Published:Updated:

`எங்கள் முன்னால் எடப்பாடி எம்மாத்திரம்?'- உதயநிதி பேச்சு

`எங்கள் முன்னால் எடப்பாடி எம்மாத்திரம்?'- உதயநிதி பேச்சு

`எங்கள் முன்னால் எடப்பாடி எம்மாத்திரம்?'- உதயநிதி பேச்சு

`எங்கள் முன்னால் எடப்பாடி எம்மாத்திரம்?'- உதயநிதி பேச்சு

`எங்கள் முன்னால் எடப்பாடி எம்மாத்திரம்?'- உதயநிதி பேச்சு

Published:Updated:
`எங்கள் முன்னால் எடப்பாடி எம்மாத்திரம்?'- உதயநிதி பேச்சு
`எங்கள் முன்னால் எடப்பாடி எம்மாத்திரம்?'- உதயநிதி பேச்சு

``எடப்பாடிக்கு இந்த முதலமைச்சர் பதவி மோடி போட்ட பிச்சை. நாம மோடியையே வீட்டுக்கு அனுப்பியாச்சு. இவரெல்லாம் எம்மாத்திரம்" என்று சூலூர் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு பிரசாரம் மேற்கொண்டார். மாலை 4 மணிக்கு கணியூரிலிருந்து பிரசாரம் ஆரம்பிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்றார்போல் மக்களையும் திரட்டிவிட்டார்கள். ஆனால், 6 மணியைக் கடந்தும்  உதயநிதி வரவில்லை. ஆடல்- பாடல் நிகழ்ச்சியில் மக்கள் கவனத்தை மடைமாற்றியிருந்தார்கள். அதனருகிலேயே இரண்டு பேண்டு வாத்திய செட்கள்  தனித்தனியாக போட்டிப்போட்டுக் கொண்டு இசைக்க... மக்கள் தலைவலியில் தவித்தார்கள். ஆனாலும் உதயநிதியைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களை அந்த இடத்திலேயே நிற்கச் செய்தது. எப்போ வருவார், மேடை ஏறுவாரா? என்று பெண்கள் ஒருவருக்கொருவர்  கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒருவழியாக மணி 7-ஐ நெருங்கும்போது பிரசார இடத்துக்கு வந்து சேர்ந்தார் உதயநிதி. அவரைக் கண்டதும் ஒரே ஆரவாரம். கூட்டத்திலிருந்து கொடுக்கப்பட்ட மாலையை வாங்கி தன் கழுத்திலிட்டு திருப்பிக் கொடுத்தார். முடிந்தவரை வேனிலிருந்து எக்கி தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் கை கொடுத்து உற்சாகப்படுத்திவிட்டு மைக் பிடித்தார், ``எனக்கு கொஞ்சம் உடல்நிலை சரி இல்லை. உங்களைப் பார்க்க வர முடியாமல் போய்விடுமோ என்று நினைத்தேன். இந்த எழுச்சியையும் அன்பையும் பார்க்கும்போது உடம்பு சரியாகிருச்சு;  தெம்பு வந்துருச்சு. நான் சுற்றுலாவுக்காக வெளிநாட்டுக்குப் போய்விட்டு துபாய் வழியா வந்தேன். அங்கே  ஒருத்தர், என் கையைப் பிடிச்சுக்கிட்டு மோடியை வீட்டுக்கு அனுப்பினதுக்கு நன்றி'ன்னார். துபாய் வரைக்கும் மோடியைப் பத்தி தெரிஞ்சிருக்கு. மோடியையே வீட்டுக்கு அனுப்பினோமே… இந்த எடப்பாடியெல்லாம் எம்மாத்திரம். எடப்பாடி இல்லை அவர் டெட்பாடி… சவப்பெட்டியில் நாலு மூலையிலும் ஆணி அடிப்போம்ல, அப்படி எடப்பாடி ஆட்சியை சவப்பெட்டியில அடைக்கிறதுக்காகத்தான் இந்த நாலு தொகுதிலயும் இடைத்தேர்தல் நடக்குது.

இடைத்தேர்தல் நடந்து முடிந்த 18 தொகுதிகளிலும் உதயசூரியன் வெற்றி உறுதியாகிருச்சு. இந்த நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட்டால் ஜூன் 3 கருணாநிதி பிறந்தநாள் அன்று தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக வாய்ப்பிருக்கு. சூலூரில் பொங்கலூர் பழனிச்சாமிக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்து தலைவர் ஸ்டாலினை முதல்வர் நாற்காலியில் உட்கார வைப்போம். உங்கள் ஆட்சியின் சாதனைகளைச் சொல்லுங்கள் என்று எடப்பாடியிடம் கேட்டால், என் ஆட்சியில் அதிகமான போராட்டங்கள் நடந்திருக்கின்றன' என்று பத்திரிகையாளர்களிடம் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. நான் இரண்டு வருஷமா முதலமைச்சரா இருக்கிறேனே அதுவே சாதனைதான் என்கிறார். இவருக்கா மக்கள் ஓட்டு போட்டார்கள்?  இவர் முதல்வராக வேண்டுமென்றா மக்கள் ஓட்டு போட்டார்கள். இவருக்கு யாராவது ஓட்டு போடுவார்களா. அம்மா ஆட்சி… அம்மா ஆட்சி… என்கிறார்களே... அம்மா எப்படி இறந்தார் என்று இவர்கள் சொன்னார்களா?

ஜெயலலிதா இறந்த பிறகு, நடந்த கூத்தெல்லாம் உங்களுக்குத் தெரியும். எடப்பாடி எப்படி முதலமைச்சரானார் என்பதும் உங்களுக்குத் தெரியும். பத்து மாதக் குழந்தை மாதிரி தவழ்ந்துபோய் சசிகலா காலைப்பிடிச்சு முதல்வரானவர் இவர். மே 19-ம் தேதி, இவரது ஆட்சியை அகற்றும் நாள். தலைவர் ஆட்சி வந்ததும் முதல் கையொப்பம் நீட் தேர்வு ரத்துக்காகத்தான். கல்விக்கடன், நெசவாளர் கடன் ரத்து செய்யப்படும் என்று ஏராளமான வாக்குறுதிகளைச் சொல்லியிருக்கும் நாங்கள், `செய்வதைத்தான் சொல்வோம். சொல்வதைத்தான் செய்வோம்.' விசைத்தறி தொழில் லாபகரமாக நடைபெற பாதுகாப்புக் குழு அமைக்கப்படும். தற்போதுள்ள மின் கட்டணம் வரைமுறை செய்யப்படும் என்றவர், `நான் உரிமையோடு கேட்கிறேன்… உங்கள் வீட்டுப்பிள்ளையாக கேட்கிறேன்… உங்கள் தலைவருடைய மகனாக கேட்கிறேன். கலைஞரின் பேரனாக கேட்கிறேன்.. மோடியை வீட்டுக்கு அனுப்பியதுபோல எடப்பாடி பழனிசாமியையும் வீட்டுக்கு அனுப்புங்கள். மக்கு முதலமைச்சர் தேவையா.. எடப்பாடிக்கு இந்த முதலமைச்சர் பதவி மோடி போட்ட பிச்சை.! நாம மோடியையே வீட்டுக்கு அனுப்பியாச்சு. இவரெல்லாம் எம்மாத்திரம்' என்றவர் சற்று இடைவெளிவிட்டு, ``என்ன நான் சொல்றது. எடப்பாடியை வீட்டுக்கு அனுப்பலாமா?''  என்று மக்களைப் பார்த்துக்கேட்க…  ``கூட்டத்திலிருந்து அனுப்பலாம்… அனுப்பலாம்’' என்ற கோரஸ் குரல்கள் ஒலிக்க நம்பிக்கையோடு கையை அசைத்தபடி அடுத்த ஸ்பாட்டுக்கு கிளம்புகிறார், உதயநிதி.