Published:Updated:

`நானி, ஏன் போலீஸை வைத்து அப்பாவை மிரட்டுகிறீர்கள்?' - வைரலாகும் கிரண் பேடி பேத்தியின் வீடியோ

`நானி, ஏன் போலீஸை வைத்து அப்பாவை மிரட்டுகிறீர்கள்?' - வைரலாகும் கிரண் பேடி பேத்தியின் வீடியோ
`நானி, ஏன் போலீஸை வைத்து அப்பாவை மிரட்டுகிறீர்கள்?' - வைரலாகும் கிரண் பேடி பேத்தியின் வீடியோ

கிரண் பேடியின் பேத்தி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று, சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகிக்கொண்டிருக்கிறது. 

அந்த வீடியோவில், "நான் கிரண் பேடியின் ஒரே பேத்தி.  கிரண் நானி, அப்பா - அம்மாவுக்கு இடையில் எவ்வளவோ பிரச்னைகள் வந்திருக்கின்றன. அப்போதெல்லாம், 'உங்கள் பிரச்னைக்கு இடையில் வர மாட்டேன் என்றீர்களே... இப்போது ஏன் வருகிறீர்கள்?  நானி, நீங்கள் ஏன் என் அப்பாவையும் அவருடைய நண்பர்களையும் போலீஸை வைத்து துன்பப்படுத்துகிறீர்கள்?  என்னை யாரும் கடத்தவில்லை. கொடுமைப்படுத்தவில்லை. நான் என் அப்பாவுடன்தான் இருக்கிறேன். அதுவும் பாதுகாப்பாக இருக்கிறேன்.  நான் என் அப்பாவுடன் சந்தோஷமாக இருப்பதை நீங்களே பாருங்கள்" என்று சொல்லி, தன்னுடைய வீடியோவில் அப்பாவையும் காட்டுகிறார். 

பிறகு, "நான் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்தீர்களா" என்று கேட்பவர் தொடர்ந்து, 'அம்மா உங்களை நினைத்தும் நானியை நினைத்தும் நான் வெட்கப்படுகிறேன்' என்கிறார். கடைசியாக, 'என் அப்பாவுக்கு சப்போர்ட் செய்ய வேண்டுமென்று நினைப்பவர்கள், இந்த வீடியோவில் உங்கள் கமென்ட்டைப் போடுங்கள்' என்ற கோரிக்கையையும் பார்வையாளர்களிடம் முன்வைக்கிறார். இது புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.