Published:Updated:

`24-ம் தேதி ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் ராஜினாமா செய்வார்கள்!' - அ.ம.மு.க புகழேந்தி

`24-ம் தேதி ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் ராஜினாமா செய்வார்கள்!' - அ.ம.மு.க புகழேந்தி
`24-ம் தேதி ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் ராஜினாமா செய்வார்கள்!' - அ.ம.மு.க புகழேந்தி
`24-ம் தேதி ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் ராஜினாமா செய்வார்கள்!' - அ.ம.மு.க புகழேந்தி

"24-ம் தேதி, எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ராஜினாமா செய்வார்கள் என்று அ.ம.மு.க செய்தித் தொடர்பாளரான புகழேந்தி கோவையில் தெரிவித்துள்ளார்."

கோவை சௌரிபாளையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், "மூன்று  எம்.எல்.ஏ-க்கள் மீதான நோட்டீஸுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது. சபாநாயகர் மனசாட்சியுடைவராக இருந்தால், முன்னாள் சபாநாயகர் மதியழகன் செய்ததுபோல்
மன்னிப்புக் கேட்டு பதவி விலக வேண்டும். தனபால் செய்ய வேண்டும். ஆனால், அவர் அதைச் செய்வாரா? என்பது கேள்விக்குறிதான்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்காத மத்திய அரசு ஒடிசாவில் தேர்தல் நடந்து வருவதால் பானி புயலுக்கு 1,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. சூலூர் இடைதேர்தலில் அ.ம.மு.க வேட்பாளருக்கும் தி.மு.க வேட்பாளருக்கும்தான் போட்டி. ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் போட்டியிலேயே இல்லை. சூலூரில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைதான். அ.ம.மு.க-வும் தி.மு.க-வும் கூட்டு என முதல்வர் விமர்சனம் குறித்த கேள்விக்கு பா.ஜ.க-வுக்காக பூத் வேலை பார்க்க வடமாநிலத்துக்குப் போனவர்களுக்கு இங்குள்ளாவர்களைப் பார்த்தால் தவறாகத்தான் தெரியும் என்றும் தி.மு.க-தான் எங்கள் எதிரி'' எனவும் கூறினார். 

24-ம் தேதி, எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ராஜினாமா செய்வார்கள் ஆட்சி போய்விட்டால்  எம்.எல்.ஏ-க்களும் சரி, கட்சிநிர்வாகிகளும் சரி ஒருவர்கூட அங்கு இருக்க மாட்டார்கள். எங்கள் பக்கம் வந்துவிடுவார்கள். நடனமாடி ஓட்டு கேட்கப் போகிறோம் என இங்கு உள்ள மணிகள் (அமைச்சர்கள்) வடநாடு செல்கிறார்கள், அதானியும் அம்பானியும் கொடுக்க முடியாததைப் பாலம் பழனிசாமியும் ஜீரோ பன்னீர்செல்வவும் மோடிக்குக் கொடுத்துள்ளனர்'' என்றார்.