Election bannerElection banner
Published:Updated:

`அவர் முதலமைச்சராக இருந்திருப்பார்..! - ஆவணப்படமாகும் நல்லகண்ணு வாழ்க்கை வரலாறு

`அவர் முதலமைச்சராக இருந்திருப்பார்..! - ஆவணப்படமாகும் நல்லகண்ணு வாழ்க்கை வரலாறு
`அவர் முதலமைச்சராக இருந்திருப்பார்..! - ஆவணப்படமாகும் நல்லகண்ணு வாழ்க்கை வரலாறு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான தோழர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று உருவாகிவருகிறது.

`அவர் முதலமைச்சராக இருந்திருப்பார்..! - ஆவணப்படமாகும் நல்லகண்ணு வாழ்க்கை வரலாறு

`ருவேளை தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்திருந்தால், நல்லகண்ணு முதலமைச்சராக இருந்திருப்பார். அது ஒரு பொற்காலமாக இருந்திருக்கும்.”

“இன்னைக்கி இந்த சுத்துவட்டாரமே சாப்பிடுதுன்னு சொன்னா... அது அவராலதான்.” 

“எங்க ஊரையே காப்பாத்துன கடவுள்னுதான் அவரைச் சொல்லணும்.”

“எங்க ஊரையே அவர்தான் காப்பாத்துனாரு. அதை நாங்க சாகுற வரைக்கும் மறக்க மாட்டோம்.”  இப்படியாக, நெகிழ்ச்சியுடன் பேசுகிறார்கள், திருநெல்வேலி - தூத்துக்குடி வட்டாரங்களைச் சேர்ந்த வயதில் மூத்தவர்கள் பலரும். 

சுதந்திரப் போராட்ட வீரரும் மூத்த அரசியல் தலைவருமான தோழர் நல்லகண்னுவின் வாழ்க்கை வரலாறு, ஆவணப்படமாக எடுக்கப்பட்டுவருகிறது. இயக்குநர் சமுத்திரக்கனியின் தயாரிப்பில் எடுக்கப்பட்டுவரும் இந்த ஆவணப்படத்தை சேலம் சண்முகவேலு இயக்குகிறார். இந்தப் படத்தின் குழுவினர், கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் பயணம்செய்து, நல்லகண்ணு பற்றிய அரிய பல தகவல்களைச் சேகரித்து, நல்லகண்ணு முன்னெடுத்த போராட்டங்களில் நேரடியாகப் பங்கேற்ற மனிதர்களைச் சந்தித்தும் இந்த ஆவணப் படத்தைத் தயாரித்துவருகின்றனர். 

இந்தப் படத்தின் டீஸர், உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதி வெளியிடப்பட்டது. ``மனிதனுக்கு மனிதனே எதிரியாகி, பெரும்பான்மை மனிதர்கள்மீது நடத்தப்படும் அமைதியான போரே, சுரண்டல். ஒடுக்குமுறை, வறுமை, சாதியக் கொடுமைகள் ஆகியவை இனிவரும் தலைமுறைக்கு இருக்கக் கூடாது என்பதற்காக, உலகமெங்கும் பொதுவுடமைப் புரட்சித் தத்துவம் உருவானது. மனித சமத்துவத்துக்கான தீரமிக்க போராட்டங்களை மிகச் சரியான முன்னெடுப்பாக இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளும் உருவானார்கள். 


தன் இளம் வயதிலேயே பொதுவுடமைத் தத்துவத்தைக் கரம்பற்றி, அடித்தட்டு மக்களின்  உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டத்தில் பல்வேறு அரசு அடக்குமுறைகளுக்கு ஆளாகி, மனிதர்கள் அனைவரும் சரிநிகர் சமமாய், கிடைப்பது யாவும் யாவருக்கும் கிடைத்து வாழ வேண்டுமென, 95 வயதிலும் உழைப்புச் சுரண்டலை எதிர்த்தும், உழைப்புக்கு உரிய ஊதியம் கிடைத்திடவும் போராடிவரும் அரசியல் நேர்மையாளரைப் பற்றி ஓர் ஆய்வுப்பயணம்” என்று இயக்குநர் சமுத்திரக்கனியின் குரல் டீஸரில் ஒலிக்கிறது.
அழகான ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரனின் சிலிர்ப்பூட்டும் இசையும் ஒளிர்கின்றன. தொழில்நுட்பம் உட்பட அனைத்து அம்சங்களிலும் இது ஒரு தரமான ஆவணப்படமாக  வரும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. 

“பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டன. விடுபட்டிருந்த சில நேர்காணல்களுக்கான வேலைகளும் நடந்துவருகின்றன. எடிட்டிங் வேலையும் நடந்துவருகிறது. இன்னும் இரு மாதங்களில் படம் தயாராகிவிடும்” என்கிறார் இயக்குநர் சண்முகவேலு.

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு