Published:Updated:

''எங்கள் நாட்டை விட்டுவிடு!'' - பாக்தாதிக்கு  சிறிசேனா வேண்டுகோள்

''எங்கள் நாட்டை விட்டுவிடு!'' - பாக்தாதிக்கு  சிறிசேனா வேண்டுகோள்
''எங்கள் நாட்டை விட்டுவிடு!'' - பாக்தாதிக்கு  சிறிசேனா வேண்டுகோள்

''எங்கள் நாட்டை விட்டுவிடு!'' - பாக்தாதிக்கு  சிறிசேனா வேண்டுகோள்

லங்கை போன்ற சிறிய நாடுகளை விட்டுவிடு என்று ஐ.எஸ் அமைப்பின் தலைவன் அபுபக்கர் அல் பாக்தாதிக்கு இலங்கை அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

''எங்கள் நாட்டை விட்டுவிடு!'' - பாக்தாதிக்கு  சிறிசேனா வேண்டுகோள்

இலங்கையில் ஆலயங்கள் உட்பட பல இடங்களில் குண்டு வெடித்ததில் 251 பேர் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.  5 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த இந்த இயக்கத்தின் தலைவன் அபு பக்கர் அல் பாக்தாதி , திடீரென்று வீடியோவில் தோன்றி இலங்கைத் தாக்குதல் பாகூஸ் நகரில் தாங்கள் சந்தித்த தோல்விக்குப் பழி வாங்கும் நடவடிக்கைதான் என்று தெரிவித்தான்.

எங்கள் இயக்கத்துக்காக உயிரிழந்தவர்களுக்காகத் தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கை இருக்கும் எனவும் பாக்தாதி கூறியுள்ளான். அதோடு, இந்தியா மற்றும் வங்கதேசத்தில் ஐ.எஸ் இயக்கம் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, மேற்கு வங்கத்தில் ஐ.எஸ் இயக்கத்துக்காகப் புதிய அமீர் ஒருவனை நியமித்துள்ளான் அல் பாக்தாதி. இதனால், மேற்கு வங்கத்தில் வங்கதேசத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சிரியாவில் தோல்வியைத் தழுவியுள்ள ஐ.எஸ் இயக்கத்தினர் தற்போது பாகூஸ் பகுதியில் முடங்கியுள்ளனர். அமெரிக்க ஆதரவு பெற்ற குர்தீஷ் சிரியப்படை பாகூஸ் பகுதியைப் பிடித்துவிட்டது. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பாக்தாதி, 'கடவுள் எங்களுக்கு ஜிகாத்துக்கு கூலி தருவதாக மட்டுமே கூறியுள்ளான். வெற்றி பெற கூறவில்லை' என்று தெரிவித்துள்ளான்.

''எங்கள் நாட்டை விட்டுவிடு!'' - பாக்தாதிக்கு  சிறிசேனா வேண்டுகோள்

இந்நிலையில், ஸ்கை செய்தி சேனலுக்குப் பேட்டியளித்த இலங்கை அதிபர் சிறிசேனா, 'ஐ.எஸ் இயக்கம் தன் தாக்குதல் வியூகங்களை மாற்றியுள்ளது. இலங்கை போன்ற சிறிய நாடுகளைக் குறி வைத்துள்ளது. இலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஐ.எஸ் இயக்கம் பயிற்சி அளித்துள்ளது. எங்கள் நாட்டை விட்டுவிடு'  என்று பாக்தாதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, 'எந்த நாட்டிலும் எந்த நேரத்திலும் எந்த நகரங்களையும் தங்களால் தாக்க முடியுமென்று ஐ.எஸ் இயக்கம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் வேற்றுமைகளை மறந்துவிட்டு, இது போன்ற இயக்கங்களை வேரறுக்க இணைய வேண்டும். அனைத்து நாடுகளுமே பாதுகாப்பு விஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு