Published:Updated:

தி.மு.க வேட்பாளர் கனிமொழியின் தூத்துக்குடி வீட்டில் ஐ.டி ரெய்டு!

தி.மு.க வேட்பாளர் கனிமொழியின் தூத்துக்குடி வீட்டில் ஐ.டி ரெய்டு!
தி.மு.க வேட்பாளர் கனிமொழியின் தூத்துக்குடி வீட்டில் ஐ.டி ரெய்டு!

தூத்துக்குடியில், தி.மு.க சார்பில் போட்டியிடும் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் ஐ.டி ரெய்டு நடந்துவருகிறது.

தி.மு.க வேட்பாளர் கனிமொழியின் தூத்துக்குடி வீட்டில் ஐ.டி ரெய்டு!

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். இதற்காக, கடந்த 20 நாள்களாக அவர் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டுவந்தார். பிரசார இறுதிநாளான இன்று, தூத்துகுடியில்  தொடங்கி கோவில்பட்டியில் தனது பரப்புரையை இறுதி செய்தார். கோவில்பட்டியில், வைகோ முன்னிலையில் பிரசாரத்தை நிறைவுசெய்தார். பிரசாரத்தை நிறைவுசெய்த பின் தூத்துக்குடியில் அவர் தங்கியிருக்கும் குறிஞ்சி நகர் வீட்டுக்கு வந்தார்.

தி.மு.க வேட்பாளர் கனிமொழியின் தூத்துக்குடி வீட்டில் ஐ.டி ரெய்டு!

அப்போது, அங்கு இரண்டு கார்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள், கனிமொழியின் வீட்டில் சோதனை நடத்திவருகின்றனர். வீட்டில் உள்ள பணியாளர்களை வெளியேற்றிய அதிகாரிகள், தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பணியாளர்களைத் தவிர, கனிமொழி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் சிலர் வீட்டில் உள்ளனர். அவர்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க வேட்பாளர் கனிமொழியின் தூத்துக்குடி வீட்டில் ஐ.டி ரெய்டு!

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்கு ஏதுவாக, குறிஞ்சி நகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகை எடுத்திருந்தார் கனிமொழி. இந்த இல்லம் தூத்துக்குடியைச் சேர்ந்த தொழிலதிபருக்குச் சொந்தமானது. இங்குதான் அவரது அலுவலகமும் செயல்பட்டுவந்தது. இதற்கிடையே, வருமான வரித் துறை அதிகாரிகளின் திடீர் சோதனையால், கனிமொழியின் இல்லம் முன்பு தூத்துக்குடி தி.மு.க எம்.எல்.ஏ கீதா ஜீவன் உள்ளிட்ட ஏரளமான கட்சிப் பிரமுகர்கள் திரண்டுள்ளனர். தொண்டர்களின் வருகை அதிகரித்துவருவதால், அங்கு தற்போது பதற்றம் நிலவிவருகிறது.

இதுகுறித்துத் தகவலறிந்து, கனிமொழி வீட்டுக்கு முன்பாகத் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதையடுத்து, அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.