Published:Updated:

`தமிழக அரசின் உரிமை என்ன ஆயிற்று?'- 7 பேர் விடுதலைக்காக கேள்வி எழுப்பும் அற்புதம்மாள்

வெ.வித்யா காயத்ரி
`தமிழக அரசின் உரிமை என்ன ஆயிற்று?'- 7 பேர் விடுதலைக்காக கேள்வி எழுப்பும் அற்புதம்மாள்
`தமிழக அரசின் உரிமை என்ன ஆயிற்று?'- 7 பேர் விடுதலைக்காக கேள்வி எழுப்பும் அற்புதம்மாள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலையை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்தத் தீர்ப்புகுறித்து அற்புதம்மாளிடம் பேசினோம்.

`தமிழக அரசின் உரிமை என்ன ஆயிற்று?'- 7 பேர் விடுதலைக்காக கேள்வி எழுப்பும் அற்புதம்மாள்

``இந்த வழக்குக்கும், ஏழு பேர் விடுதலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லைன்னு எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், இதுவரை அந்த வழக்கைக் காரணம் காட்டி விடுதலை பண்ணாம இருந்தாங்க. இப்போ, அதுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த வழக்கைத் தள்ளுபடிசெஞ்சுட்டாங்க. உடனடியா ஆளுநர் ஏழு பேர் விடுதலைக்காக கையெழுத்திடுவார்னு எல்லோரும் நம்புற மாதிரிதான் நானும் நம்புறேன். ஆளுநர் கையில்தான் முடிவு இருக்கிறது. 

கொஞ்சம் மனிதத்தன்மையோட யோசிச்சிருந்தாங்கன்னா, அவங்க எல்லோரும் இதுக்குள்ளே விடுதலையாகியிருப்பாங்க. நடந்து முடிஞ்ச சம்பவத்தையேதான் பேசுறாங்களே தவிர, அந்தச் சம்பவத்துக்கும் என் பையனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு நான் சொல்றதை யாரும் காதுல வாங்க மாட்டேன்றாங்க. 28 ஆண்டு வாழ்க்கையே முடிஞ்சிருச்சு. இதுக்கும் மேல அவங்களைத் தண்டிக்க என்ன இருக்கு? 

 19 வயசுல அவனை கூட்டிட்டுப் போனாங்க.  28 வருஷமா ஜெயிலுக்குள்ளேதான் இருக்கான். சட்டப்படி தான் எல்லா நடவடிக்கையிலும் ஈடுபட்டுட்டிருக்கேன். சட்டத்தை மீறி எதுவும் செய்யலை. அவனுக்கு ஒரு வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கணும்னு ஒரு தாயா என்னுடைய பரிதவிப்பு ஏன் யாருக்கும் புரியலைனு எனக்குத் தெரியலை. இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் தண்டனை கொடுக்கப் போறாங்க? 

அரசு சொல்றதைத்தான் ஆளுநர் கேட்பார். ஆளுநராகத் தனியா எந்த முடிவையும் எடுக்க முடியாது! அப்போ, தமிழக அரசுடைய உரிமை என்ன ஆயிற்று? எல்லா விதத்திலும் எதிர்ப்புகள் வந்து, எல்லாத்தையும் முறியடிச்சு, பல போராட்டங்களைக் கடந்து, இன்னைக்கு ஒரே ஒரு கையெழுத்துக்காக காத்திருக்கிறோம். என் பையன் மகிழ்ச்சியா வாழ்றதைப் பார்க்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா... ரொம்ப வயசாகுதும்மா, சக்தி குறையுது. ஆளுநர் கையொப்பமிட்டு என் பையன் வந்துருவான்னு உங்க எல்லோரையும் மாதிரிதான்மா நானும் காத்துட்டு இருக்கேன்'' என்றார்.

Vikatan