Published:Updated:

ஆ.ராசாவின் ரகசியத் தலைவர் ப.சிதம்பரம்!

சுவாமி சுனாமிபி.செந்தில்நாயகம்படங்கள் : கே.ராஜசேகரன், த.சித்தார்த்

ஆ.ராசாவின் ரகசியத் தலைவர் ப.சிதம்பரம்!

சுவாமி சுனாமிபி.செந்தில்நாயகம்படங்கள் : கே.ராஜசேகரன், த.சித்தார்த்

Published:Updated:
##~##

டெல்லி நீதிமன்றங்களில் சுவாமி படியேறினால், மன்மோகனின் சகாக்கள் நடுங்குகிறார்கள். சுப்பிரமணியன் சுவாமியை இப்போது எல்லாம் தமிழகத்தில் பார்க்கவே முடிவது இல்லை. கோவைக்கு தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் ஆசிரமத்துக்கு வந்திருந்தவரைச் சந்தித்தேன்.  

 ''அலைக்கற்றை ஊழல் வழக்கு விசாரணை இவ்வளவு கறாராக நடக்கக் காரணகர்த்தர்களில் ஒருவராக இருக்கும் நீதிபதி ஏ.கே. கங்குலி  பிப்ரவரியில் ஓய்வுபெறுகிறார். ஆ.ராசாவும் ஜாமீனில் வெளியே வருவார் என்று சொல்கிறார்கள். இனி, அலைக்கற்றை வழக்கு என்னவாகும்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஏ.கே.கங்குலி ஓய்வுபெற்றாலும் அடுத்துவரும் நீதிபதி அவரைவிட மிகவும் கெட்டிக்காரராக, தைரியசாலியாக, நல்லவராக வருவார் என்று நம்புங்கள். அதனால், அலைக்கற்றை வழக்கைப் பொறுத்தவரை  வழக்கு விசாரணையில் எந்த மாற்றமும் இருக்கப்போவது இல்லை. ராசா மீதான குற்றம் நிரூபிக்கப்படும். அவருக்குத் தண்டனை கிடைப்பது உறுதி!

ஆனால், ராசா வெளியில் வந்தால் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். என்னைக் கேட்டால், அவர் ஜாமீனில் வருவதைவிட ஜெயிலில் இருப்பதே அவருக்குப் பாதுகாப்பு!''

ஆ.ராசாவின் ரகசியத் தலைவர் ப.சிதம்பரம்!

''சிதம்பரம் மீதான உங்கள் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே?''

''அலைக்கற்றை வழக்கில் அவர் ராசாவின் தலைவராகவே செயல்பட்டு இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால், ரகசியத் தலைவர்! இந்த ஊழலில் காங்கிரஸ் தலைவி சோனியாவுக்கும் பங்கு போயிருக்கிறது. அதற்கு உண்டான ஆதாரங்களைத் திரட்டி வருகிறேன். அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை வலுப்படுத்தத் தேவையான அத்தனை ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் தருவேன். அவர் செய்த குற்றம் நிரூபிக்கப் படும். அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். அதற்காக அவரை இப்பவே ஜெயிலில் போடணும், விசாரிக்கணும் என்ற அவசியம் கிடையாது.''

''உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கி ரஸின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?''

''அங்கு மட்டும் அல்ல... அனைத்து மாநிலத் தேர்தல்களிலும் காங்கிரஸ் தோற்கும். சட்டமன்றம் மட்டும் அல்ல; வரப்போற நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் ஜெயிக்காது. அதேபோல், காங்கிரஸ் கட்சி உடையும். 'கட்சியைக் கலைச்சிடலாம்’கிற மகாத்மா காந்தியின் வார்த்தைகள் சீக்கிரமே நிறைவேறப் போகுது!''

''மத்தியில் அடுத்து யார் ஆட்சி அமைப்பார்கள்?''

''இது இந்தியா. இந்துக்களின் ஒற்றுமையை யார் ஃபோகஸ் பண்றாங்களோ அவங்களே வெற்றிபெறுவாங்க. அது பாரதிய ஜனதா கட்சியாக இருக்கலாம். ஏன், ஜனதாவாகக்கூட இருக்கலாம். ராம்தேவ் போன்ற புதிய தலைவராகவும் இருக்கலாம். ஊழலை ஒழிக்க ராம்தேவுடன் சேர்ந்து போராடப்போகிறேன். அவரோட நிறைய பொதுக்கூட்டங்கள் பேசப் போறேன்!''

