Published:Updated:

``வளர்ச்சி முதல் வீழ்ச்சி வரை!'' - தமிழ் மாநில காங்கிரஸின் நெடும்பயணக் கதை!

``வளர்ச்சி முதல் வீழ்ச்சி வரை!'' - தமிழ் மாநில காங்கிரஸின் நெடும்பயணக் கதை!

``வளர்ச்சி முதல் வீழ்ச்சி வரை!'' - தமிழ் மாநில காங்கிரஸின் நெடும்பயணக் கதை!

``வளர்ச்சி முதல் வீழ்ச்சி வரை!'' - தமிழ் மாநில காங்கிரஸின் நெடும்பயணக் கதை!

``வளர்ச்சி முதல் வீழ்ச்சி வரை!'' - தமிழ் மாநில காங்கிரஸின் நெடும்பயணக் கதை!

Published:Updated:
``வளர்ச்சி முதல் வீழ்ச்சி வரை!'' - தமிழ் மாநில காங்கிரஸின் நெடும்பயணக் கதை!

''பெருந்தலைவர் காமராஜரை 1966-ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் உயிரோடு எரிக்க முயன்ற வகுப்புவாத கும்பலின் வாரிசாக விளங்குகிற பி.ஜே.பி-யோடு கூட்டணி சேருவதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? 1999-ல் வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சியைக் கவிழ்ப்பதற்குக் காரணமாக இருந்த மூன்று வாக்குகளை அளித்து உதவிய மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் வழிவந்த நீங்கள், பி.ஜே.பி-யுடன் சேருவதை ஏற்றுக்கொள்வீர்களா? தமிழ் மாநில காங்கிரஸ் தலைமை, பி.ஜே.பி-யில் சேருவது எனத் தவறான முடிவெடுத்தால் அந்த முடிவைக் காங்கிரஸ் உணர்வுள்ள இன்றைய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும். எதை ஏற்றுக்கொள்ள வேண்டுமோ, அதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியும். பி.ஜே.பி-யில் இணைவது என்ற முடிவு த.மா.கா-வின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குவதாகும்.

``வளர்ச்சி முதல் வீழ்ச்சி வரை!'' - தமிழ் மாநில காங்கிரஸின் நெடும்பயணக் கதை!

நீண்டகாலமாகக் காங்கிரஸ் கட்சியிலிருந்து, கருத்து வேறுபாடு காரணமாகத் தமிழ் மாநில காங்கிரஸில் இருக்கிற அனைவரையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ற முறையில் உங்களை இருகரம் கூப்பி அன்போடு அழைக்கிறேன். இளம் தலைவர் ராகுல் காந்தியின் போர்ப்படையில் இணைய உடனடியாக வாருங்கள். உங்களுக்காக சத்தியமூர்த்தி பவனின் கதவுகள் திறந்திருக்கின்றன. இது உங்கள் தாய் வீடு. இங்கே வருவதற்கு உங்களுக்கு எந்தத் தயக்கமும் வேண்டாம். உங்களை ஆதரிக்க, அரவணைக்கத் தமிழக காங்கிரஸ் தலைமை தயாராக இருக்கிறது'' எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்திருக்கிறார்.

``வளர்ச்சி முதல் வீழ்ச்சி வரை!'' - தமிழ் மாநில காங்கிரஸின் நெடும்பயணக் கதை!

இதற்குக் காரணம், கடந்த சில தினங்களாகவே தமிழ் மாநில காங்கிரஸில் மாற்றம் நடைபெற இருக்கிறதாக வந்த தகவல்களும், வாசன் தன்னுடையக் கட்சியை பி.ஜே.பி-யோடு இணைக்கப்போகிறார் என்ற தகவலும் அரசியல் வட்டாரத்தில் சுற்றிச் சுழன்று கொண்டிருந்ததுதான். நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றது த.மா.கா. அதோடு கூட்டணியில் இடம்பெற்றிருந்த பி.ஜே.பி-க்கு ஆதரவாகப் பிரசாரமும் செய்தது. வாசனின் இந்தச் செய்கை, அவரின் கட்சியில் உள்ள அடிமட்டத் தொண்டர்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. 

தற்போது கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையைத் தொடர்ந்து, ''த.மா.கா எப்போதும் பி.ஜே.பி-யுடன் இணையாது'' என்று தெரிவித்துள்ளார் ஜி.கே.வாசன். அப்படியென்றால் காங்கிரஸுடன் மீண்டும் இணைய வாய்ப்பிருக்கிறதா என்றால், அதுவும் சந்தேகம்தான். ''தற்போதைய சூழலில், பெரிய கட்சிகளாக இருந்தாலும் அடுத்த நிலை கட்சிகளாக இருந்தாலும், கூட்டணி என்பது அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. தனித்து நிற்கும் கட்சிகளின் உண்மை நிலை, தேர்தல் திருவிழாவின்போது தெரியாது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பார்த்தால், கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்குத்தான் வாக்கு சதவிகிதம் அதிகமாக இருக்கும்'' என பி.ஜே.பி - அ.தி.மு.க கூட்டணி குறித்த கேள்விக்கு ஏற்கெனவே பதிலளித்திருந்தார் வாசன். 

``வளர்ச்சி முதல் வீழ்ச்சி வரை!'' - தமிழ் மாநில காங்கிரஸின் நெடும்பயணக் கதை!

''தாய்க் கட்சியான காங்கிரஸோடு இணைவீர்களா?'' என்ற கேள்விக்கு ‘த.மா.கா மாநிலக் கட்சியாகவும் அதேசமயம் தேசியப் பார்வையோடும் கடந்த நான்கு ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. காங்கிரஸிலிருந்து விலகி, வெகுதூரம் வந்துவிட்டோம். இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை’’ என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தார். தமிழ் மாநில காங்கிரஸில் இப்போது நடந்துகொண்டிருப்பது பெரிய கதையென்றால், தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கப்பட்டதும் பெரிய கதைதான்.

``வளர்ச்சி முதல் வீழ்ச்சி வரை!'' - தமிழ் மாநில காங்கிரஸின் நெடும்பயணக் கதை!

''தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் என்று காங்கிரஸின் வரலாற்றில் எப்போதும் மறக்க முடியாத ஆளுமை ஜி.கே.மூப்பனார். 1996-ல் காங்கிரஸின் அகில இந்தியத் தலைமை அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க முடிவெடுத்தது. காங்கிரஸின் மூத்த உறுப்பினர்களும் முக்கியத் தலைவர்களும் அந்த முடிவை எதிர்த்தனர். தலைமை தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளாததால்,  
ஜி.கே.மூப்பனார், அவருடைய ஆதரவாளர்களுடன் சேர்ந்து `தமிழ் மாநில காங்கிரஸ்' என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். 

கட்சி தொடங்கிய அதே ஆண்டு தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து, சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தது தமிழ் மாநில காங்கிரஸ். கட்சியின் முதல் தேர்தலில் 25,26,474 வாக்குகளைப் பெற்று, சட்டமன்றத்தில் 39 இடங்களில் வெற்றி பெற்றது. அதே தேர்தலுடன் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 73,39,982 வாக்குகள் பெற்று, 20 மக்களவை தொகுதிகளைக் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது தமிழ் மாநில காங்கிரஸ். அதற்கடுத்து சந்தித்த தேர்தல்களில் பெரிதாக சோபிக்கவில்லை.

கட்சிக்குள்ளும் தொண்டர்களிடமும் நிறைய மாற்றங்கள். அதனால், தொடர்ச்சியான சரிவைச் சந்தித்தது தமிழ் மாநில காங்கிரஸ். அதன் பிறகு நடந்த 12-வது மக்களவைத் தேர்தலில் மூன்று இடங்களில், தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. 13-வது மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் புதிய தமிழகம் கட்சிகளோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால், ஓர் இடத்தில்கூட இவர்கள் வெற்றியை நெருங்க முடியவில்லை. 

``வளர்ச்சி முதல் வீழ்ச்சி வரை!'' - தமிழ் மாநில காங்கிரஸின் நெடும்பயணக் கதை!

எந்தக் கட்சியோடு தலைமை கூட்டணி வைத்தது பிடிக்காமல், காங்கிரஸிலிருந்து விலகி வந்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினாரோ, அதே அ.தி.மு.க-வுடன் 2001-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைத்தார் மூப்பனார். இது அரசியல் முரண். அந்தத் தேர்தலில் 18,85,726 வாக்குகள் பெற்று 23 சட்டசபைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது த.மா.கா.

