Published:Updated:

`சாப்பிட கொஞ்சம் சோறு கிடைக்குமா'! - பிரசாரத்தின்போது நெகிழவைத்த சுரேஷ்கோபி

`சாப்பிட கொஞ்சம் சோறு கிடைக்குமா'! - பிரசாரத்தின்போது நெகிழவைத்த சுரேஷ்கோபி
`சாப்பிட கொஞ்சம் சோறு கிடைக்குமா'! - பிரசாரத்தின்போது நெகிழவைத்த சுரேஷ்கோபி

வாகன பிரசாரத்திற்குச் சென்ற திருச்சூர் வேட்பாளர் சுரேஷ்கோபி திடீரென ஒரு வீட்டுக்குள் சென்று சோறு கேட்டு வாங்கிச் சாப்பிட்டு அந்தக் குடும்பத்தை நெகிழவைத்தார்.

`சாப்பிட கொஞ்சம் சோறு கிடைக்குமா'! - பிரசாரத்தின்போது நெகிழவைத்த சுரேஷ்கோபி

திரைப்பட நடிகர் சுரேஷ் கோபி கேரள மாநிலம் திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். திருச்சூர் தொகுதிக்குட்பட்ட பீடிகப்பறம்பு அய்யப்பன் காவு பகுதியில் சுரேஷ்கோபி திறந்த வாகனத்தில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். மதியம் ஒன்றேகால் மணிக்கு பிரசார வாகனத்தை நிறுத்திய சுரேஷ்கோபி அருகில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்றார். வீட்டில் சுனில், செளமியா தம்பதியர் இருந்தனர். சுரேஷ்கோபி வாக்கு கேட்பார் என எதிர்பார்த்த நிலையில், `சாப்பிட கொஞ்சம் சோறு கிடைக்குமா' எனக் கேட்டு சுனில் வீட்டினரை ஆச்சர்யப்படுத்தினார். தொட்டுக்க பொரியல் சரியாக இல்லையே என அவர்கள் நெளிந்துள்ளனர். இருப்பது போதும் எனக் கை கழுவிவிட்டு அமர்ந்தார் சுரேஷ்கோபி.

`சாப்பிட கொஞ்சம் சோறு கிடைக்குமா'! - பிரசாரத்தின்போது நெகிழவைத்த சுரேஷ்கோபி

photo credit : @mathrubhumieng

சோறும், சாம்பாரும், தீயல், ஊறுகாய் ஆகியவை பரிமாறப்பட்டன. சாப்பாட்டை சாப்பிட்ட சுரேஷ்கோபி தீயலின் சுவை நாவைவிட்டு போகவில்லை எனக் கூறி வீட்டினரை குளிரவைத்தார். முன்பே சொல்லியிருந்தால் தடபுடலாகச் சமைத்திருப்போம் என வீட்டில் இருந்தவர்கள் கூறினர். வீட்டில் இருந்த அனைவருடனும் செல்ஃபி எடுத்த சுரேஷ்கோபி பிரசாரத்தை தொடருவதற்காகப் புறப்பட்டார். புறப்படும்போது, ``இந்த வீட்டையும், இன்றைய உணவையும் மறக்கமாட்டேன். எனக்கு ஓட்டுபோடுவீர்கள்தானே" எனக் கூறிவிட்டு சிரித்தபடி சென்றார் சுரேஷ்கோபி. இதுகுறித்து அந்த வீட்டைச் சேர்ந்த சுனில் கூறும்போது, ``ஓட்டு கேட்பார் என எதிர்பார்த்தோம். அவர் சோறு கேட்டதால் நாங்கள் ஆச்சர்யமடைந்தோம்" என்றார்.