Published:Updated:

முதல்வரின் உறவினர் ராஜினாமா ஏன்? துறைமுக டாக்டர் மன்மத தூண்டில்! யார்கிட்டயும் சொல்லாதீங்க

முதல்வரின் உறவினர் ராஜினாமா ஏன்? துறைமுக டாக்டர் மன்மத தூண்டில்! யார்கிட்டயும் சொல்லாதீங்க
முதல்வரின் உறவினர் ராஜினாமா ஏன்? துறைமுக டாக்டர் மன்மத தூண்டில்! யார்கிட்டயும் சொல்லாதீங்க

சில முக்கிய அரசியல் நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு தந்துள்ளோம்.

சேலம் புறநகரில் உள்ள கருப்பூர் இன்ஜினீயரிங் கல்லூரியில் சில நாடாளுமன்றத் தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவுகளின் எந்திரங்களைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஏப்ரல் 30-ம் தேதியன்று இரவு கனமழை பெய்தது. வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள ஸ்ட்ராங் ரூமிற்கு வெளியே வராண்டாவில் மழை தண்ணீர் பெருகிவிட்டது. `எந்த நிமிடமும் உள்ளே தண்ணீர் போய்விடுமோ?' என்று அந்தக் கல்லூரியில் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் பதறிப்போய் விட்டனர்.

முதல்வரின் உறவினர் ராஜினாமா ஏன்? துறைமுக டாக்டர் மன்மத தூண்டில்! யார்கிட்டயும் சொல்லாதீங்க

நல்லவேளை ஸ்ட்ராங் ரூமிற்குள் மழைநீர் போகவில்லை. `தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்துவது போலீஸாரா, மாநகராட்சியா, வருவாய்த்துறையா?' என்று மே 1-ம் தேதியன்று பட்டிமன்றமே நடந்தது. போலீஸார் கைவிரிக்கவே, மற்ற துறையினர் இணைந்து தண்ணீரை அப்புறப்படுத்துவதில் இறங்கினார்களாம்.

* த்திய அரசின் ரெய்டு ஏஜென்ஸிகளான சி.பி.ஐ., வருமானவரித்துறை, அமலாக்கப்பிரிவு வரிசையில் தற்போது புதிதாக ஜி.எஸ்.டி. பிரிவும் சேர்ந்துள்ளது. முக்கிய பிசினஸ் பிரமுகர்கள் ஜி.எஸ்.டி. வரிகட்டாமல் ஏய்ப்பது தெரியவந்தால், அதை மோப்பம்பிடித்து ரெய்டு நடத்துகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் பிரபல தொழில் நிறுவனத்திலும், சென்னை சௌகார்பேட்டையில் உள்ள சில நகைக்கடைகளிலும் அண்மையில் அதிரடி ரெய்டு நடத்தினர். சென்னை கிரீம்ஸ் ரோட்டில் ஜி.எஸ்.டி. பிரிவு படுசுறுசுறுப்பாக இயங்குகிறது. இதன் உளவுப்பிரிவுக்கு யாராவது வரிஏய்ப்பு பற்றித் தகவல் தெரிவித்தால், உடனடியாக ரெய்டுக்குச் செல்லக் காத்திருக்கிறார்கள்.  

முதல்வரின் உறவினர் ராஜினாமா ஏன்? துறைமுக டாக்டர் மன்மத தூண்டில்! யார்கிட்டயும் சொல்லாதீங்க

* பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை சி.பி.ஐ. கையில் எடுத்துவிட்டது. அவர்களின் முதல் கேள்வி, ``தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பெயரில் வெளியான அரசு ஆணையில் எப்படிப் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் விவரங்கள் வெளிப்படையாக இடம்பெற்றது?", ``ஆணையை அவர் உன்னிப்பாகப் படிக்கவில்லையா அல்லது பாதிக்கப்பட்ட வேறு எந்தப்பெண்ணும் புதிதாகப் போலீஸில் புகார் செய்ய வரக்கூடாது என மறைமுகமாக மிரட்டல் விடுக்கும் வகையில் செயல்பட்டாரா?" என்பதுதானாம்! கோவை மாவட்ட எஸ்.பி-யான பாண்டியராஜன்தான் காரணம் என்று போலீஸ்தரப்பில் சொல்லப்பட்டதாம். இதை சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டார்களாம்.