தமிழ் மாநில காங்கிரஸின் நிறுவனத் தலைவர், அகில இந்தியக் காங்கிரஸ் பொதுச் செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் என எத்தனையோ பதவிகளில் கோலோச்சிய மூப்பனார், அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்ற சில மாதங்களிலேயே இறந்துபோனதை எந்த காங்கிரஸ் தொண்டனும் மறக்க மாட்டான். மூப்பனாரின் மறைவுக்குப் பிறகு, த.மா.கா-வின் தலைவராக அவரின் மகன் ஜி.கே.வாசன் பொறுப்புக்கு வருகிறார். தலைவரான ஓராண்டுக்குள்ளேயே தாய்க் கழகமான காங்கிரஸுடன் தந்தை வார்த்தெடுத்தக் கட்சியை இணைக்கிறார். ஆட்சியில் இடம்பெறுகிறார். மத்திய அமைச்சராகிறார். 

``வளர்ச்சி முதல் வீழ்ச்சி வரை!'' - தமிழ் மாநில காங்கிரஸின் நெடும்பயணக் கதை!

மாற்றம் ஒன்றே மாறாதது - இந்த வாசகம்தான் வாசனுக்கும் பிடிக்குப்போல... பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்,  காங்கிரஸிலிருந்து வெளியேறினார். 2014-ல் தந்தை தொடங்கிய கட்சியை மீண்டும் அதே பெயரில் தொடங்கினார் வாசன். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பிடித்தார் ஜி.கே.வாசன். அந்தத் தேர்தலில் 2,30,710 வாக்குகள் பெற்றது த.மா.கா. ஆனால், ஓர் இடத்தைக் கூட வெல்லவில்லை. தற்போது அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறது. சைக்கிள் சின்னம் பி.ஜே.பி-யின் நட்புக்குப் பரிசாகக் கிடைத்தாலும், அதைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை வாசனால். ஒரு இடத்தில் போட்டியிட்டதால் 'ஆட்டோ'தான் பரிசாகக் கிடைத்தது.

"வளமான தமிழகம்; வலிமையான பாரதம் என்பதுதான் எங்களின் லட்சியம்’’ என்று வாசன் அடிக்கடி கூறுவார். அந்த வலிமையான பாரதத்தைக் கட்டமைக்கத்தான் இப்படி கட்சிமாறி மாறி கூட்டணி வைக்கிறார்போல; தந்தை தொடங்கியக் கட்சியைக் கலைத்து, காங்கிரஸுடன் இணைந்ததும் வலிமையான பாரதம் படைக்கத்தான். மீண்டும் காங்கிரஸிலிருந்து விலகி அதே கட்சியை அதே பெயரில் மீண்டும் தொடங்கியதும் வளமான தமிழகத்தைப் படைக்கத்தான். இப்போது, தாய்க் கழகத்துக்கும் தந்தையின் கொள்கைக்கும் எதிரான பி.ஜே.பி கூட்டணியில் வாசன் கட்சி இடம்பிடித்ததும் இந்திய நலனுக்காகத்தான் என்று அவர் சொல்வதையும் அப்படியே நம்பிடுவோம். இல்லையென்றால், அடுத்த தேர்தலில் அமெரிக்காவின் நலனுக்காக என்று எதையாவது சொல்லிக்கொண்டு வந்துவிடுவார். 

``வளர்ச்சி முதல் வீழ்ச்சி வரை!'' - தமிழ் மாநில காங்கிரஸின் நெடும்பயணக் கதை!

'பதவி சுகம் அனுபவித்தவர்களே கட்சி மாறுகிறார்கள்' என்று ஜி.கே.வாசன் முன்பு ஒருமுறை தெரிவித்திருந்தார். அவர் யாரைக் குறிப்பிட்டுச் சொன்னார் என்பதும் அவருக்கே வெளிச்சம்! ''அண்ணாமலை சைக்கிளைவிட பாட்ஷாவின் ஆட்டோ வேகமாக ஓடும்'' என்று ரஜினியின் வெற்றிப் படங்களோடு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஒப்பிட்டுப் பேசியிருந்தார் ஞானதேசிகன். ஆனால், உண்மையில் தமிழ் மாநில காங்கிரஸ் தற்போது ரஜினியின் எந்தப் படம் என்பது பார்ப்பவர்கள் அனைவருக்குமே தெரியும்!