Published:Updated:

``உயிரிழந்த மாணவர்கள் திரும்ப வருவார்களா?!"- நடிகை விஜயசாந்தி ஆவேசம்

``உயிரிழந்த மாணவர்கள் திரும்ப வருவார்களா?!"- நடிகை விஜயசாந்தி ஆவேசம்

``உயிரிழந்த மாணவர்கள் திரும்ப வருவார்களா?!"- நடிகை விஜயசாந்தி ஆவேசம்

``உயிரிழந்த மாணவர்கள் திரும்ப வருவார்களா?!"- நடிகை விஜயசாந்தி ஆவேசம்

``உயிரிழந்த மாணவர்கள் திரும்ப வருவார்களா?!"- நடிகை விஜயசாந்தி ஆவேசம்

Published:Updated:
``உயிரிழந்த மாணவர்கள் திரும்ப வருவார்களா?!"- நடிகை விஜயசாந்தி ஆவேசம்

தெலங்கானா மாநிலத்தில் சமீபத்தில் வெளியான 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடிகளால், ஒரே வாரத்தில் 21 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவ்விவகாரம் அம்மாநிலத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதற்காகச் சமீபத்தில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை விஜயசாந்தியிடம், இவ்விவகாரம் குறித்துப் பேசினோம்.

``தெலங்கானா மாநிலத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை, ஒன்பதே முக்கால் லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியானதில், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். நன்றாகத் தேர்வெழுதியும், ஏராளமான மாணவர்களுக்குக் குறைந்த மதிப்பெண்களே கிடைத்திருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் விரக்தியில் உள்ளனர். மேலும், ஒரே வாரத்தில், 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 11 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வுகளை நடத்த, `குளோபரீனா டெக்னாலஜீஸ்' என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிறுவனத்தின் மீது ஏற்கெனவே பல புகார்கள் உள்ளன. இந்நிலையில் இந்நிறுவனத்திற்கும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அவரின் மகனுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. அதனால் தேர்வு முடிவுகள் வெளியானதில், பல முறைகேடுகள் நடந்துள்ளன. தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடிகளால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகள் உண்டாகியிருக்கிறது. இதனால் இவ்விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். முதல்வர் சந்திரசேகர ராவ் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கையும், விளக்கமும் கொடுக்கவில்லை. எனவே, இவ்விவகாரத்தில் நீதி கேட்டு கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலம் முழுக்கப் போராட்டத்தை நடத்தினோம். வாரங்கல் மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில், நான் கலந்துகொண்டேன். காவல்துறையினர் என்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று ஓர் இடத்தில் வைத்திருந்து, பிறகு வெளியில் விட்டனர். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில் இவ்விவகாரத்தில் உண்மையைக் கண்டறிய, ஒரு குழுவை அமைத்திருக்கிறார், சந்திரசேகர ராவ். ஆனால், உயிரிழந்த மாணவர்கள் திரும்ப வருவார்களா? அவர்கள் குடும்பத்தினரின் வலியைத் தீர்க்க முடியுமா? இவ்விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதுவரை எங்கள் கட்சியினர் ஓயமாட்டோம்" என்று ஆவேசமாகக் கூறுகிறார், விஜயசாந்தி.