Published:Updated:

`கமல் சொன்னதில் என்ன தப்பு; நான் ஆதரிக்கிறேன்’ - கே.எஸ்.அழகிரி

கலிலுல்லா.ச
`கமல் சொன்னதில் என்ன தப்பு; நான் ஆதரிக்கிறேன்’ - கே.எஸ்.அழகிரி
`கமல் சொன்னதில் என்ன தப்பு; நான் ஆதரிக்கிறேன்’ - கே.எஸ்.அழகிரி

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், `இந்தியாவின் முதல் குற்றவாளி ஒரு இந்து’ என்று கூறினார். இந்தக் கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி ஆதரவு தெரிவித்துள்ளார்.

`கமல் சொன்னதில் என்ன தப்பு; நான் ஆதரிக்கிறேன்’ - கே.எஸ்.அழகிரி


சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, `` ஏற்கெனவே நல்லகண்ணு வீட்டை காலி செய்து இருக்கிறார். கக்கன் குடும்பத்தினரும் வீட்டை காலி செய்யத் தயாராக இருக்கின்றனர். ஆனால், தமிழக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் விரைவில் அவர்களுக்கு வீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளது செய்தித்தாளில் படித்தேன். அவருக்கு என்னுடைய நன்றியைத்  தெரிவித்துக்கொள்கிறேன். கக்கன் மற்றும் நல்லகண்ணு அவர்கள் நாட்டிற்காக உழைத்தவர்கள். எனவே, அவர்களுக்கு தமிழக அரசு இலவசமாகவே விரைவில் வீடு வழங்க வேண்டும். தமிழக முதல்வருக்கு இதற்கென அதிகாரம் உள்ளது. அவர் தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டுக்காக உழைத்த இரு குடும்பங்களுக்கும் இலவசமாக விரைவில் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன்.

`கமல் சொன்னதில் என்ன தப்பு; நான் ஆதரிக்கிறேன்’ - கே.எஸ்.அழகிரி

சத்யமூர்த்தி பவனில் ஏற்கெனவே காமராஜருக்கு சிலை உள்ளது. அதன் அருகில் விரைவில் கக்கன் அவர்களுக்கு சிலை வைக்க தமிழக காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது. சந்திரசேகர் ராவ் தமிழகம் வருவது மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்கவே. எனவே, மூன்றாவது அணி அமைக்க, பேச்சுவார்த்தை நடத்த வருகிறார் என்ற பேச்சுக்கே இடமில்லை. இஸ்லாம் மதத்தில் இருக்கின்ற ஐ.எஸ் அமைப்பு போலத்தான், இந்து மதத்தில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் என்பது. ஐ.எஸ் அமைப்பு இணையாகத்தான் ஆர்.எஸ்.எஸ் இருந்து வருகிறது. இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவா் பெயா் நாதுராம் கோட்சே என்று மக்கள் நீதி மய்யத் தலைவா் கமல்ஹாசன் தவித்துள்ளாா். அவரது கருத்தை நூறு சதவிகிதம் அல்ல, ஆயிரம் சதவிகிதம் ஆதரிக்கிறேன்” என்றார். தமிழிசை, விவேக் ஓபராய், ராஜேந்திரபாலாஜி, உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கே.எஸ். அழகிரி கமல் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.  

Vikatan