Published:Updated:

`ஸ்டாலினை முதல்வராக உட்கார வைக்க முடியாது. ஆனால்?' - ஆட்சி மாற்ற வியூகத்தை விவரிக்கும் அ.ம.மு.க

``முதல்வர் முட்டாள்தனமாகப் பேசி வருகிறார். 4 தொகுதி இடைத்தேர்தலில் இதனால் எங்களுக்குப் பாதிப்பு வராது. இந்த ஆட்சியை எப்போது கலைப்பார்கள் என மக்கள் காத்திருக்கிறார்கள். நான் சொன்னதைக் கேட்டதும், இப்படியொரு வழியிருக்கிறதா என அவர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள்."

`ஸ்டாலினை முதல்வராக உட்கார வைக்க முடியாது. ஆனால்?' - ஆட்சி மாற்ற வியூகத்தை விவரிக்கும் அ.ம.மு.க
`ஸ்டாலினை முதல்வராக உட்கார வைக்க முடியாது. ஆனால்?' - ஆட்சி மாற்ற வியூகத்தை விவரிக்கும் அ.ம.மு.க

`தி.மு.க-வோடு கூட்டு சேர்ந்து அ.தி.மு.க ஆட்சியைக் கவிழ்ப்போம்' என அ.ம.மு.க கொள்ளைப் பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. `தினகரனைக் கொண்டு வருவதற்காக ஆட்சியைக் கலைப்போம் எனக் கூறினேன். ஏதாவது ஒரு பாதையில் ஒன்று சேர்ந்து போனால்தான் இந்தத் துரோக ஆட்சியைக் கலைக்க முடியும். நானும் அதை வைத்துதான் பேசினேன்' என இன்று விளக்கம் கொடுத்திருக்கிறார் தங்கம். இந்த ஒரு கருத்தை மையப்படுத்திப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், `தி.மு.க-வும் தினகரனும் ரகசியக் கூட்டு வைத்திருக்கிறார்கள்' எனப் பிரசார மேடைகளில் பேசி வருகிறார். தங்கத்தின் தடாலடி அ.ம.மு.க-வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

``ஆட்சியைக் கலைப்போம் எனத் தங்கம் பேசியதை எப்படிப் பார்க்கிறீர்கள்?'' என அ.ம.மு.க செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் கேட்டோம். 

``தி.மு.க-வோடு சேர்ந்து ஆட்சியைக் கலைப்போம் எனத் தங்க.தமிழ்ச்செல்வன் சொல்வது அவரது சொந்தக் கருத்து. 18 ப்ளஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், டி.டி.வி.தினகரனோடு இருந்த நேரத்திலேயே, ஸ்டாலினோடு தொடர்பு வைத்துக்கொண்டு இந்த ஆட்சியைக் கலைத்திருக்க முடியும். எங்களுக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை; அப்படியொரு சிந்தனையும் இல்லை. எம்.ஜி.ஆர், அம்மா வழியில் வந்தவர்கள் நாங்கள். தி.மு.க-தான் எங்களுடைய கள எதிரி. அதில் எந்தவித சமாதானமும் கிடையாது என்பதுதான் எங்களுடைய கொள்கை. இதை வேண்டும் என்றே திரிக்கிறார்கள். தி.மு.க-வோடு எந்தவித உறவும் நட்பும் கிடையாது." 

`ஸ்டாலினை முதல்வராக உட்கார வைக்க முடியாது. ஆனால்?' - ஆட்சி மாற்ற வியூகத்தை விவரிக்கும் அ.ம.மு.க

`தங்கத்தின் கருத்துக்கு தினகரன் எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லையே?'' 

``நான் சொல்கிறேனே... எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. சொந்தக் கருத்துகளை கட்சிப் பொறுப்பாளர்கள் சொல்லும்போது, டி.டி.வி.தினகரன் பதில் கூறியதில்லை." 

`அ.ம.மு.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருக்கிறார் தங்கம். இந்தக் கருத்தை எப்படி எடுத்துக்கொள்வது?'' 

``அதிகாரபூர்வ கருத்தை தலைமைதான் சொல்ல வேண்டும். தலைவர்தான் தெரிவிக்க வேண்டும். ஆயிரம் கருத்துகளை கீழே உள்ளவர்கள் சொல்லலாம். அவர் பேசியது தவறு. தலைவரின் அனுமதியில்லாமல் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் கருத்து சொல்வது தவறு. அந்த விதத்தில்தான் தங்க.தமிழ்ச்செல்வன் பேசியதைப் பார்க்கிறேன். 18 எம்.எல்.ஏ-க்கள் எங்கள் கையில் இருந்தபோது, ஆட்சியைக் கவிழ்த்து ஸ்டாலினை அப்போதே முதல்வராக்கியிருக்கலாம். சின்னம்மாவும் சரி... தினகரனும் சரி. எந்தக் காலத்திலும் தி.மு.க-வுடன் சமரசமாகப் போகமாட்டார்கள். அந்தக் காலகட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வாருங்கள் எனத் தி.மு.க-வைப் பலமுறை வலியுறுத்தினோம். அப்போதெல்லாம் எங்கள் கருத்தை ஸ்டாலின் புறம் தள்ளிவிட்டார். அப்படியானால், ஆளும்கட்சியோடு தி.மு.க தலைமை ரகசியக் கூட்டு வைத்திருக்கிறதா?" எனக் கொதிப்போடு முடித்துக்கொண்டார் புகழேந்தி.  

