Published:Updated:

`சிரமமான வேலைதான், அதனால்தான் லீவ் கொடுத்திருக்கேன்!'- பெண் காவலர்களைக் குஷிப்படுத்திய எஸ்.பி

`ஒரு பெண்ணால் குடும்பத்தையும் கவனிச்சுக்கிட்டு, வேலையும் பார்க்குறது சிரமம். அதுவும் போலீஸ் வேலைன்னா ரொம்ப சிரமம். அதனால் அவங்களுக்கு வாரம் ஒரு நாள் லீவ் கொடுக்க ஆர்டர் போட்டிருக்கிறேன்’ என அசத்துகிறார் ஈரோடு எஸ்.பி சக்தி கணேசன்.

ஈரோடு மாவட்ட காவல் துறையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (1), துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் (2), ஆய்வாளர்கள் (8), உதவி ஆய்வாளர்கள் (18), காவலர்கள் (282) என மொத்தம் 311 பெண் போலீஸார் இருக்கின்றனர். மாவட்டத்தில் பணிபுரியும் பெண் போலீஸார் அவர்களுடைய குடும்பத்தைக் கவனிக்கவும், அவர்களுடைய உடல்நலத்தைக் காத்து மகிழ்ச்சியாக பணிபுரியவும் உதவி ஆய்வாளர்கள் முதல் இரண்டாம் நிலை காவலர்கள் என மொத்தமுள்ள 300 பேருக்கும் வாரம் ஒரு நாள் எனச் சுழற்சி முறையில்  விடுமுறை கொடுக்க, ஈரோடு எஸ்.பி சக்தி கணேசன் உத்தரவிட்டிருக்கிறார். வருகின்ற மே 26-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முதல் இத்திட்டம் அமல்படுத்தப்படவிருக்கிறது.

`சிரமமான வேலைதான், அதனால்தான் லீவ் கொடுத்திருக்கேன்!'- பெண் காவலர்களைக் குஷிப்படுத்திய எஸ்.பி

இதுகுறித்து ஈரோடு எஸ்.பி சக்தி கணேசன் கூறுகையில், ``ஒரு பெண் போலீஸால் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, போலீஸ் வேலையும் பார்ப்பது சிரமம். அவர்களுக்கென ஒரு குடும்பம் மற்றும் குழந்தைகள் இருக்கின்றன. அவர்கள் குழந்தைகளுடனும், குடும்பத்தினருடனும் நேரத்தைச் செலவிட்டு மன மகிழ்ச்சியாக இருந்தால்தான் அவர்களால் வேலையில் சிறப்பாக பணியாற்ற இயலும். அதனால்தான் பெண் போலீஸாருக்கு வாரம் ஒருநாள் விடுமுறை கொடுக்கலாம் என சில நாள்களாக யோசனையில் இருந்தேன். தேர்தல் நேரத்தால் இத்திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை. வருகின்ற 26-ம் தேதியிலிருந்து பெண் போலீஸார் வாரம் ஒருநாள் சுழற்சி முறையில் லீவ் எடுத்துக்கொள்ளலாம். இதனால் ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 40 பெண் போலீஸார் வரை விடுமுறையில் இருப்பார்கள். பக்கத்து மாவட்டங்களுக்கு அவர்களைப் பாதுகாப்பு பணிக்காக அனுப்பியதாக நினைத்துக்கொள்ள வேண்டியது தான்” என கூலாக கண் சிமிட்டுகிறார்.

ஈரோடு எஸ்.பியின் இத்தகைய யோசனையால் பெண் போலீஸார் குஷியில் இருக்கின்றனர். அதே நேரத்தில், `நாங்களும் போலீஸ் தானே, எங்களுக்கும் குடும்பம் இருக்குல்ல’ என ஆண் போலீஸார் சோக முகம் காட்டுகின்றனர். இதற்கிடையே, `எஸ்.பிக்கு சமீபத்துல தானே கல்யாணம் ஆச்சு. அதுக்குள்ள பெண்கள் மீது காட்டுற கரிசனத்தைப் பாரேன்’ என ஒருசிலர் கிச்சுகிச்சு மூட்டுகின்றனர்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு