Published:Updated:

முடிந்தது தேர்தல்... இனி மின்வெட்டுதானா? - என்ன சொல்கிறார் அமைச்சர் தங்கமணி

ஆர்.பி.
முடிந்தது தேர்தல்... இனி மின்வெட்டுதானா? - என்ன சொல்கிறார் அமைச்சர் தங்கமணி
முடிந்தது தேர்தல்... இனி மின்வெட்டுதானா? - என்ன சொல்கிறார் அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் தற்போது கோடை சீசன். நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடியும் வரை தமிழகத்தில் எங்குமே மின்வெட்டு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி, மின்வாரிய சேர்மன் விக்ரம் கபூருக்கு உத்தரவிட்டிருந்தாராம். அதையடுத்து, எக்ஸ்பிரஸ் வேகத்தில் மின்வாரியம் செயல்பட்டது. வெற்றிகரமாக மின்வெட்டு இல்லாமல் சமாளித்தனர். இந்த வேகம் இனி தொடருமா? என்று கேள்வி எழுப்புகிறார்கள் தமிழக மின்வாரியத்துடன் தொடர்பில் இருக்கும் தி.மு.கழக பிரமுகர்கள். 

முடிந்தது தேர்தல்... இனி மின்வெட்டுதானா? - என்ன சொல்கிறார் அமைச்சர் தங்கமணி

மேலும், ``மின்வாரியம் சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித்தவிக்கிறது. நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தியில் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மின்உபகரணங்கள் மற்றும் கான்ட்ராக்டர்கள்... இப்படி பலதரப்பட்டவர்களுக்கு பணம் நிலுவையில் நிற்கிறது. உதாரணத்துக்கு, காற்றாலை உற்பத்தியாளர்களுக்குக் கடந்த 16 மாதங்களாகப் பணம் தரப்படவில்லை. கடந்த வருடம் அக்டோபர், நவம்பர் வரைதான் தரப்பட்டிருக்கிறது. இப்போதைக்கு விக்ரம் கபூர், மற்றவர்களுக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் பவர் சப்ளையர்களுக்கு பணம் கொடுக்கவும் என்று வாய்மொழி உத்தரவு போட்டிருக்கிறார்.

முடிந்தது தேர்தல்... இனி மின்வெட்டுதானா? - என்ன சொல்கிறார் அமைச்சர் தங்கமணி

அதன்படிதான், பணப் பட்டுவாடா நடக்கிறது. அதனால், மின்வெட்டு இல்லை. இதே நிலைமை நீடிக்குமா என்று இப்போதைக்குச் சொல்ல முடியாது. ஏனென்றால், பணம் நிலுவையில் இருப்பவர்களும் தொடர்ந்து சப்ளை செய்துகொண்டே இருந்தால்தான், மின்வெட்டு இருக்காது. அவர்கள் தரப்பில் ஏதாவது பிரச்னை செய்தால், மின்வாரியம் சமாளிக்க முடியாமல் திணறும். அப்போது மின்வெட்டு வரலாம்” என்கிறார்கள்.  இதுபற்றி விளக்கம் பெற மின்வாரிய சேர்மன் விக்ரம் கபூரை தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால் முடியவில்லை.  மின்வாரிய உயர் அதிகாரிகள் சிலர் நம்மிடம் பேசுவதைத் தவிர்த்தனர். 

முடிந்தது தேர்தல்... இனி மின்வெட்டுதானா? - என்ன சொல்கிறார் அமைச்சர் தங்கமணி

அதையடுத்து, மின்துறை அமைச்சர் தங்கமணியைத் தொடர்புகொண்டோம், ``மின்வெட்டு அறவே வராது. அதை என்னால் உறுதிபட சொல்லமுடியும். மின்வெட்டு வருகிறதா இல்லையா என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். வழக்கமாக 15,345 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். கடந்த ஏப்ரல் 3-ம் தேதியன்று 16,161 மெகா வாட் மின்சாரம் செலவானது. அதையே மின்வாரிய அதிகாரிகள் திறமையாக சமாளித்தார்கள். நிலுவைத்தொகை என்பதெல்லாம் பெரிய விஷயமில்லை. அரசாங்கத்துக்குத்தானே கொடுக்கிறார்கள். அவர்கள் உற்பத்தி செய்வது எங்களுக்குத்தானே கொடுக்கமுடியும்? எப்படியும் அவர்களுக்குத் திரும்ப வட்டியுடன் கிடைக்கப்போகிறது. இதுமாதிரி வதந்திகளை எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுக் கிளப்பிவிடுகிறார்கள்” என முடித்துக்கொண்டார்.