Published:Updated:

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று சொல்லியே ஆட்சி பிடித்த திராவிட கட்சிகள்: பொன் ராதாகிருஷ்ணன் தாக்கு

Vikatan Correspondent
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று சொல்லியே ஆட்சி பிடித்த திராவிட கட்சிகள்: பொன் ராதாகிருஷ்ணன் தாக்கு
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று சொல்லியே ஆட்சி பிடித்த திராவிட கட்சிகள்: பொன் ராதாகிருஷ்ணன் தாக்கு
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று சொல்லியே ஆட்சி பிடித்த திராவிட கட்சிகள்: பொன் ராதாகிருஷ்ணன் தாக்கு

சென்னை: எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று சொல்லிச் சொல்லியே ஆட்சியைப் பிடித்திட்ட திராவிடக் கட்சிகள் 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வி்ட்டன என்று கூறியுள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், கல்லூரிகளில் ஆங்கிலத்தில் தேர்வு எழுதவேண்டும் என்ற திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று சொல்லிச் சொல்லியே ஆட்சியைப் பிடித்திட்ட திராவிடக் கட்சிகள் 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டும், தமிழே தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கி விட்டதற்கான பொறுப்பை அவர்கள் தட்டி கழித்துவிட இயலாது.

தமிழை வளர்ப்போம் என்று ஒரு புறம் முழங்கிக் கொண்டே, மறுபுறம் ஆங்கில வழிக் கல்விக்கு வித்திடுவது தமிழக கிராமத்திலுள்ள மாணவர்களுக்கும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் செயலாகும்.

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கூட தமிழ் வழிக்கல்வி தமிழகத்தில் புறக்கணிப்பட்டதில்லை என்பதை நினைவு கூரவேண்டும். பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஏற்படக்கூடிய பலன் களைவிட எதிர்மறை பலன்களே அதிகம்.

##~~##
சீனா, ஜப்பான் போன்ற வளர்ந்து விட்ட நாடுகளில் கூட தாய் மொழிக்கல்வி மூலமே பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் மாணவர்கள் எழுதும் பயிற்சி ஏடுகள் மற்றும் கல்லூரித் தேர்வுகளை இனி ஆங்கிலத்தில் தான் எழுதவேண்டும் என்ற உயர்க்கல்வி மன்றத்தின் பரிந்துரையை தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.
மேலும் தாய்மொழியான தமிழில் கல்வி கற்றோர் தரணியில் யாருக்கும் தாழ்ந்தவர்கள் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு, வரும் கல்வியாண்டிலிருந்து ஆங்கில வழிக்கல்வி முறையை அறிமுகப்படுத்தும் முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்து, தமிழ் வழிக்கல்வியே தொடரும் என்ற ஆக்கப்பூர்வமான முடிவை அறிவிக்க வேண்டும் என்று முதல்வரை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்" என பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.