Published:Updated:

செந்தில்பாலாஜியைக் குறிவைத்து இருமுனை தாக்குதல்! - அரவக்குறிச்சியைப் பற்றிக்கொள்ள போராடும் தி.மு.க

``பிரசாரத்தை உற்றுநோக்கினாலே தெரியும். அரவக்குறிச்சியில் மட்டும், அ.தி.மு.கவினரோ, அ.ம.மு.கவினரோ ஸ்டாலினை தாக்கி பேசுவதில்லை. மாறாக செந்தில்பாலாஜியைத்தான் தாக்குகிறார்கள். இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் அரவக்குறிச்சியில் அவர்கள் யாருக்கு எதிராக களமிறங்கியுள்ளனர் என்பதை"

செந்தில்பாலாஜியைக் குறிவைத்து இருமுனை தாக்குதல்! - அரவக்குறிச்சியைப் பற்றிக்கொள்ள போராடும் தி.மு.க
செந்தில்பாலாஜியைக் குறிவைத்து இருமுனை தாக்குதல்! - அரவக்குறிச்சியைப் பற்றிக்கொள்ள போராடும் தி.மு.க
செந்தில்பாலாஜியைக் குறிவைத்து இருமுனை தாக்குதல்! - அரவக்குறிச்சியைப் பற்றிக்கொள்ள போராடும் தி.மு.க

அரசியல்கட்சிகளின் கவனம் முழுக்க 4 தொகுதி இடைத்தேர்தல்களைச் சுற்றிக்கொண்டிருக்கிறது. 22 தொகுதி இடைத்தேர்தல்களில் 5க்கும் மேற்ப்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கடைசிக் கட்டத்தில் பெரும்பான்மை வாக்கெடுப்பின் போது ஆட்சிக்கு பங்கம் விளைவித்து விடுவார்கள் என்பதால், 3 எம்.எல்.ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எம்.எல்.ஏக்களும் உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கிவிட்டனர். இதில் கள்ளக்குறிச்சி பிரபு மட்டும் நழுவிக்கொண்டார். ``நேரிடையாக சபாநாயகரைச் சந்தித்து விளக்கம் கொடுக்கலாம் எனத் திட்டமிட்டிருந்தேன். விரைவில் இதற்கான விளக்கம் கொடுக்க இருக்கிறேன். அதனால் நீதிமன்றம் செல்ல வேண்டாம் என நினைத்தேன்." என்று விளக்கம் கொடுத்தார் பிரபு. 

செந்தில்பாலாஜியைக் குறிவைத்து இருமுனை தாக்குதல்! - அரவக்குறிச்சியைப் பற்றிக்கொள்ள போராடும் தி.மு.க

`ஆட்சியை எந்தச் சூழலிலும் கவிழ்க்க அனுமதித்துவிடக் கூடாது. இரண்டாண்டுகளும் நாம்தான்’ என்பதில் உறுதியாக இருக்கிறார். 4 தொகுதிகளை எதிர்கட்சிகளுக்கு தாரைவார்த்துவிட்டால் சிக்கல்தான். நான்கிலும் எடப்பாடிக்கு தலைவலியாக இருப்பது அரவக்குறிச்சி தான். காரணம் சிம்பிள், செந்தில்பாலாஜி. எப்படியாவது செந்தில் பாலாஜியைத் தோற்கடிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்.

அரவக்குறிச்சியில் பிரசாரம் மேற்கொண்ட பழனிசாமி, ``5 ஆண்டுக்காலம்தான் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு பதவிக்காலம். அந்தக் குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே 3 கட்சிகளுக்கு மாறியிருப்பவர்தான் செந்தில்பாலாஜி. எதிரிகளோடு சேர்ந்து அ.தி.மு.க.வை உடைத்து, ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று முயற்சி செய்து சில எம்.எல்.ஏக்களை அழைத்துச் சென்றார். அவர்கள் தற்போது நடுத்தெருவில்தான் நிற்கிறார்கள்” என்றுபேசினார். இதற்காக செந்தில் பாலாஜியைத் தோற்கடிக்க அரவக்குறிச்சியில் நேரடியாக தானே களமிறங்க முடிவு செய்துள்ளார் எடப்பாடி. இதற்கான அசைமென்ட் போக்குவரத்து துறை விஜயபாஸ்கருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மக்களை நேரில் சென்று சந்தித்து, அவர்களுடன் உருக்கமாகப் பேசி, சமுதாய ரீதியாக அணுகி வெற்றிக்குப் பாதையை வகுக்க முடிவு செய்துள்ளார்.