''ஜெயலலிதா ஆட்சிபற்றி என்ன நினைக் கிறீர்கள்?''

''ஆட்சி இனிமேல் சூப்பரா இருக்கும். ஏன்னா, இதுவரை சசிகலா கும்பல் அந்தம்மாவை நல்லாட்சி பண்ணவே விடலை. இப்ப சசிகலா வைக் கூண்டோடு வெளியே அனுப் பிட்டாங்க. அதனால, ஜெயலலிதாவின் சுயசிந்தனை நல்லா வேலை செய்யும். யாரோட தலையீடும் இருக்காது. நல்ல ஆட்சி நடக்கும். நானும் அந்த அம்மாவுக்கு உறுதுணையா இருப்பேன். ஆனால், மின் தட்டுப்பாட்டை மட்டும் ரொம்ப ஜாக்கிரதையா அந்தம்மா பார்க்கணும். அதுல கோட்டை விட்டுட்டாங்கன்னா, அதுவே  ஆட்சிக்குப் பெரிய ஆபத்தா வந்துடும். இதை நானும் அந்தம்மாகிட்ட சொல்லப் போறேன்!''

''ஜெயலலிதா பிரதமராகும் வாய்ப்பு இருக்கிறதா?''

''ஏன், அந்தம்மா பிரதமராகக் கூடாதா? பிரதமருக்கான எல்லாத் தகுதிகளும் அந்த அம்மாவுக்கு இருக்கு. தேவகவுடாவே பிரதமரா இருந்திருக்கிறப்ப அந்தம்மா வரக் கூடாதா?''

ஆ.ராசாவின் ரகசியத் தலைவர் ப.சிதம்பரம்!

''தி.மு.க-வின் எதிர்காலம்?''

''அந்தக் கட்சிக்கு எதிர்காலமே இல்லை. போகப்போக அந்தக் கட்சி சுக்குநூறா உடையும்!''

''கூடங்குளம் விவகாரத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?''

''கூடங்குளம் அணு மின் நிலையம் வேலைசெய்ய ஆரம்பிச்சாதான் தமிழ்நாட்டுக்கு விடிவுக்காலம் பிறக்கும். இது ரஷ்யாவின் உதவியால் நடக்கும் திட்டம். ரொம்பப் பாதுகாப்பான, உயர்தரத் தொழில்நுட்பத்தால செயல்படப்போறது. இது வெற்றிபெற்றா இந்தியாவுக்கு மட்டும் இல்ல; ரஷ்யாவுக்கும் உலக அளவுல நல்ல பேரு கிடைக்கும். அதனால, ரஷ்யாவோட எதிரிங்கதான் இங்கே மக்களைத் தூண்டிவிடுறாங்க. கூடங்குளம் அணு உலை செயல்படுறதுக்கு தமிழக மக்கள் சப்போர்ட் பண்ணணும்!''

''முல்லைப் பெரியாறு விவகாரம்பற்றி நீங்கள் எந்தக் கருத்தும் சொல்லவே இல்லையே?''

''இங்கே கருணாநிதி அஞ்சு வருஷம் ஆட்சி பண்ணினார். கேரளாவுல உள்ளவங்களுக்குச் சாதகமாக

ஆ.ராசாவின் ரகசியத் தலைவர் ப.சிதம்பரம்!

முல்லைப் பெரியாறு அணையை 126 அடிக்கு மேல் ஏத்தவேவிடலை. நான் நேத்திக்கு கேரளா போய் அங்கே இருக்கிற முக்கியமான தலைவர்களோடு பேசினேன். அவங்க, 'நிச்சயமா தண்ணி தர்றோம். ஆனால், அணையைப் புதுசா கட்ட அனுமதிச்சீங்கன்னா போதும்’னு சொன்னாங்க!''

''நீங்கள் ஒரு தமிழர். அட... அதைக் கருத்தில் கொள்ளாவிட்டாலும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நியாயம் நம்ம பக்கம்தான் இருக்கு. ஆனா, நீங்க கேரளாவுக்கு ஆதரவா பேசுறீங்களே?''

''நான் எப்பவும் தமிழர்களுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவேன். இப்பக்கூட 'தமிழன் மேல கைவெச்சா இந்த சுப்பிரமணியன் சுவாமி சும்மா இருக்க மாட்டேன்’னு அவங்ககிட்ட சொல்லிட்டுத்தான் வந்திருக்கேன்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism