Published:Updated:

சசிகலா அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ் திடீர் கைது ஏன்? பரபரப்பு தகவல்கள்

சசிகலா அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ் திடீர் கைது ஏன்? பரபரப்பு தகவல்கள்
சசிகலா அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ் திடீர் கைது ஏன்? பரபரப்பு தகவல்கள்

சசிகலா அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ் திடீர் கைது ஏன்? பரபரப்பு தகவல்கள்

தஞ்சாவூர்: நில அபகரிப்பு  செய்ததாக அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை முன்னாள் செயலாளரும், சசிகலாவின் அண்ணன் மகனுமான டாக்டர் வெங்கடேஷ் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடைக்கானல் நகராட்சி சேர்மனாக இருந்து வருபவர் கோவிந்தன்.  இவர் மீது ஏராளமான புகார்கள் வந்ததால் நான்கு நாட்களுக்கு முன்பு கட்சியில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கினார்.

இதையடுத்து, அதிமுக அமைச்சர்கள் கொடுத்த நெருக்கடி காரணமாக சேர்மன்  பதவியில் இருந்து கோவிந்தன் ராஜினாமா செய்தார். ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்று வரை ராஜினாமா செய்ததாக அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனனின் மகனும், அ.தி.மு.க இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை முன்னாள் செயலாளர் டாக்டர் வெங்கடேஷ், சேர்மன் கோவிந்தனுடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.

இதனிடையே, கோவிந்தனுடன் தொடர்புடைய வெங்கடேஷை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். தகவல் அறிந்து சென்னையில் இருந்த வெங்கடேஷ் திருவாரூருக்கு பறந்தார்.

இதையடுத்து, திருவாரூக்கு சென்னை போலீசார் சென்றனர். இதைத் தொடர்ந்து திருவாரூரில் இருந்து சென்னை வந்தார் வெங்கடேஷ். இந்த முறை அவரால் எங்கும் தப்பிக்க முடியாத அளவுக்கு காவல்துறையினர் தடுப்பு வேலி அமைத்தனர்.

இந்த நிலையில், சென்னையில் இருந்த டாக்டர் வெங்கடேஷை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். மடிப்பாக்கம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ள அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, நில அபகரிப்பு  செய்த புகாரில் டாக்டர் வெங்கடேஷ் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியில் சந்தான லட்சுமி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இதே பகுதியில் டாக்டர் வெங்கடேஷனின் வீடும் உள்ளது.

இந்நிலையில் சந்தானலட்சுமிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக, அப்போதே வெங்கடேஷனின் மீது, தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் கைது செய்யப்பட்ட வெங்கடேஷை, காவல்துறையினர் தஞ்சாவூர் அழைத்து சென்றனர்.


  வீ.மாணிக்கவாசகம், 

அடுத்த கட்டுரைக்கு