Published:Updated:

`தேர்தல் முடிந்து இந்தச் சீட்டை கொண்டுவந்தால் பணம்!' - பெரம்பூரில் அ.தி.மு.கவின் டோக்கன் சிஸ்டம்

இ.லோகேஷ்வரி
`தேர்தல் முடிந்து இந்தச் சீட்டை கொண்டுவந்தால் பணம்!' - பெரம்பூரில் அ.தி.மு.கவின் டோக்கன் சிஸ்டம்
`தேர்தல் முடிந்து இந்தச் சீட்டை கொண்டுவந்தால் பணம்!' - பெரம்பூரில் அ.தி.மு.கவின் டோக்கன் சிஸ்டம்

பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில், அ.தி.மு.க சார்பில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக டோக்கன் கொடுக்கப்பட்டிருக்கிறது என எதிர்க்கட்சியினர் புகாரளிக்கின்றனர்.

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலுடன், 18 தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடந்தது. வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகச் சொல்லி, வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்துசெய்யப்பட்டது. ஆளும்கட்சி சார்பில் பல தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா நடந்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். இந்நிலையில், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க  சார்பில் ஆர்.எஸ்.ராஜேஷ் போட்டியிட்டார். தேர்தலுக்கு முதல்நாள், வாக்காளர்களுக்கு அ.தி.மு.க சார்பில் வாக்குக் கேட்டு, வேட்பாளர் பெயர், சின்னம் உள்ளிட்ட சீட்டு கொடுக்கப்பட்டது.

அதன்பின்புறம், பகுதி வாரியாக எண் போடப்பட்டிருந்தது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக இதுபோன்ற சீட்டு வழங்கப்பட்டுள்ளது என்று பெரம்பூர் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். தேர்தல் முடிந்ததும், இந்த சீட்டைக் கொண்டுவந்தால் பணம் கொடுக்கப்படும் என்றும் வாக்காளர்களிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். ஆர்.கே.நகர் ஃபார்முலா, டோக்கன் கொடுத்தனர் என்று தினகரன் தரப்பினரைக் கிண்டல் செய்த அ.தி.மு.க-வினரே தற்போது டோக்கன் கொடுத்துவருவதாக அ.ம.மு.க கட்சியினர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அ.தி.மு.க தரப்பில் கேட்டதற்கு, 'அப்படி எதுவும் நம்பர் எழுதிக்கொடுக்கவில்லை' என்று முடித்துக்கொண்டனர்.