எந்த விவகாரமானாலும், மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகள், நடந்ததைப் பல பக்கங்களுக்கு எழுதி, அதை புரொபோஸல் என்கிற பேனரில் உள்துறைக்கு அனுப்புவார்கள். அதை அடிப்படையாக வைத்துதான் அரசு ஆணையை உள்துறை அதிகாரிகள் ரெடி செய்வார்களாம். ``எது அவசியம்...எது தேவையில்லாதது?" என்கிற பாயின்டுகளை இந்த அதிகாரிகள்தான் முடிவு செய்வது வழக்கம். பொள்ளாச்சி விவகாரத்தில் உள்துறையினர்தான் கோட்டை விட்டிருக்கிறார்கள். இவர்கள் தெரியாமல்விட வாய்ப்பில்லை. ``இதையெல்லாம் ஏன் உள்துறைச் செயலாளர் கவனிக்கவில்லை?" என்பது சி.பி.ஐ-யின் கேள்வி.  

முதல்வரின் உறவினர் ராஜினாமா ஏன்? துறைமுக டாக்டர் மன்மத தூண்டில்! யார்கிட்டயும் சொல்லாதீங்க

* தமிழகத்தில் பதிவாகும் குற்றப் புலன் விசாரணையின் தரத்தை மேம்படுத்த முன்னாள் டி.ஜி.பி. ஆர்.நட்ராஜ் மற்றும் சிலரை உள்ளடக்கிய குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது. இதுதொடர்பாக, போலீஸுக்கும் நீதித்துறையினருக்கும் பனிப்போர் தொடங்கிவிட்டது. இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ``கமிட்டி அமைக்க, தமிழக அரசுக்குச் சிபாரிசு செய்திருக்கலாம். அதில் யாரை நியமிக்கவேண்டும் என்பதை போலீஸ் தலைமையின் முடிவுக்கே விட்டிருக்கலாம். ஆனால், நீதிமன்றம் சார்பில் அந்த கமிட்டியின் பெயர்களும் வெளியானது. முன்னாள் டி.ஜி.பி-யான ஆர்.நடராஜ், தற்போது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. போலீஸ் பணியிலிருந்து ஓய்வுபெற்று, அவர் முழுநேர அரசியல்வாதியாகிவிட்டார். அவரும் கமிட்டியின் உறுப்பினர். இவரைவிட புலன்விசாரணையில் சாதனை படைத்த எத்தனையோ பேர் இருக்கிறார்கள். கமிட்டி உறுப்பினர் நியமின விஷயத்தை போலீஸ் மேலிடத்திடம் ஒப்படைத்திருந்தால், சிறப்பாக இருந்திருக்கும். இதுபோல, போலீஸ் நிர்வாகத்தில் நீதிமன்றம் அடிக்கடி தலையிடுகிறது. இதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்கிறார். இந்தக் கருத்தை போலீஸ் உயர் அதிகாரிகள் பலர், போலீஸ் துறைக்கான அமைச்சர் என்கிற வகையில் முதல்வர் எடப்பாடியிடம் முறையிட்டிருக்கிறார்கள்.

முதல்வரின் உறவினர் ராஜினாமா ஏன்? துறைமுக டாக்டர் மன்மத தூண்டில்! யார்கிட்டயும் சொல்லாதீங்க

* முதல்வரின் செக்போஸ்ட் என்று வர்ணிக்கப்பட்டவர் எழில். தேர்தல் அறிவிப்புக்கு முன்பு, திடீரென தனது செய்தித்துறை கூடுதல் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார். இவர் முதல்வர் எடப்பாடியின் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். சகல அதிகாரங்களுடன் தலைமைச் செயலகத்தில் வலம் வந்தவர். இவர் ரிட்டயர்டு ஆனவர். தொடர்ந்து அதே பதவியில் பணிநீடிப்பு பெற்று வந்தார். ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று அதிகாரிகள் குழம்பினர். வேறு ஒன்றும் இல்லை. முதல்வரின் தேர்தல் பிரசார டூர் விவரங்களைக் கவனிக்க வேண்டியிருந்ததால் அப்போதைக்கு பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். மே 23-ம் தேதி தேர்தல் ரிசல்ட் வெளியானவுடன் தற்போது காலியாக உள்ள அதே பதவியில் உட்காரப்போகிறாராம். இதுதொடர்பான ஃபைல்கள் கையொப்பமாகி  ரெடியாக இருக்கிறதாம். 

