Published:Updated:

தூள்பறக்கும் ஆட்டோ பிரசாரம்! - மாணவியைக் களமிறக்கிய த.மா.கா

தூள்பறக்கும் ஆட்டோ பிரசாரம்! - மாணவியைக் களமிறக்கிய த.மா.கா
தூள்பறக்கும் ஆட்டோ பிரசாரம்! - மாணவியைக் களமிறக்கிய த.மா.கா

தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் த.மா.காங்கிரஸ் கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆட்டோவில் ஸ்பீக்கரைக் கட்டிக் கொண்டு மைக்கைப் பிடித்து பேசியபடி பெண்கள் சிலர் ஆட்டோ சின்னத்திற்கு வாக்கு கேட்டு தொகுதியை வலம் வருகின்றனர்.பெண்களைக் கொண்டு த.மா.கா-வினர் செய்யும் இந்தப் பிரசாரத்திற்கு  நல்ல வரவேற்பும் கிடைத்திருப்பதாக கட்சியைச் சேர்ந்தவர்கள் உற்சாகமாகத் தெரிவிக்கின்றனர்.

தூள்பறக்கும் ஆட்டோ பிரசாரம்! - மாணவியைக் களமிறக்கிய த.மா.கா

`ஆட்டோவில் ஸ்பீக்கரைக் கட்டிகொண்டு, ``உங்கள் ஓட்டு உங்கள் வீட்டுப் பிள்ளைக்கே... மறந்துவிடாதீர்கள், மறந்தும் இருந்து விடாதீர்கள்! நமது சின்னம், நம்மை வாழவைத்த சின்னம்'' எனப் பல அலங்கார வார்த்தைகளைப் பேசி வர்ணணை செய்வதற்கு எனப் பல ஆண்களை களத்தில் இறக்குவார்கள் எல்லா அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும். அவர்களும் தங்களின் முழுத் திறமையுடன் மக்களைக் கவரும் வகையில் பேசி, தொகுதி முழுக்க சுற்றிவந்து வாக்குகள் சேகரிப்பார்கள். இப்படிச் செய்யும் பிரசாரம் எளிதாக மக்களைச் சென்றடைவதோடு, தொகுதியின் அனைத்து இடங்களுக்கும் சென்றுசேரும் என்பதால், இந்தப் பிரசார முறையை அதிகம் விரும்புவார்கள்.  இதேபோல,  தஞ்சாவூரில் ஆட்டோ ஒன்று ஸ்பீக்கரைக் கட்டிக்கொண்டு சுற்றிவருகிறது. அதில், ரஜினி நடித்த 'பாட்ஷா' படத்தில் வரும் 'நான் ஆட்டோகாரன் ஆட்டோக்காரன் நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்' என்ற பாடலும் மற்ற ரஜினி பாடல்களும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. இடையிடையே பாடல் நிறுத்தப்பட்டு, ஒரு பெண்ணின் குரல் ஒலிக்கிறது.

தூள்பறக்கும் ஆட்டோ பிரசாரம்! - மாணவியைக் களமிறக்கிய த.மா.கா

'அ.தி.மு.க கூட்டணியில் உள்ள த.மா.கா-வின் வேட்பாளரன நடராஜனுக்கு, ஆட்டோ சின்னத்தில் வாக்களியுங்கள்' என்றும், அம்மா தாய்மாரே ஆபத்தில் விடமாட்டார்  இந்த வேட்பாளர் எனக் கொஞ்சும் குரலில் வாக்கு கேட்கிறது. மறுபடியும் அதே ஆட்டோக்காரன் பாடல் ஒலிக்கிறது.எல்லோர் கவனமும் ஆட்டோவின் பக்கம் செல்ல, உள்ளே ஒரு பெண் மைக்கைப் பிடித்தபடி வாக்குகள் கேட்டுக்கொண்டே ம் செல்கிறார். த.மா.கா-வைச் சேர்ந்தவர்கள், பெண்களைக்கொண்டு செய்யும் இந்தப் பிரசாரம் மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.மேலும், இதேபோன்று பேசும் திறமைகொண்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் 5 பேரை  ஆட்டோவில் பிரசாரம் செய்வதற்கு இறக்கியுள்ளனர். த.மா.கா-வின் சின்னமான ஆட்டோவிற்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்துவருகிறார்கள்.

தூள்பறக்கும் ஆட்டோ பிரசாரம்! - மாணவியைக் களமிறக்கிய த.மா.கா

ஆட்டோவில் பிரசாரம் செய்துகொண்டிருந்த தாஞ்சாவூர் ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த மாணவி சபீதாவிடம் பேசினோம்,  ``நான் பன்னிரண்டாம் வகுப்பு பரீட்சை எழுதிவிட்டு கல்லூரிப் படிப்பிற்குச் செல்ல இருக்கிறேன். ஆட்டோவில் மைக் பிடித்தபடி, 'தாய்மார்கள் காக்கப்பட வேண்டுமா... ஆட்டோவிற்கு வாக்களியுங்கள், விவசாயிகள் காக்கபட வேண்டுமா... ஆட்டோவிற்கு வாக்களியுங்கள்' எனப் பேசி வாக்கு கேட்கிறேன். பெண்கள் இதுபோன்ற பணிகளைச் செய்வதில்லை. எனக்கு இதில் கொஞ்சம் ஆர்வம். 'ஆட்டோவில் மைக்கில் பேசியபடி தொகுதி முழுக்க சென்று வாக்குகள் கேட்க வேண்டும்' என த.மா.கா-வை சேர்ந்தவர்கள் கேட்டனர்.

எங்க அப்பாவும் அதே கட்சியைச் சேர்ந்தவர்தான். தீவிரமாகச் செயல்படக்கூடியவர். அவரும் ஓகே சொல்ல, பத்து தினங்களுக்கும் மேலாக ஆட்டோவில் மைக்கைப் பிடித்தபடி சுற்றிக்கொண்டுவருகிறேன். செலவுக்கு பணமும் தருகிறார்கள். பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல், வெளி உலகத்தைப் புரிஞ்சுக்கவும் ஒரு வாய்ப்பாக இருக்குது. என்னைப் போல சில பெண்களும் இதே போல வாக்குகள் கேட்பதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்'' என்றார்.த.மா.கா-வினரோ, ''எல்லோரும் ஆட்டோவில் பிரசாரம் செய்வார்கள். ஆனால், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னமே ஆட்டோதான். அதான் தூள்பறக்குது'' என்றனர்.