`ஸ்டாலினை முதல்வராக உட்கார வைக்க முடியாது. ஆனால்?' - ஆட்சி மாற்ற வியூகத்தை விவரிக்கும் அ.ம.மு.க

``நேற்று பேசிய கருத்துக்கு இன்று விளக்கம் கொடுத்திருக்கிறீர்களே?'' எனத் தங்க.தமிழ்ச்செல்வனிடம் கேட்டோம். 

``நான் சொல்வதைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். 22 தொகுதிகளுக்கான தேர்தலில் எடப்பாடி தோற்றுவிட்டால், ஆளுநரைச் சந்தித்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்த கடிதத்தை ஸ்டாலின் கொடுப்பார். அப்படிக் கொடுக்கும்போது, இந்த ஆட்சி நீடிக்கக் கூடாது என நாங்களும் ஓட்டு போடுவோம்." 

``18 ப்ளஸ் எம்.எல்.ஏ-க்கள் உங்கள் கையில் இருந்தபோதே ஸ்டாலினை பதவியில் அமர வைத்திருக்கலாமே?'' 

``ஸ்டாலினை முதல்வராக உட்கார வைக்க முடியாது. அதில் எங்களுக்கு விருப்பமில்லை." 

``தி.மு.க-வோடு சேர்ந்து கவிழ்ப்போம் என நீங்கள் பேசியதை வைத்து, அவர்களுக்குச் சாதகமாகப் பிரசாரம் செய்கிறாரே எடப்பாடி?'' 

``முதல்வர் முட்டாள்தனமாகப் பேசி வருகிறார். 4 தொகுதி இடைத்தேர்தலில் இதனால் எங்களுக்குப் பாதிப்பு வராது. இந்த ஆட்சியை எப்போது கலைப்பார்கள் என மக்கள் காத்திருக்கிறார்கள். நான் சொன்னதைக் கேட்டதும், இப்படியொரு வழியிருக்கிறதா என அவர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள்." 

`ஸ்டாலினை முதல்வராக உட்கார வைக்க முடியாது. ஆனால்?' - ஆட்சி மாற்ற வியூகத்தை விவரிக்கும் அ.ம.மு.க

``அ.ம.மு.கட்சியின் கொ.ப.செ-வாக இருக்கிறீர்கள். உங்கள் கருத்தில் தலைமைக்கு உடன்பாடு இருக்கிறதா?'' 

``இது என்னுடைய சொந்தக் கருத்து. தலைமையின் கருத்து கிடையாது. இந்த ஆட்சி போக வேண்டும் என்பதற்காக ஓட்டு போடுகிறோம். இந்த ஆட்சி இருக்கக் கூடாது என்பது தி.மு.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எண்ணம். எங்களுடைய விருப்பமும் அதுதான்." 

``தி.மு.க. எதிர்ப்பில் வளர்ந்த கட்சி அ.தி.மு.க. ஒன்றாகச் சேர்ந்து கவிழ்ப்போம் எனக் கூறுவது சலசலப்பை ஏற்படுத்தாதா?'' 

``அம்மா இருக்கும்போது இப்படிச் செய்திருந்தால்தான் இந்தக் கேள்வி வரும். அம்மா இறந்துவிட்டார். இப்போது துரோகிகள் கையில் ஆட்சி இருக்கிறது. நாம் இப்படிச் செய்வதனால் எந்தப் பிரச்னையும் வரப்போவதில்லை. ஆட்சியை அகற்ற வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.'' 

`ஸ்டாலினை முதல்வராக உட்கார வைக்க முடியாது. ஆனால்?' - ஆட்சி மாற்ற வியூகத்தை விவரிக்கும் அ.ம.மு.க

``உங்கள் பேச்சு கட்சிக்குள்ளேயே சலசலப்பை உருவாக்கியிருக்கிறதே?'' 

``அப்படியெல்லாம் இல்லையே...''

``பெங்களூரு புகழேந்தி கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறாரே?'' 

``அவர் மனிதத்தனமாகவா பேசுகிறார்... ஆட்சியை நடத்த வேண்டும் எனப் புகழேந்தி சொல்கிறார். `ஆட்சியைக் கலைப்போம்' என்றுதான் எங்கள் பொதுச் செயலாளர் சொல்கிறார். இவர் எப்படி ஆட்சி நீடிக்க வேண்டும் எனச் சொல்லலாம். அவர்தான் முரண்பட்டுப் போகிறார். மற்றவர்கள் யாரும் முரண்படவில்லை." 

Vikatan