Published:Updated:

` சிக்கல் சபாநாயகருக்குத்தான்... 3 பேருக்கு அல்ல!'  - தினகரனின் `120' ஆதாரங்கள்

வழக்கு நிலுவையில் இருக்கும்போது அவர்கள் தனி அணியாகத் தொடரலாம். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் மார்ச் 15-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. ` இந்த 15-ம் தேதிக்குப் பிறகு இந்த 3 பேரும் தினகரனுடன் இருந்தார்களா?' எனப் பார்க்க வேண்டும்.

` சிக்கல் சபாநாயகருக்குத்தான்... 3 பேருக்கு அல்ல!'  - தினகரனின் `120' ஆதாரங்கள்
` சிக்கல் சபாநாயகருக்குத்தான்... 3 பேருக்கு அல்ல!'  - தினகரனின் `120' ஆதாரங்கள்

சிகலா ஆதரவு 3 எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது தி.மு.க. ` சபாநாயகரால் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதற்கு உதாரணமாகப் பல்வேறு வழக்குகள் இருக்கின்றன. இதில் சிக்கலைச் சந்திக்கப் போவது சபாநாயகர் தனபால்தான்' என்கின்றனர் அ.ம.மு.க வட்டாரத்தில். 

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வருவதாகக் கூறி, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார் சபாநாயகர் தனபால். இந்த நோட்டீஸுக்கு 7 நாள்களில் விளக்கம் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். சுமார் 185 பக்கங்கள் நிரம்பிய அந்த நோட்டீஸில் 5 பக்கங்களில் தினகரனுடன் 3 எம்.எல்.ஏ-க்கள் இருக்கும் படங்கள் இடம் பெற்றுள்ளன. ` சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதால், 3 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்க வேண்டும். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்' எனத் தலைமை நீதிபதி அமர்வில் தி.மு.க தரப்பில் முறையிடப்பட்டது. இதைத் திங்கள்கிழமை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 

` சிக்கல் சபாநாயகருக்குத்தான்... 3 பேருக்கு அல்ல!'  - தினகரனின் `120' ஆதாரங்கள்

3 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தி.மு.க-வுக்கு ஏன் கோபம் வருகிறது. இதிலிருந்தே அவர்கள் இருவருக்கும் உள்ள நெருக்கத்தை அறிந்துகொள்ளலாம் என எடப்பாடியும், ` காலந்தாழ்த்தி நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வருகிறது தி.மு.க. இதனால் எந்தவிதப் பயனும் இல்லை' எனத் தினகரனும் விமர்சனம் செய்திருந்தனர். ` உண்மையில் இந்த வழக்கின் போக்கு எப்படியிருக்கும்?' என அ.ம.மு.க-வின் முன்னணி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். 

`` மூன்று எம்.எல்.ஏ-க்களின் பதவிக்குச் சட்டப் பாதுகாப்பு இருந்தாலும் அதையும் மீறிப் பதவியைப் பறிக்கவே சபாநாயகர் விரும்புவார். நேற்று முன்தினம் அவர் அனுப்பிய நோட்டீஸில் தினகரனுடன் இவர்கள் இருக்கும் புகைப்படங்களை இணைத்து அனுப்பியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் எல்லாம் ஏப்ரல் 19-ம் தேதிக்கு முன்பு எடுக்கப்பட்டவை. அதற்குப் பிறகான நாள்களில் டி.டி.வி-யுடன் இந்த 3 பேரும் இல்லை. அ.ம.மு.க தலைமைக் கழகத்தில் தனிக்கட்சியாகத் தொடங்குவது குறித்த அறிவிப்பைக் கடந்த மாதம் வெளியிட்டார் தினகரன். பிறகு 22-ம் தேதி தேர்தல் ஆணையத்தில் கட்சியாகப் பதிவு செய்தார். அப்படிப் பதிவு செய்த நிகழ்விலும் இந்த 3 பேரின் பெயர்கள் இல்லை. அ.தி.மு.க சின்னம் ப்ளஸ் இரட்டை இலை தொடர்பாக 2017 நவம்பர் மாதம் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசிகலாவும் தினகரனும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நடந்துகொண்டிருந்த நேரத்தில் திருவாரூருக்கு இடைத்தேர்தல் வருவதாக இருந்தது. உள்ளாட்சித் தேர்தலும் நடத்தப்படுவதற்கான சூழல் இருந்தது. 

` சிக்கல் சபாநாயகருக்குத்தான்... 3 பேருக்கு அல்ல!'  - தினகரனின் `120' ஆதாரங்கள்

இதையொட்டி, ` நாங்கள் தேர்தலைச் சந்திக்கும் வகையில் எங்களுக்கு ஒரு பெயர் வேண்டும்; சின்னம் வேண்டும். இடைக்கால ஏற்பாடாக அ.ம.மு.க-வைத் தொடங்கிக் கொள்கிறோம்' என நீதிமன்றத்தில் தெரிவித்தனர் சசிகலா தரப்பினர். இந்த வழக்கில் உத்தரவிட்ட நீதிபதி ரேகா பள்ளி, ` அ.ம.மு.க பெயரில் செயல்படலாம். அவர்கள் கேட்கும் குக்கர் சின்னத்தை 3 வாரத்துக்குள் அளிக்கலாம்' என ஆணையத்துக்கு உத்தரவு போட்டார். இதற்குப் பதில் அளித்த ஆணையம், ` பெயரில் பிரச்னையில்லை. சின்னத்தையும் கொடுத்துவிடுகிறோம்' எனக் கூறியது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்ட ஓ.பி.எஸ், ` உள்ளாட்சித் தேர்தல் இப்போது வரவில்லை. தேர்தலே வராதபோது எதற்குச் சின்னம்?' எனக் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, ரேகா பள்ளி கொடுத்த உத்தரவை நிறுத்தி வைத்தனர் நீதியரசர்கள்" என விவரித்தவர்கள்,  

`` பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் உத்தரவிட்ட நீதியரசர்கள், ` இப்போது உத்தரவை நிறுத்தி வைக்கிறோம். தேர்தல் வரும்போது எங்களிடம் வாருங்கள்' எனத் தெரிவித்தனர். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்தது. அப்போது திருவாரூர் தேர்தல் தேதி நெருங்கியதால், `குக்கர் சின்னம் கொடுங்கள்' எனத் தினகரன் தரப்பில் முறையிட்டனர். இதை நீதிபதி கன்வில்கர் உட்படப் 2 பேர் விசாரித்தனர். இந்த வழக்கின் வாதத்தின்போது, `அங்கீகரிக்கப்பட்ட கட்சி இரண்டாக உடைகிறபோது அது தொடர்பான வழக்கு இறுதி வடிவத்துக்கு வருகிற வரையில் இரண்டு கட்சிகளுமே அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள்தான். இரண்டு பேருக்கும் பொதுவான சின்னம் பெற உரிமையிருக்கிறது' எனத் தெரிவித்தனர். அந்த வழக்கில் 18 எம்.எல்.ஏ-க்களோடு சேர்த்து இந்த 3 எம்.எல்.ஏ-க்களின் பெயரும் இருக்கிறது. தனி அணியாக இயங்குவதற்கு நீதியரசர்கள் அங்கீகாரம் கொடுத்தனர். இதன்பின்னர், சசிகலா பொதுச் செயலாளராக இருக்கின்ற அணியில் இவர்கள் தொடர்ந்தனர். `அ.ம.மு.க தனியாக இயங்கலாம்' என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. 

` சிக்கல் சபாநாயகருக்குத்தான்... 3 பேருக்கு அல்ல!'  - தினகரனின் `120' ஆதாரங்கள்

இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால், அ.ம.மு.க என்ற பெயரில் தனி அணியாகத் தொடர்ந்து செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர் தினகரன் தரப்பினர். முறையீடு செய்வதன் மூலம் கன்வில்கர் கொடுத்த தீர்ப்பு நீடிக்கிறது என்று அர்த்தம். வழக்கு நிலுவையில் இருக்கும் வரையில் கள்ளக்குறிச்சி பிரபு, ரத்தின சபாபதி, கலைச்செல்வன் ஆகியோருக்கு சட்டரீதியான பாதுகாப்பை கன்வில்கர் கொடுத்துவிட்டார். வழக்கு நிலுவையில் இருக்கும்போது அவர்கள் தனி அணியாகத் தொடரலாம். இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் மார்ச் 15-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. `இந்த 15-ம் தேதிக்குப் பிறகு இந்த 3 பேரும் தினகரனுடன் இருந்தார்களா?' எனப் பார்க்க வேண்டும். அப்படி எந்தப் புகைப்படங்களும் இல்லை. 

வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, சீராய்வு மனு போட்டிருக்கிறார் சசிகலா. இப்போதும் வழக்கு நிலுவையில் இருப்பதால் கன்வில்கர் கொடுத்த தீர்ப்பும் நீடிக்கிறது. இப்போதும் சசிகலா தலைமையிலான அணியில் இந்த 3 பேர் மட்டுமல்ல, எடப்பாடி பக்கம் இருந்து பத்து எம்.எல்.ஏ-க்கள் வந்தாலும் அவர்களுடைய பதவியைப் பறிக்க முடியாது எனத் தீர்ப்பு சொல்கிறது. உடைந்த அணியில் இவர்கள் ஓர் அங்கம். தனிக்கட்சியான அ.ம.மு.க-வில் சசிகலா உறுப்பினராக இல்லை. அப்படி இருந்திருந்தால் அவரால் அப்பீலுக்குச் சென்றிருக்க முடியாது. ஏப்ரல் 19 அன்று அ.ம.மு.க-வைக் கட்சியாக அறிவித்தபோது அதற்கான உறுப்பினர் படிவத்தில் 120 பேர் அதில் கையொப்பம் இட்டனர். அந்த 120 பேரில் இந்த 3 எம்.எல்.ஏ-க்களின் பெயர் இல்லை. இவர்கள் தினகரன் ஆட்கள் என்பதை அதிகாரபூர்வமாக்க நிரூபிக்க முடியாது. தேர்தல் பிரசாரத்தில் தினகரனுடன் இருந்ததற்குக் காரணம், நாங்கள் தனி அணியாகச் செயல்பட்டதால் பிரசாரம் செய்தோம் என விளக்கம் கொடுக்க உள்ளனர். 

` சிக்கல் சபாநாயகருக்குத்தான்... 3 பேருக்கு அல்ல!'  - தினகரனின் `120' ஆதாரங்கள்

இந்த விளக்கத்தைச் சபாநாயகரிடம் கொடுத்தாலும், இவர்களை நீக்கலாம். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குச் செல்வதால் தடை கொடுப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அருணாசல பிரதேச வழக்கில், `உங்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிலுவையில் இருக்கும்போது, அந்தத் தீர்மானத்தில் வாக்களிக்க இருக்கும் நபர்களை நீக்க முடியாது' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, சபாநாயகரால் இப்போது செயல்பட முடியாது. 1973-ம் ஆண்டு கே.ஏ.மதியழகன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை அளித்தது. அதில், ` சட்டசபைச் செயலரிடம் எப்போது மனு கொடுத்தார்களோ, அந்த நிமிடத்தில் இருந்து அரசியமைப்புச் சட்டப்படி சபாநாயகர் ஆப்சென்ட்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி நடவடிக்கை எடுத்தால் அது சபாநாயகருக்குத்தான் சிக்கலை ஏற்படுத்தும். தேர்தல் முடிந்த பிறகு வாக்கெடுப்புக்கு உத்தரவிட்ட பிறகு, அந்த 3 பேர் பதவியையும் பறித்திருந்தால் எந்தச் சிக்கலும் இல்லை. அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை. இவ்வளவு சட்டப் பாதுகாப்பு இருப்பதால்தான் அந்த 3 பேரும் தைரியமாக இருக்கின்றனர். சபாநாயகரின் நோட்டீஸுக்குத் தடை விதிக்குமாறு நீதிபதி கன்வில்கரிடமே இவர்கள் முறையிடுவதற்கும் வாய்ப்பிருக்கிறது" என்றவர்கள் இறுதியாக,  

`` 22 தொகுதிகளுக்கான தேர்தல் 10 சீட்டுகளை எடப்பாடி ஜெயித்துவிட்டால், இந்த 3 பேர் மீதான நடவடிக்கையைக் கைவிட்டுவிடுவார். பெரும்பான்மைக்கு 2,3 இடங்கள் தேவைப்படுகிறது என்றால், இவர்களைப் பதவியிலிருந்து நீக்கிவிடுவார்கள். ஓர் இடத்தில்கூட வெற்றி பெறவில்லையென்றாலும் வேறு மாதிரி முடிவெடுக்கலாம். எப்படிப் பார்த்தாலும் மே 23 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே அனைத்தும் முடிவுக்கு வரும்" என்கின்றனர் அமைதியாக.

Vikatan