Published:Updated:

`வெயிட்டிங்கில் விராட், அமிதாப் பச்சனுக்கு அரசு ஹெலிகாப்டர்'- லட்சத்தீவில் நடந்தது என்ன?

`வெயிட்டிங்கில் விராட், அமிதாப் பச்சனுக்கு அரசு ஹெலிகாப்டர்'- லட்சத்தீவில் நடந்தது என்ன?
`வெயிட்டிங்கில் விராட், அமிதாப் பச்சனுக்கு அரசு ஹெலிகாப்டர்'- லட்சத்தீவில் நடந்தது என்ன?

`வெயிட்டிங்கில் விராட், அமிதாப் பச்சனுக்கு அரசு ஹெலிகாப்டர்'- லட்சத்தீவில் நடந்தது என்ன?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தன் குடும்பத்தினர் விடுமுறை கழிப்பதற்காக  ஐ.என்.எஸ். விராட் போர்க்கப்பலைப் பயன்படுத்தியதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருப்பது அரசியலில் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சரி... அப்போது லட்சத்தீவில் என்னதான் நடந்தது? அரசியலில் இருந்து சில நாள்கள் விலகியிருக்க ராஜீவ் விரும்பினார்.

`வெயிட்டிங்கில் விராட், அமிதாப் பச்சனுக்கு அரசு ஹெலிகாப்டர்'- லட்சத்தீவில் நடந்தது என்ன?

இதற்காக, லட்சத்தீவில் உள்ள பங்காரம் தீவு தேர்வு செய்யப்பட்டது. மொத்தம் 36 தீவுகள் உள்ள லட்சத் தீவின் மக்கள் தொகை வெறும் 50,000 மட்டுமே. இந்தத் தீவுக் கூட்டங்களில் வெளிநாட்டினருக்கு அனுமதியுள்ள ஒரே தீவு பங்கரா மட்டுமே. மொத்த பரப்பளவே 0.5 சதுர கிலோ மீட்டர்தான். தங்கும் விடுதிகள் இங்கே உண்டு. லட்சத்தீவு நிர்வாகம் இதை நிர்வகித்தது. இயற்கையாகவே பாதுகாப்பு மிகுந்த தீவு அது. டிசம்பர் 26-ம் தேதி லட்சத்தீவுக்கு ராஜீவ் காந்தியின் பரிவாரங்கள் புறப்பட்டன.  

கடலுக்குள் ஐ.என்.எஸ் விராட் வெயிட்டிங்கில் நின்று கொண்டிருந்தது. கடலிலும் கரையிலும் பார்ட்டி நடத்த ராஜீவ் காந்தி திட்டமிட்டிருந்தார். ரகசியத்  தகவல் வெளியே கசிந்து விடக் கூடாது என்பதில் உஷாராகவும் இருந்தனர். ஜெயா பச்சன் தன் இரு பிள்ளைகளுடனும் அமிதாப் பச்சனின் சகோதரர் அஜிதாப் பச்சன் மகளுடனும் ஆஜராகியிருந்தார். அமிதாப்பச்சன் 30-ம் தேதி தனியாக ஹெலிகாப்டரில் லட்சத் தீவுக்கு வந்தடைந்தார். அமிதாப்பின் சகோதரர் அஜிதாப் பச்சன் மீது விதிமுறைகளை மீறி வெளிநாட்டில் சொத்து சேர்த்த வழக்கு நிலுவையில் இருந்தது. எனவே, அமிதாப் குடும்பத்தினர் வருகை யாருக்கும் தெரியக் கூடாது என்பதில் ராஜீவ் காந்தி கவனமாக இருந்தார். ஆனால், விதி வலியது!

தனியாக வந்த அமிதாப் பச்சனை பிக் - அப் பண்ண லட்சத்தீவு நிர்வாகத்துக்குச் சொந்தமான தனி ஹெலிகாப்டர் கொச்சிக்கு அனுப்பப்பட்டது. கொச்சியிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அவர் லட்சத்தீவு தலைநகர் கவாரட்டி அழைத்து வரப்பட்டார். தனி ஒரு மனிதருக்காக அரசு ஹெலிகாப்டர் பறந்தது. எல்லாமே ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாக நினைத்துக்கொண்டார்கள். அமிதாப் பச்சன் சுற்றுலா முடிந்து திரும்புகையில் கொச்சி விமான நிலையத்தில் மீடியா போட்டோகிராபர் கண்களில் தென்பட, அவர் கிளிக் செய்து விட்டார். அமிதாப் பச்சன் கோபம் கொப்பளிக்க போட்டோகிராபரை திட்டியும் அவர் `எஸ்கேப்' ஆகி விட்டார்.  

`வெயிட்டிங்கில் விராட், அமிதாப் பச்சனுக்கு அரசு ஹெலிகாப்டர்'- லட்சத்தீவில் நடந்தது என்ன?

புத்தாண்டு கொண்டாட்டம் கூட ராஜீவ் குடும்பத்தினருக்குப் பங்காரம் கடற்கரையில் உற்சாகமாகக் கழிந்தது. ஜனவரி 6-ம் தேதி சுற்றுலா முடிந்து அனைவரும் நாடு திரும்பினர். 1988-ம் ஆண்டு லட்சத்தீவில் உள்ள அமினி தீவில்தான் முதல் அலுவல் ரீதியான விழாவில்  ராஜீவ் பங்கேற்றார். அதில், பங்கேற்க ராஜீவ் காந்தி, கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் பங்காரம் தீவிலிருந்து புறப்பட்டார். ஹெலிகாப்டரில் ராகுல் காந்தியையும் ஏற்றிக்கொண்டார். செல்லும் வழியில் ஹெலிகாப்டர் ஐ.என்.எஸ் விராட்டில் இறங்கியது. கப்பலில் ராகுல் காந்தியை விட்டு விட்டு, பின் ராஜீவ் காந்தி  மட்டும் அமினி தீவுக்குப் புறப்பட்டார். 

`வெயிட்டிங்கில் விராட், அமிதாப் பச்சனுக்கு அரசு ஹெலிகாப்டர்'- லட்சத்தீவில் நடந்தது என்ன?

நாடாளுமன்றத்தில்,  எதிர்க்கட்சிகள் பிரச்னையை கிளப்பின. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் குஞ்சு கோயா, `தனி மனிதர் ஒருவருக்காக அரசு ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டிருப்பது தேசத்தின் மிகப் பெரிய ஊழல்' என்று குற்றம் சாட்டினார். இந்திய விமானம் தாங்கிக் கப்பலையே ராஜீவ் காந்தி குடும்பத்தினர் பயன்படுத்தியது அப்போது பலருக்கும் தெரியாது.

லட்சத் தீவில் நிர்வாகப் பொறுப்பில் இருந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வஜாஹத் ஹபிஃபுல்லா இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார். இதுகுறித்து பேசிய ஹபிஃபுல்லா, `ராஜீவ் மற்றும் சோனியா ஆகியோர் ஹெலிகாப்டரிலேயே லட்சத்தீவுக்கு வந்தனர். ஐ.என்.எஸ் விராட் கப்பல் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது. பிரதமர் ராஜீவ்காந்தியின் கூடுதல் பாதுகாப்புக்காகவே. நடுக்கடலில் பிரதமர் இருக்கும் சூழலில், போர்க்கப்பலைத் தவிர அவரின் பாதுகாப்புக்கு வேறு வாய்ப்புகள் இல்லை'' என்றார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு