Published:Updated:

`தினகரனும் பேசவில்லை; நானும் சொல்லவில்லை!' - சபாநாயகரை நம்பும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு

அவர்கள் பார்வையில் அது சரியானது. அவர்களது செயல்பாடுகளைச் சரி... தவறு எனச் சொல்ல வரவில்லை. சபாநாயகரைச் சந்தித்து விளக்கம் கொடுப்பது என்னுடைய முடிவாக இருந்தது.

`தினகரனும் பேசவில்லை; நானும் சொல்லவில்லை!' - சபாநாயகரை நம்பும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு
`தினகரனும் பேசவில்லை; நானும் சொல்லவில்லை!' - சபாநாயகரை நம்பும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு

சிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதற்குத் தடை விதித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். `தினகரன் கட்சியில் நாங்கள் இல்லை என்பதற்கான விளக்கத்தைத் தர இருக்கிறேன். உச்ச நீதிமன்றத்துக்கு நான் செல்லாமல் இருந்ததற்கு சில காரணங்கள் இருக்கின்றன' என்கிறார் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு. 

கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் மீது சபாநாயகரிடம் மனு கொடுத்திருந்தார் கொறடா ராஜேந்திரன். இந்த மனுவின் அடிப்படையில், எம்.எல்.ஏ-க்கள் கலைச்செல்வன், ரத்தின சபாபதி, பிரபு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார் சபாநாயகர் தனபால். இந்த நோட்டீஸ் நடவடிக்கைக்குத் தடை விதிக்கக் கோரி ரத்தின சபாபதியும் கலைச்செல்வனும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வு முன்பு நடந்த விசாரணையில், சபாநாயகரின் நோட்டீஸுக்குத் தடை விதித்தனர். இந்த உத்தரவை வரவேற்ற எம்.எல்.ஏ-க்கள் இருவரும், `நீதியும் தர்மமும் வென்றுள்ளது. இந்த ஆட்சி தொடர வேண்டும் எனப் பாடுபட்ட எங்களுக்குச் சபாநாயகர் கொடுத்த பரிசு இது' எனவும் பேட்டி கொடுத்தனர். 

`தினகரனும் பேசவில்லை; நானும் சொல்லவில்லை!' - சபாநாயகரை நம்பும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு

`` உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?'' எனக் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவிடம் பேசினோம். 

``சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். மிகவும் நியாயமான தீர்ப்பு இது."

``ரத்தின சபாபதியும் கலைச்செல்வனும் நீதிமன்றம் சென்றனர். நீங்கள் செல்லாதது ஏன்?'' 

`` நேரிடையாக சபாநாயகரை சந்தித்து விளக்கம் கொடுக்கலாம் எனத் திட்டமிட்டிருந்தேன். இன்று அல்லது நாளைக் காலை விளக்கம் கொடுக்க இருக்கிறேன். அதனால் நீதிமன்றம் செல்ல வேண்டாம் என நினைத்தேன்." 

``அப்படியானால், அவர்கள் இருவரும் நீதிமன்றத்துக்குச் சென்றது சரியானதா?''

``அவர்கள் பார்வையில் அது சரியானது. அவர்களது செயல்பாடுகளை சரி, தவறு எனச் சொல்ல வரவில்லை. சபாநாயகரைச் சந்தித்து விளக்கம் கொடுப்பது என்னுடைய முடிவாக இருந்தது. உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தாலும் சபாநாயகரிடம் என்னுடைய விளக்கத்தைக் கொடுப்பேன். என்ன இருந்தாலும் அவர் ஒரு சபாநாயகர். தமிழ்நாடு சட்டசபையின் தலைவர். அவரை நேரில் சந்தித்துப் பதில் கொடுப்பேன்." 

`தினகரனும் பேசவில்லை; நானும் சொல்லவில்லை!' - சபாநாயகரை நம்பும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு

``சரி... என்ன விளக்கம் கொடுக்கப்போகிறீர்கள்?'' 

``நோட்டீஸில் என்ன கேட்கப்பட்டுள்ளதோ அதற்கு உரிய விளக்கத்தை அளிப்பேன். அ.ம.மு.க-வைத் தனிக்கட்சியாகத் தினகரன் பதிவு செய்த பிறகு, அந்தக் கட்சியின் நடவடிக்கைகளில் நாங்கள் பங்கெடுக்கவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தற்காலிக ஏற்பாடாக அ.தி.மு.க-வின் ஓர் அணியாக சசிகலா தலைமையில் செயல்பட்டு வந்தோம். அ.தி.மு.க-வுக்கு நல்ல தலைமை வேண்டும் என்பதற்காகத்தான் போராடிக்கொண்டிருக்கிறோம். சசிகலாதான் வழிநடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். அ.ம.மு.க என்ற கட்சியில் நான் உறுப்பினராகவும் இல்லை. எந்தப் பொறுப்பிலும் இல்லை. சசிகலா தலைமையிலான அணியில் நாங்கள் இயங்கிக் கொண்டு வருகிறோம். இந்த ஆட்சிக்கு எதிராக நாங்கள் செயல்பட்டது கிடையாது. கட்சியின் தலைமை மாற வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவும் நடந்தது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை ஏற்படுத்திக்கொடுத்தவர் அம்மா. அவருக்குப் பிறகு, இந்த ஆட்சியைக் காப்பாற்றிய சசிகலாவின் வழிகாட்டுதலின்படி இயங்கிக்கொண்டு வருகிறோம். இந்த ஆட்சிக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய விஷயங்களைச் செய்ய மாட்டோம்." 

`தினகரனும் பேசவில்லை; நானும் சொல்லவில்லை!' - சபாநாயகரை நம்பும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு

`தினகரன் தரப்பிலிருந்து சட்டரீதியான உதவிகள் கிடைத்ததா?'' 

``அவர் ஒரு கட்சியின் தலைவர். அவரும் என்னிடம் பேசவில்லை. நானும் அவரிடம் பேசவில்லை. சின்னம்மா ஆலோசனையின்படி, வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம்." 

`சி.வி.சண்முகம் மூலமாக உங்களிடம் சமாதானம் பேசிக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியானதே?'' 

``இது மிகவும் அவதூறான கருத்து. நடக்காத ஒரு விஷயத்தை நடந்ததாகக் கற்பனையாக இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர். சி.வி.சண்முகம் என்னைத் தொடர்புகொண்டு பேசியதில்லை. அவரோடு எனக்குத் தொடர்பே கிடையாது. என்னுடைய பெற்றோரை சந்தித்துப் பேசியதாக வெளியான தகவல்கள் பொய்யானவை." 

Vikatan