Published:Updated:

தலையங்கம் - சரித்திரம் காப்போம்!

தலையங்கம் - சரித்திரம் காப்போம்!

தலையங்கம் - சரித்திரம் காப்போம்!

தலையங்கம் - சரித்திரம் காப்போம்!

Published:Updated:
தலையங்கம் - சரித்திரம் காப்போம்!
தலையங்கம் - சரித்திரம் காப்போம்!

சென்னை 'எழிலகம்' தீ விபத்தைத் தொடர்ந்து, தீமையிலும் ஒரு நன்மை விளைந்திருக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள தொன்மை வாய்ந்த அரசுக் கட்டடங்களை நிபுணர் குழு மூலம் ஆய்வுசெய்து, அவற்றின் பாதுகாப்புத்தன்மை குறித்து அறிக்கை தாக்கல் செய்யச் சொல்லி இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 பழைமை வாய்ந்த கட்டடங்களை அவற்றின் அமைப்பு கெடாமல் போற்றிப் பாதுகாப்பதன் மூலம், ஒரு சமூகத்தின் வரலாற்றையே பாதுகாக்கிறோம். அந்த வகையில், நூற்றாண்டு கடந்து வாழும் அரசாங்கக் கட்டடங்கள் மட்டும் இன்றி, மற்ற பல கட்டடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களையும் பாதுகாத்து, அடுத்தத் தலைமுறைகளிடம் ஒப்படைக்க வேண்டியது நம் கடமை.

சொல்லிக்கொள்வதற்கு என்று சிறப்பான சரித்திரம் ஏதும் இல்லாத நாடுகள்கூட, சின்னஞ்சிறு சின்னங்களுக்கும் சிலிர்ப்பான பின்னணியை உருவாக்கி, தம் சந்ததியர் மத்தியில் மிடுக்கும் கர்வமும் ஊட்டுவதைப் பார்க்கிறோம். அதைவைத்தே சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து அதன் மூலம் தங்கள் வருவாயை அந்த நாடுகள் பெருக்கிக் கொள்வதையும் காண்கிறோம்.

அப்படிப் பார்க்கும்போது, அரசு அலுவலகக் கட்டடங்கள் மட்டும் இன்றி... அணைக்கட்டுகள், கோட்டைகள், வழிபாட்டுத் தலங்கள், தியாகமும் வீரமும் நிறைந்த மனிதர்களின் நினைவிடங்கள் என்று நவீன பொறியியல் தொழில்நுட்பமே அண்ணாந்து பார்க்கும் ஆச்சர்யங்கள் தமிழகத்தில் ஏராளம். அவற்றை எல்லாம் போற்றிப் பாதுகாப்பதில், இத்தனை நாளும் நாம் பாராமுகமாக இருந்துவிட்டோம் என்பதே வருத்தமான உண்மை.

தொன்மைமிக்க அந்தக் கட்டுமான அதிசயங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளித்துப் பாதுகாப்பதோடு, அவற்றின் அடித்தளமாக அமைந்திருக்கும் சரித்திரச் சம்பவங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் நினைவுபடுத்திக்கொண்டே இருப்பதும்கூட அரசாங்கத்தின் கடமை ஆகும்.

விபத்துகள் நடக்கும்போது மட்டும் அவசரஅவசரமாக அவை குறித்து ஆழ்ந்து சிந்தித்து விட்டு, காலப்போக்கில் மொத்தமாக மறந்துபோகக் கூடாது. 'எழிலகம்' காக்க முதல்வர் எடுக்கும் நடவடிக்கை புதிய தொடக்கமாக இருக்கட்டும். இது வரையிலான தவறுகளுக்கு அதுவே சாப விமோசனமாக அமையட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism