Published:Updated:

``அரசியலில் என் முதல் வெற்றி.... கண்கலங்கிய அந்தத் தருணம்!" - நடிகை ரோஜா

``அரசியலில் என் முதல் வெற்றி.... கண்கலங்கிய அந்தத் தருணம்!" - நடிகை ரோஜா

``நடிகையாக, மனைவியாக, அம்மாவாக வெற்றி பெற்றாலும், தேர்தலில் மட்டும் சிலர் சூழ்ச்சியால் தோல்விகளையே சந்தித்துவந்தேன். இச்சூழலில்தான் கடந்த சட்டமன்றத் தேர்தல் வெற்றி பெற்று முதல் முறையாக மக்கள் பிரதிநிதியானேன். அந்த வெற்றிச் செய்தியைக் கேட்டு கண்கலங்கியதை எப்போதும் மறக்க மாட்டேன்."

Published:Updated:

``அரசியலில் என் முதல் வெற்றி.... கண்கலங்கிய அந்தத் தருணம்!" - நடிகை ரோஜா

``நடிகையாக, மனைவியாக, அம்மாவாக வெற்றி பெற்றாலும், தேர்தலில் மட்டும் சிலர் சூழ்ச்சியால் தோல்விகளையே சந்தித்துவந்தேன். இச்சூழலில்தான் கடந்த சட்டமன்றத் தேர்தல் வெற்றி பெற்று முதல் முறையாக மக்கள் பிரதிநிதியானேன். அந்த வெற்றிச் செய்தியைக் கேட்டு கண்கலங்கியதை எப்போதும் மறக்க மாட்டேன்."

``அரசியலில் என் முதல் வெற்றி.... கண்கலங்கிய அந்தத் தருணம்!" - நடிகை ரோஜா

ம் ஜனநாயக நாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் திருவிழா, தற்போது களைகட்டியுள்ளது. முதல்கட்டமாக நாளை (11.04.2018) ஆந்திர மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்றுடன்அங்குப் பிரசாரம் முடிவடைந்தது. நகரி தொகுதி எம்.எல்.ஏ-வான நடிகை ரோஜா, மீண்டும் அதே தொகுதியில் களம்காண்கிறார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான அவர், பிரசார இடைவெளியில் தேர்தல் நிலவரம் மற்றும் அரசியல் சூழல்கள் குறித்து விரிவாகப் பேசினார்.

``கடந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில், நகரி தொகுதியில் 858 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றீர்கள். இம்முறை உங்களின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?"

``மாநிலத்தில் மிக முக்கியமான தொகுதியான இங்கு, பல கட்சிகளும் சம பலத்துடன் இருக்கின்றனர். வெற்றி வேட்பாளருக்கும் அவருக்குப் பின் வரும் வேட்பாளர்களுக்குமான வாக்கு வித்தியாசம், சில ஆயிரங்களில்தான் இருக்கும். நடிகையாக, மனைவியாக, அம்மாவாக வெற்றி பெற்றாலும், தேர்தலில் மட்டும் சிலர் சூழ்ச்சியால் தோல்விகளையே சந்தித்துவந்தேன். இச்சூழலில்தான் கடந்த சட்டமன்றத் தேர்தல் வெற்றி பெற்று முதல் முறையாக மக்கள் பிரதிநிதியானேன். அந்த வெற்றிச் செய்தியைக் கேட்டு கண்கலங்கியதை எப்போதும் மறக்க மாட்டேன். என் தொகுதி மக்கள் என் மீது அன்பும் நம்பிக்கையும் கொண்டுள்ளனர். எனவே இம்முறை என் வெற்றியும், மாநிலம் முழுக்க எங்கள் கட்சியினர் வெற்றியும் பிரகாசமாக உள்ளது. எங்கள் கட்சித் தலைவர், ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராவதும் உறுதி." 

``தேர்தல் ஆதாயத்துக்காகவே, உங்கள் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் அண்ணா உணவகம், மலிவு விலைக் குடிநீர் திட்டங்களைச் செயல்படுத்தியிருப்பதாக ஆளுங்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்களே..."    

