Published:Updated:

“நாடாளுமன்ற புலி கனிமொழியா?”- ஸ்டாலின் பேச்சும்...வைகோவின் ரியாக்ஷனும்!

“நாடாளுமன்ற புலி கனிமொழியா?”- ஸ்டாலின் பேச்சும்...வைகோவின் ரியாக்ஷனும்!
“நாடாளுமன்ற புலி கனிமொழியா?”- ஸ்டாலின் பேச்சும்...வைகோவின் ரியாக்ஷனும்!

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளை நேற்றும் ஆதரித்தேன் இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன் என்று முழங்கியவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.இந்திய நாடாளுமன்றத்தில் 24 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வைகோவின் பேச்சை பார்த்து அன்றைப் பிரதமர் இந்திரா காந்தி “காங்கிரஸின் 200 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைகோ ஒருவருக்குச் சமம்” என்று புகழ்ந்தார். வைகோவின் புலிகள் ஆதரவு பிடிப்பும், அவரது அசாத்திய நாடாளுமன்ற உரையினாலும் அன்றைய தி.மு.க வினரால் நாடாளுமன்ற புலி வைகோ என மேடைதோறும் புகழ்பாடினார்கள்.அதன்பிறகு ம.தி.மு.க-வை வைகோ ஆரம்பித்தபிறகு அவரது கட்சியினரும் இதே பட்டத்தை கொண்டே வைகோவை அழைத்தனர். நாடாளுமன்ற புலியாக தமிழகத்தில் அறியப்பட்டவர் இத்தனை காலம் வைகோ மட்டுமே. இந்நிலையில் தூத்துக்குடி தொகுதியில்  தி.மு.க சார்பில் போட்டியிடும் கனிமொழியை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் “கனிமொழிக்குக் கலைஞரின் மகள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக தூத்துக்குடியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

சுமார் 12 ஆண்டு காலமாக அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை எம்பி ஆக இருந்துள்ளார்.  'கனிமொழி நாடாளுமன்ற புலி' என்ற பட்டத்தை பெற்றுள்ளார். அவர் இந்த தேர்தலில் தூத்துக்குடிக்கு புலியாக உங்களுக்குக் கிடைத்திருக்கிறார் ” என்று தங்கைக்கு புகழ்மாலை சூட்டினார்.நாடாளுமன்ற புலியாக வர்ணிக்கப்பட்ட வைகோ வின் தொகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் ஸ்டாலின் இவ்வாறு பேசியது மதிமுக தரப்பினருக்கு ஒருபுறம் அதிர்சிதான். இதுகுறித்து வைகோவிற்கு நெருக்கமானவர்களிடம் கேட்டால் “நாடாளுமன்ற புலி என்றால் அது வைகோ என்பது தமிழகம் அறிந்த செய்தி. ஆனால், எதற்காக தூத்துக்குடியில் வைத்து கனிமொழியை புலி என்று ஸ்டாலின் பட்டம் கொடுத்தார் என்று புரியவில்லை. தலைவர் இதில் ஓரளவு அப்செட் என்று எங்களால் உணரமுடிகிறது. ஆனால், எதையும் பெருந்தன்மையோடு எடுத்துக்கொள்ளும் வைகோ, இதையும் அப்படியே கடந்து செல்ல விரும்புகிறார்” என்கிறார்கள்.