மற்றொருபுறம், `செந்தில்பாலாஜி நமக்கு துரோகம் இழைத்தவர். யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம். ஆனால் அவர் வெற்றி பெறுவதை அனுமதிக்க முடியாது’ என்று கர்ஜித்துக்கொண்டிருக்கிறார் டி.டி.வி.தினகரன். வேட்பாளர் சாகுல்ஹமீதை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், ``பா.ஜ.கவை எதிர்க்கும் ஒரே தலைவர் டி.டி.வி.தினகரன்'னார். இப்போ, `ஸ்டாலின்தான் சிறந்த தலைவர்'ங்கிறார். இப்படி மாத்தி மாத்திப் பேசுவதில் வல்லவர் அவர். 2006-ல் கரூர் சட்டமன்ற வேட்பாளராக அவர் அறிவிக்கப்படுவதற்கு ஜெயலலிதாவிடம் சிபாரிசு பண்ணியது நான்தான். அதன்பின், அமைச்சரானார்.`பதவி ஆசை இருக்கலாம். ஆனால், செந்தில் பாலாஜிக்கு இருப்பது பதவி வெறி’ என்று கடுமையாகப் பேசினார். 

செந்தில்பாலாஜியைக் குறிவைத்து இருமுனை தாக்குதல்! - அரவக்குறிச்சியைப் பற்றிக்கொள்ள போராடும் தி.மு.க

இப்படி செந்தில்பாலாஜிக்கு எதிராக இரண்டு தரப்பினரும் முழுவீச்சில் களமிறங்கியுள்ளனர். அவர்களுக்கு, `செந்தில்பாலாஜியைத் தோற்கடிக்கவேண்டும்’ என்பதே இலக்கு. இந்த எதிர்ப்புகளை மீறி தேர்தலில் வெற்றி பெற்று, தன் மீதான ஸ்டாலின் நம்பிக்கையைக் காப்பாற்ற நினைக்கிறார் பாலாஜி.

இது தொடர்பாக தி.மு.க தரப்பில், ``செந்தில்பாலாஜியைத் தோற்கடிக்கவேண்டும் என்பதை மட்டும் முன்னிறுத்தி அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பிரசாரத்தை உற்றுநோக்கினாலே தெரியும். அரவக்குறிச்சியில் மட்டும், அ.தி.மு.கவினரோ, அ.ம.மு.கவினரோ ஸ்டாலினைத் தாக்கிப் பேசுவதில்லை. மாறாக செந்தில்பாலாஜியைத்தான் தாக்குகிறார்கள். இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் அரவக்குறிச்சியில் அவர்கள் யாருக்கு எதிராக களமிறங்கியுள்ளனர் என்பதை. இது ஒருபுறமிருக்க, செந்தில்பாலாஜிக்கு தி.மு.கவினரே தொல்லைதான் கொடுத்துவருகின்றனர்.

செந்தில்பாலாஜியைக் குறிவைத்து இருமுனை தாக்குதல்! - அரவக்குறிச்சியைப் பற்றிக்கொள்ள போராடும் தி.மு.க

ஒத்துழைப்பு என்பது இல்லாதநிலையிலே இருக்கிறது. இதனால் கடுப்பான அவர், வெளிநாட்டில் பயணத்தில் இருக்கும் சபரீசனை தொடர்புகொண்டு, நிலவரங்களை புட்டுப் புட்டு வைத்துள்ளார். இதையறிந்த சபரீசன், `நீங்கள் தேர்தல் வேலையைக் கவனிங்க நான் பாத்துக்குறேன்' என்று கூறிவிட்டார். மேலும் களநிலவரங்களை ஸ்டாலினுக்கு சபரீசன் தெரிவிக்க இருக்கிறார். தேர்தலுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில், உள்ளூர் தி.மு.கவினர் ஒத்துழைப்பு கொடுத்து தேர்தல் பணியாற்றினால்போதும் வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கிறார் செந்தில்பாலாஜி” என்றனர். 

Vikatan