மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்று உள்ளது. குமரி மேற்கு மாவட்டத்துடன் பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெறும். குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக குருந்தங்கோடு ஒன்றிய செயலாளராக பதவி வகிக்கும் சிவசெல்வராஜனும், குமரி மேற்கு மாவட்ட செயலாளராக மேல்புறம் ஒன்றிய செயலாளரான ஜாந்தங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கட்சியின் அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டு இருக்கும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் கட்சியினர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என ஜெயலலிதா கேட்டுக் கொண்டு உள்ளார்.
ஜூன் 8ஆம் தேதி அ.தி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடக்க இருக்கும் சூழலில் அதற்கு முன்பாக இதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும் நிர்வாகிகள் மாற்றம் இருக்கும் என அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
-ஆண்டனிராஜ்