Published:Updated:

`என்மனைவி அற்புதமானவள், குழந்தைகள் வியப்பைத் தருபவர்கள்!'- இலங்கையில் குடும்பத்தை இழந்தவர் கண்ணீர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`என்மனைவி அற்புதமானவள், குழந்தைகள் வியப்பைத் தருபவர்கள்!'- இலங்கையில் குடும்பத்தை இழந்தவர் கண்ணீர்
`என்மனைவி அற்புதமானவள், குழந்தைகள் வியப்பைத் தருபவர்கள்!'- இலங்கையில் குடும்பத்தை இழந்தவர் கண்ணீர்

`என்மனைவி அற்புதமானவள், குழந்தைகள் வியப்பைத் தருபவர்கள்!'- இலங்கையில் குடும்பத்தை இழந்தவர் கண்ணீர்

லங்கை நாடு சுற்றுலாவுக்குப் பெயர் போனது. அழகான பசுமை நிறைந்த மலைகள், அருவிகள், யானைகள், கடற்கரைகள், புண்ணிய ஸ்தலங்கள், பௌத்த விகாரங்கள், பெருமைமிக்க இந்து கோயில்கள், பழைமை வாய்ந்த ஆலயங்கள் நிறைந்த நாடு. இயற்கை வளத்தை இந்த நாட்டுக்கு கொட்டிக் கொடுத்த இறைவன், நிம்மதியை மட்டும் கொடுக்க மறந்துவிட்டான் போலும்.  

ராவணன் காலத்திலிருந்து ராணுவ காலம் வரை போர் நடக்கும் மண்ணாக உள்ளது. தற்பேது, குண்டுவெடிப்புகளாலும் துவள ஆரம்பித்துள்ளது. இலங்கையில் எப்போதும் நடந்திராத அளவுக்கு 359 பேர் ஒரே நாளில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டுள்ளனர். அதில், இந்தியர்கள் 10 பேர் பலியாகியிருக்கின்றனர். டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஆன்டர்ஸன் பாவ்ல்ஸன் என்ற தொழிலதிபர் தன் 4 குழந்தைகளில் 3 பேரை இழந்துள்ளார். பல வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் இலங்கையைச் சுற்றிப் பார்க்க வந்த இடத்தில் பிரியமானவர்களை இழந்து தவித்து வருகின்றனர். அந்த வகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த பென் நிக்கல்சன் என்பவரின் கதை தாங்க முடியாத துயரம் நிறைந்தது.

சிங்கப்பூரில் சட்ட நிறுவனம் நடத்தி வரும் நிக்கல்சனுக்கு அனிதா என்ற மனைவியும் 14 வயதில் அலெக்ஸ் என்ற மகனும் 11 வயதில் அன்னாபெல் என்கிற மகளும் உண்டு. அளவான அன்பான நிக்கல்சனின் குடும்பத்தை இலங்கைக் குண்டு வெடிப்பு சிதைத்துப் போட்டுள்ளது. கொழும்புவில் உள்ள ஷாங்கிரி லால் ஹோட்டலில்தான் இவர்கள் தங்கியிருந்தனர். காலை உணவுக்கு ரெஸ்டாரன்டில் நிக்கல்சனின் குடும்பத்தினர் இருந்த போதுதான், மனித வெடிகுண்டு வெடித்தது. அதில், சம்பவ இடத்திலேயே அனிதா, அலெக்ஸ், அன்னாபெல் உடல் சிதறி பலியாகினர். நிக்கல்ஸன் உடலில் ரத்தம் தோய்ந்த உடைகளுடன் தன் குழந்தைகளை தூக்கிக்கொண்டு ஓடிய காட்சி கண்டவர்களின் கண்களில் நீர்த்துளிகளை வரவழைத்துவிட்டது. 

இலங்கையில் பறிகொடுத்த தன் குடும்பத்தினருக்கு நிக்கல்சன் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலியின் போது, `என் மனைவி அற்புதமானவள், குழந்தைகள் வியப்பைத் தருபவர்கள். என் பிள்ளைகளையும் மனைவியையும் வேதனையில்லாமல் உடனே எடுத்துக் கொண்டதற்கு கடவுளுக்கு நன்றி' என்று கண்ணீர் மல்க கூறினார். 

நான்கு பேராய் வந்து தனிமரமாய்ப் போவது எவ்வளவு வேதனை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு