Published:Updated:

`வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர வேறென்ன செய்தீர்கள் மோடி!' - அரவிந்த் கெஜ்ரிவால்

`வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர வேறென்ன செய்தீர்கள் மோடி!' - அரவிந்த் கெஜ்ரிவால்
`வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர வேறென்ன செய்தீர்கள் மோடி!' - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் மொத்தமுள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் 12-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளன. காங்கிரஸும் ஆம் ஆத்மியும் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தக் கூட்டணி சாத்தியப்படாமல் போனது. தற்போது பி.ஜே.பி, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் டெல்லியின் பிரசாரக் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

`வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர வேறென்ன செய்தீர்கள் மோடி!' - அரவிந்த் கெஜ்ரிவால்

சமீபத்தில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக பிரகாஷ் ராய் டெல்லியில் பிரசாரத்தை மேற்கொண்டார். இந்நிலையில் புதுடெல்லியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி,`அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆட்சிக் காலத்தில் டெல்லியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. டெல்லியில் அராஜக ஆட்சிதான் நடைபெறுகிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

`வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர வேறென்ன செய்தீர்கள் மோடி!' - அரவிந்த் கெஜ்ரிவால்

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ``கல்வி, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, தீர்வு கண்டுள்ளோம். கடந்த ஐந்து ஆண்டுக்கால ஆட்சியில் வெளிநாட்டுக்குச் செல்வது, கருத்துச் சொல்வதைத் தவிர்த்து, வேறு என்ன செய்துள்ளீர்கள். அதனால்தான் இப்போது போலி தேசியவாதத்தின் வாயிலாக வாக்கு கேட்கிறீர்கள்” என அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Vikatan