Published:Updated:

 `பாக்ஸர் மோடி, கோச் அத்வானியையே தாக்கிவிட்டார்!' - ராகுல் காந்தி

 `பாக்ஸர் மோடி, கோச் அத்வானியையே தாக்கிவிட்டார்!' - ராகுல் காந்தி
 `பாக்ஸர் மோடி, கோச் அத்வானியையே தாக்கிவிட்டார்!' - ராகுல் காந்தி

 `பாக்ஸர் மோடி, கோச் அத்வானியையே தாக்கிவிட்டார்!' - ராகுல் காந்தி

 `பாக்ஸர் மோடி, கோச் அத்வானியையே தாக்கிவிட்டார்!' - ராகுல் காந்தி

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்கள். ராகுல் இந்தத் தேர்தலில் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்தநிலையில்தான் கடந்த சில நாள்களுக்கு முன்பு ராகுல் தேர்தலில் போட்டியிடக் கூடாது என வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் அவரது குடியுரிமை விவகாரத்தைக் குறிப்பிட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராகுலுக்கு இரட்டைக் குடியுரிமை உள்ளது. அவர் எப்படித் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதே பா.ஜ.க-வின் வாதமாக இருக்கிறது. பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி 2015-ம் ஆண்டு ராகுலின் குடியுரிமை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தில் புகார் அளித்தார். ராகுல் பிரிட்டிஷ் குடிமகன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அதை ஆதாரமாக வைத்துதான் தற்போது இந்த வழக்கு தொடரப்பட்டது. இரட்டைக் குடியுரிமை விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரத்தில் உங்கள் நிலைப்பாட்டை அடுத்த 15 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மீண்டும் ராகுலை சீண்டினார் பிரதமர் மோடி. உங்கள் தந்தையை மிஸ்டர் கிளீன் எனக் கூறிவருகிறார்கள். ஆனால், அவரது வாழ்க்கையோ ஊழல் நம்பர் ஒன்று என்ற நிலையில்தான் முடிந்தது என்றார். இதற்கு ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பிவானியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல், `ஊழல் ஒழிப்பு, விவசாயிகள் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை ஆகிய பிரச்னைகளுக்கு எதிராகப் போரிட மோடி களத்தில் இறங்கினார். அப்போது அவரின் பயிற்சியாளராக அத்வானி, நிதின் கட்கரி போன்றோர் இருந்தனர். களத்தில் மோடி இறங்கியதும் விட்ட முதல் குத்து அத்வானி மீதுதான். அவரை அவமதித்ததுதான். அதன்பின் கட்கரி, ஜெட்லி ஆகியோருக்குக் குத்துவிட்டார். அதற்கடுத்த குத்து விவசாயிகள் மற்றும் சிறு, குறு வணிகர்கள்மீது விட்டார்' என விமர்சித்துப் பேசினார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு