Published:Updated:

43,320 நிமிடங்கள்!- டி.வி-யில் தோன்றிய நம்பர் ஒன் மனிதர் மோடி

இ.லோகேஷ்வரி
43,320 நிமிடங்கள்!- டி.வி-யில் தோன்றிய நம்பர் ஒன் மனிதர் மோடி
43,320 நிமிடங்கள்!- டி.வி-யில் தோன்றிய நம்பர் ஒன் மனிதர் மோடி

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் சுமார் 722 மணி நேரம் மோடி தொலைக்காட்சியில் தோன்றியிருக்கிறார்.

43,320 நிமிடங்கள்!- டி.வி-யில் தோன்றிய நம்பர் ஒன் மனிதர் மோடி

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், பிரசாரம், விளம்பரம், நேர்காணல் என 722 மணி நேரம், அதாவது சுமாராக 43,320 நிமிஷம் மோடி தொலைக்காட்சியில் தோன்றியிருக்கிறார். அதுவும் ஏப்ரல் முதல் தேதி முதல் 28-ம் தேதி வரைதான். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைக்காட்சியில் தோன்றிய நேரம் சுமார் 252 மணி நேரம். ராகுல் தொலைக்காட்சியில் தோன்றிய நேரத்தைவிட இவர் மூன்று மடங்கு தொலைக்காட்சியில் தோன்றியிருக்கிறார் என தொலைக்காட்சிப் பார்வையாளர் கண்காணிப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

43,320 நிமிடங்கள்!- டி.வி-யில் தோன்றிய நம்பர் ஒன் மனிதர் மோடி

ராகுல் காந்திக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் பி.ஜே.பி தலைவர் அமித் ஷா, 124 மணி நேரமும், காங்கிரஸின் பிரியங்கா காந்தி 84 மணி நேரமும் தொலைக்காட்சியில் தோன்றியிருக்கிறார்கள். பி.ஜே.பி ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் விளம்பரத்துக்காக மட்டும் ஏறத்தாழ 5,200 கோடி ரூபாய் விளம்பரங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளது. இது முந்தைய காங்கிரஸ் ஆட்சியைவிட ஏறத்தாழ 51 சதவிகிதம் அதிகம். தேர்தலுக்கு மட்டும் பி.ஜே.பி எவ்வளவு தொகை செலவு செய்திருக்கும் என்பது தேர்தலுக்குப் பிறகு தெரியவரும்.

Vikatan