``பிரதமர் மோடி, நடிகர் பவன் கல்யாண் ஆகியோருடன் கூட்டுச் சேர்ந்து கடந்த சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட சந்திரபாயு நாயுடு, 600-க்கும் மேற்பட்ட வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அதில் ஒருசிலவற்றைக்கூட உருப்படியாகச் செய்யவில்லை. ஆந்திராவில் அண்ணா மலிவு விலை உணவகம் ஒன்றைத் தொடங்கிய சந்திரபாபு நாயுடு, அதை முறையாகச் செயல்படுத்தவில்லை. மக்கள் அனுபவிக்கும் கஷ்டத்தை எத்தனை முறை சொன்னாலும், சந்திரபாபு நாயுடு கண்டுகொள்வதேயில்லை. தற்போதைய ஆட்சியில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நடக்கிறது. இதற்கு எதிராகச் சட்டமன்றத்தில் பேசியதால், என்னைக் கண்டு அஞ்சிய சந்திரபாபு நாயுடு, என்னை ஓராண்டு தகுதிநீக்கம் செய்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றேன். தகுதி நீக்கத்தை ரத்து செய்த நீதிமன்றத் தீர்ப்பையும்கூட, சந்திரபாபு நாயுடு மதிக்கவில்லை. 

என் சினிமா மற்றும் அரசியல் பயணத்துக்கு ஜெயலலிதா அம்மா பெரிய இன்ஸ்பிரேஷன். அவர் தமிழகத்தில் தொடங்கிய நல்ல திட்டம், `அம்மா உணவகம்'. அதுபோல முழுக்கவே ஏழை மக்களின் பசியைப் போக்க, `ஒய்.எஸ்.ஆர் அண்ணா உணவக'த்தைக் கடந்த ஆண்டு தொடங்கினேன். இது மொபைல் கேன்டின் என்பதால், பல இடங்களில் வலம் வரும். தினமும் ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறுகின்றனர். தவிர, மக்களுக்கு மலிவு விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் வழங்குகிறேன். இதற்காக மக்கள் பணிக்கு இடையே, டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக வேலை செய்கிறேன். அதனால் கிடைக்கும் வருமானத்தில் இவ்விரு திட்டத்தையும் செயல்படுத்திக்கொண்டிருக்கிறேன். அரசு எங்கள் கட்சியினரின் தொகுதிகளுக்கு எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை. எனவேதான், என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் நிதி மற்றும் என் சொந்தப் பணத்தில் மக்களுக்கு நல்லது செய்திருக்கிறேன். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற லாயக்கற்ற சந்திரபாபு நாயுவின் கட்சியினருக்கு, என் திட்டத்தைக் குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது?"

``சந்திரபாபு நாயுடுவின் ஐந்தாண்டுக்கால ஆட்சி பற்றி உங்கள் கருத்து?"

``கரெப்ஷன்... கரெப்ஷன்... கரெப்ஷன். கடந்த ஐந்தாண்டுக்கால ஆட்சியில் கொள்ளையடித்து நிறைய பணம் சேர்த்திருக்கிறார். ஹைதராபாத்தில் பிரமாண்ட வீடு ஒன்றைக் கட்டியிருக்கிறார். ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யும் தனக்கு வேண்டியவர்களுக்கு உதவவே, அமராவதியில் புதிய தலைநகர் உருவாக்கத் தொடங்கினார். இதனால் விவசாயிகளிடமிருந்து பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களைக் கைப்பற்றி, விவசாயிகளின் வாழ்வாதாரங்களை அழித்தார். இவையெல்லாம்தான் அவரின் சாதனைகள்."

``மத்தியில் மீண்டும் எந்தக் கட்சி ஆட்சியமைக்கும் என நினைக்கிறீர்கள்?"

``ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் முடிவுகள் வேறு விதமாக இருக்கும். அதனால் மத்தியில் யார் ஆட்சிக்கு வருவார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், மக்களுக்கு நல்லது செய்பவர்கள் ஆட்சிக்கு வந்தால் நல்லது."

 ``நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி, இந்தத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறதே..."

``பவன் கல்யாண் பிரதமர் மோடிக்கு ஆதரவானவர். அவர் மக்களைக் குழப்பி, ஓட்டுகளைப் பிரிக்க நினைக்கிறார். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு உதவும் வகையில்தான் அவர் செயல்படுவார். அதனால் அவரின் கட்சியை மக்கள் நிராகரிப்பார்கள்."

ஆனந்த விகடனில் வெளியான நடிகை ரோஜாவின் அரசியல் மற்றும் பர்சனல் வாழ்க்கை குறித்த விரிவான பேட்டியைப் படிக்க, ``என் கணவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்!” - இந்த டைட்டிலை க்ளிக் செய்யவும்.