
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. வல்லரசு நாடுகள் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் போன்றவை இதில் நிரந்தர உறுப்பினர்கள். நிரந்தர உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கும் திட்டம் உள்ளது. அப்படி அதிகரிக்கப்பட்டால், இந்தியா நிச்சயமாக பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆக்கப்பட வேண்டுமென்று பிரான்ஸ் ஐ.நா-விடம் வலியுறுத்தியுள்ளது. ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் நாடுகளுக்கும் பிரான்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆப்ரிக்கா கண்டம் சார்பில் ஒரு நாட்டுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென்று தெரிவித்துள்ள பிரான்ஸ், எந்த ஆப்பிரிக்க நாடு என்பதைக் குறிப்பிட்டுக் கூறவில்லை.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டுமென்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலத்துக்கு ஏற்ப நாமும் மாறிக்கொள்ள வேண்டுமென்று பல்வேறு நாடுகள் கோரிவந்தன. கடந்த 2015- ம் ஆண்டு, பான் கீ மூன் ஐ.நா பொதுச் செயலாளராக இருந்தபோது, நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில், பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்துவது தொடர்பாக வரைவு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம்போல சீனா எதிர்ப்பு தெரிவித்தது. வரைவு மசோதாவைத் தோற்கடிக்க சீனா பல உள்ளடி வேலைகளைப் பார்த்தது. இந்தியா, பிரேசில், ஜப்பான், ஜெர்மனி நாடுகள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க, சீனா அடங்கியது. அமெரிக்காவும் ரஷ்யாவும் இந்த விவகாரத்தில் மெளனம் காத்தன. பெரும்பான்மை நாடுகளின் ஆதரவு கிடைத்ததால், வரைவு மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டது.