* சனீஸ்வர பகவான் கோயில் உள்ள பிரபலமான ஊர் அது! அதுதான், நாகரிகமான போலீஸ் உயர் அதிகாரி ஒருவருக்குச் சொந்த ஊர். அவர் சம்பாதித்ததை எல்லாம் கொட்டி, சொத்து வாங்கிப்போட்டாராம். தற்போது அதை விற்க முயற்சி செய்து வருகிறார். வொயிட்டில் ஏழு, பிளாக்கில் ஏழு என்கிற விகிதத்தில் பணத்தை எதிர்பார்க்கிறாராம். கடந்த இரண்டு வருடங்களாகப் போணியாகவில்லை. வாங்கக்கூடியவர்கள் இருந்தால், அவரை அணுகலாம்.

* மதுரையில் புகழ்பெற்ற கல்வி போதிக்கும் இடம் அது! அங்குள்ள குவார்ட்டர்ஸில் ஒரு குறிப்பிட்ட வீட்டருகே போலீஸ் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிற காட்சியை அங்குள்ள கல்வியாளர்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்களாம். அந்த போலீஸ் வாகனங்கள் கூடுதல் ராங்கில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரிக்காக நிற்பதாகத் தகவல். மிடில் ஏஜ் ஆன்ட்டி ஒருவருடன் அந்த போலீஸ் அதிகாரிக்குக் கூடுதல் நட்பு. தோளுக்கு மேல் வளர்ந்த இரண்டு பிள்ளைகள், மனைவி...ஆகியோரை விட்டு விலகி இங்கேயே டேரா போடுகிறாராம். மனைவி ஒருமுறை தற்கொலைக்கு முயன்றாராம். கடலோர மாவட்டத்தில் தற்போது பணியில் இருக்கிறார் என்பதுதான் க்ளூ. 

முதல்வரின் உறவினர் ராஜினாமா ஏன்? துறைமுக டாக்டர் மன்மத தூண்டில்! யார்கிட்டயும் சொல்லாதீங்க

* கப்பல் நிற்கும் முகத்துவாரத்தை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். ஒட்டுமொத்தமாக மருத்துவம் பார்ப்பவர்களுக்கு எல்லாம் இவர்தான் தலைவராம். எம்டன் என்று புனை பெயர் வைத்திருக்கிறார்கள். மன்மத ஓவியங்களை ரசிப்பதில் கில்லாடியாம். அழகான மருத்துவர்கள், பணியாளர்கள் என்றால், மன்மத தூண்டிலை வீசுவாராம். மெடிக்கல் செக்கப்பிற்கு வந்த பெண்ணிடம் வாலாட்ட, கூடவந்தவர் எம்டனை பின்னி எடுத்துவிட்டாராம். விவகாரத்தையும் அமுக்கிவிட்டார்களாம். பொதுவாக, பெண்களிடம், ``எனக்கு வயசாச்சு. செக்ஸ் எல்லாம் முடியாது. மணிக்கணக்கில் கதை பேசுவது, தொட்டுப்பேசுவது மாதிரியான விஷயங்களைத்தான் என்னால் செய்யமுடியும். அதுவே எனக்கு முழு திருப்தி தரும்" என்று புது தியரி சொல்லி டார்ச்சர் கொடுக்கிறாராம். ஆளை செலக்ட் பண்ணிவிட்டால், ஏதாவது ஒரு பார்ட்டி என்று சொல்லி அந்தப் பெண்ணை குடும்பத்துடன் கலந்துகொள்ள வற்புறுத்துவாராம். இதுதான் அவரின் முதல் அம்பு. அடுத்தடுத்த அம்புகளில் டிமிக்கி கொடுத்தால், அலுவல் ரீதியான பிரஷர் கொடுத்து பணியவைக்கப் பார்க்கிறாராம். இவரின் இம்சை தாங்கமுடியாமல், அவரின் பேச்சு, செயல்பாட்டை அப்படியே டேப் பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள் சிலர். ஏகப்பட்ட எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருக்கும் எம்டன், அவர் பெயருக்கு எந்த ஒரு கருப்புப்புள்ளியும் விழாமல் நழுவி வருகிறாராம். அவருக்கு மேலே இருப்பவர்கள் அரவணைப்பாய் இருப்பதற்கு காரணம் ஸ்பெஷல் அன்பளிப்புகள்தானாம். 

அடுத்த கட்டுரைக்கு