Published:Updated:

`வடை சுடுவதையும் அடை சுடுவதையும் வைத்து முதல்வர் ஆகிவிட முடியுமா?’ - பொன்னார் கிண்டல்!

`வடை சுடுவதையும் அடை சுடுவதையும் வைத்து முதல்வர் ஆகிவிட முடியுமா?’ -  பொன்னார் கிண்டல்!
`வடை சுடுவதையும் அடை சுடுவதையும் வைத்து முதல்வர் ஆகிவிட முடியுமா?’ - பொன்னார் கிண்டல்!

''ஸ்டாலின், 'பூஜ்ஜியத்திற்கு உள்ளே  ஒரு ராஜ்ஜியம்'  என வாழ்ந்துவருகிறார். வெளியே வந்து பார்த்தால், பா.ஜ.க சதம் அடித்திருப்பது அவருக்குத் தெரியும்' என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

`வடை சுடுவதையும் அடை சுடுவதையும் வைத்து முதல்வர் ஆகிவிட முடியுமா?’ -  பொன்னார் கிண்டல்!

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவிலை அடுத்த பறக்கை பகுதியில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியளர்களிடம் பேசுகையில், "ஆட்சியை மீண்டும் பிடிக்கும் கட்சி எவ்வளவு பொறுப்போடு ஒரு தேர்தல் அறிக்கையை கொடுக்க முடியுமோ, அந்த வகையில் சிறப்பான தேர்தல் அறிக்கையை பா.ஜ.க கொடுத்திருக்கிறது. விவசாயிகள், தொழில் முனைவோர் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெரும் வகையில் இது உள்ளது. எட்டு வழிச் சாலை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சிந்தித்து ஒரு முடிவு எடுக்கும். தமிழக அரசு, தமிழக மக்கள் மீதும் விவசாயிகள் மீதும் மிகுந்த அக்கறைகொண்டு செயல்பட்டுவருகிறது. அப்படி இருக்கும்போது, நிச்சயமாக அப்பகுதி மக்களுக்கும் விவசாயிகளுக்கு எது நன்மையோ அதை நிச்சயமாகச் செய்வார்கள்.

.

`வடை சுடுவதையும் அடை சுடுவதையும் வைத்து முதல்வர் ஆகிவிட முடியுமா?’ -  பொன்னார் கிண்டல்!

பா.ஜ.க தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் பூஜ்ஜியம் எனக் கூறியதன் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை. ஸ்டாலின் பூஜ்ஜியத்திற்கு உள்ளே  ஒரு ராஜ்ஜியம்  என வாழ்ந்துவருகிறார். வெளியே வந்து பார்த்தால், பா.ஜ.க சதம் அடித்திருப்பது அவருக்குத் தெரியும். நான்குநேரி தொகுதியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், வசந்தகுமார் குமரிக்கு  வருகிறார். அப்படியானால், அங்கும் வாய்க்கரிசி இங்கும் வாய்க்கரிசி. இந்த நிலை இருக்கக் கூடாது. குமரி மாவட்டத்தில் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டது வசந்தகுமாருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

`வடை சுடுவதையும் அடை சுடுவதையும் வைத்து முதல்வர் ஆகிவிட முடியுமா?’ -  பொன்னார் கிண்டல்!

வடை சுடுவதையும் அடை சுடுவதையும் வைத்து ஒரு தேர்தலைச் சந்திக்க முடியுமா? ஸ்டாலின் இலவு காத்த கிளியாக இருக்கிறார் . மத்தியிலும் ஆட்சி மாற்றம் வரப்போவதில்லை, தமிழகத்திலும் வாய்ப்பே இல்லை. ஸ்டாலின் முதல்வராக வருவதற்கு வாய்ப்புள்ளதா என கேட்கிறீர்கள்.  ஓட்டப்பம் வீட்டைச் சுடும், தன்வினை தன்னைச் சுடும்" என்றார்.