Published:Updated:

உற்சாக முலாயம்... மாயாவதி மகிழ்ச்சி... 25 ஆண்டுகளுக்குப் பின் நடந்த அதிசயம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உற்சாக முலாயம்... மாயாவதி மகிழ்ச்சி... 25 ஆண்டுகளுக்குப் பின் நடந்த அதிசயம்!
உற்சாக முலாயம்... மாயாவதி மகிழ்ச்சி... 25 ஆண்டுகளுக்குப் பின் நடந்த அதிசயம்!

உற்சாக முலாயம்... மாயாவதி மகிழ்ச்சி... 25 ஆண்டுகளுக்குப் பின் நடந்த அதிசயம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ன்றைய நாளை உத்தரப்பிரதேச மக்கள் வாழ்நாளில் மறக்க மாட்டார்கள். இங்கே தமிழ்நாட்டில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒரே மேடையில் அமர்ந்து, ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லி, ஒருவரை ஒருவர் வாழ்த்திப்பேசினால் எப்படி இருந்திருக்கும்? அதுபோன்றதொரு நிகழ்வுதான், இன்று உத்தரப்பிரதேசத்தின் மெயின்புரி தொகுதியில் நடந்திருக்கிறது. பகுஜன் சமாஜூம் சமாஜ்வாதியும் கூட்டணி அமைத்து இந்த நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். மாயாவதியும் அகிலேஷூம் இணைந்து, தேர்தல் பிரசாரக் கூட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறார்கள். இந்தச் சூழலில்தான், மெயின்புரி தொகுதியில் போட்டியிடும் முலாயம் சிங்குக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முன்வந்தார் மாயாவதி. 

உற்சாக முலாயம்... மாயாவதி மகிழ்ச்சி... 25 ஆண்டுகளுக்குப் பின் நடந்த அதிசயம்!

மெயின்புரி, முலாயம் சிங்கின் ஆஸ்தான தொகுதி. இதுவரை, நான்கு முறை அந்தத் தொகுதியில் அவர் வென்றிருக்கிறார். 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அசம்கார், மெயின்புரி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலுமே வென்றார். அதற்குப் பிறகு, மெயின்புரி தொகுதியில் ராஜினாமா செய்தார். அங்கு நடந்த இடைத்தேர்தலில், முலாயம் சகோதரரின் பேரன் தேஜ் பிரதாப் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில், மீண்டும் மெயின்புரிக்கே திரும்பியிருக்கிறார் முலாயம். அசம்காரை மகன் அகிலேஷூக்கு விட்டுக்கொடுத்திருக்கிறார்.

மெயின்புரி தொகுதியில் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு கட்டாயம் வருவதாக, கடந்த மாதமே உறுதியளித்துவிட்டாராம் மாயாவதி. ஆனால், முலாயம்தான் கொஞ்சம் முரண்டு பிடித்திருக்கிறார். என்றாலும் எப்படியோ அவரை அகிலேஷ் சமாதானப்படுத்தி அழைத்து வந்துவிட்டார். ஆனால், மேடைக்கு வந்ததும் உற்சாகமாகிவிட்டார் முலாயம். மாயாவதியைப் பார்த்ததும் இன்னும் அதிக உற்சாகம். 

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தின் இரு பெரும் அரசியல் ஆளுமைகள், ஒரு காலகட்டத்தையே தீர்மானித்தவர்கள், எதிரும் புதிருமாக 30 ஆண்டுகளாகக் களத்தில் நின்றவர்கள், ஒரே மேடையில் இணைந்து தோன்றுகிறார்கள். புகைப்படக் கருவிகள் புத்துணர்ச்சி பெறுகின்றன. இருகட்சிகளின் தொண்டர்களுக்கும் இதயத்துடிப்பு எகிறுகிறது. காணக்கிடைக்காத அரிய காட்சி! ‘இது வரலாற்றுத் தருணம்’ என்று மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள் உத்தரப்பிரதேச மக்கள். 

உற்சாக முலாயம்... மாயாவதி மகிழ்ச்சி... 25 ஆண்டுகளுக்குப் பின் நடந்த அதிசயம்!

கிட்டத்தட்ட, 25 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து ஒரே மேடையில் காட்சி தந்திருக்கிறார்கள். ஆம், 25 ஆண்டுகள் என்பது, அரசியலில் மிக நீண்ட காலம்தான். அதுவும் ஒருதலைமுறை கடந்து இன்னொரு தலைமுறையே பதவிக்கு வந்துவிட்டது. இருவரும் என்ன பேசுகிறார்கள், எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை நொடிக்கு நொடி அப்டேட் செய்துகொண்டிருந்தன வட இந்திய ஊடகங்கள். டி.ஆர்.பி ரேட்டிங் எகிறியிருக்கும்!

அதுவும், மாயாவதியை முலாயம் வரவேற்ற விதம் இருக்கிறதே..? ஆச்சர்யம்! முலாயம் பேசிமுடித்துவிட்டு நாற்காலிக்குத் திரும்புகிறார். மாயாவதி எழுந்து வணங்குகிறார். முலாயமும் வணங்கிவிட்டு நாற்காலியில் அமர்கிறார். மாயாவதி அடுத்து பேசுவதற்கு மைக்கை நோக்கிப் போகிறார். அப்போது முலாயம், ‘கைதட்டுங்கள்... அவருக்கு கைதட்டுங்கள்...’ என்று கூட்டத்தை உற்சாகப்படுத்தியதை, காண  கண்கோடி வேண்டும்.

``மாயாவதி இங்கு வந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த காலங்களில் நாம் அவரை அதிகமாகவே கஷ்டப்படுத்தியிருக்கிறோம். இனிமேல், சமாஜ்வாதி கட்சியினர் அவரை மதித்து நடந்துகொள்ள வேண்டும்” என்று, பாசத்தைப் பொழிந்துவிட்டார் முலாயம். பதிலுக்கு மாயாவதியும், ‘உத்தரப்பிரதேச மக்களை ஒன்றுபடுத்தியவர் முலாயம். அவர், பிற்படுத்தப்பட்டவர்களின் உண்மையான தலைவரும்கூட’ என்று பாராட்டித் தள்ளிவிட்டார். 

கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் ஒரே மேடையில் ஒன்றாகக் காண, கடைசிவரை நமக்குக் கொடுத்துவைக்கவில்லை. இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவின்போது, அதற்கான வாய்ப்புகள் இருந்ததாகப் பேசிக்கொண்டார்கள். ஆனால், அது நடக்காமல்போனது. முலாயம் - மாயாவதி சந்திப்பைக் கண்டேனும் ஆறுதல்பட்டுக்கொள்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு