Published:Updated:

`யார் யார்... ஜெயிப்பா?' - `தர்பார்' பிரேக்கில் ரஜினியின் டிஸ்கஷன்

`யார் யார்... ஜெயிப்பா?' - `தர்பார்' பிரேக்கில் ரஜினியின் டிஸ்கஷன்
`யார் யார்... ஜெயிப்பா?' - `தர்பார்' பிரேக்கில் ரஜினியின் டிஸ்கஷன்

`தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் சூழல்கள் எப்படியிருக்கும்?' என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறார் ரஜினி. இதற்காகக் கடந்த சில நாள்களாக அரசியல் பிரமுகர்கள், விமர்சகர்கள் என அனைத்துத் தரப்பினரையும் அழைத்து மணிக்கணக்கில் விவாதித்து வருகிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு வாரகால அவகாசம் இருக்கிறது. `தேர்தலுக்குப் பிறகான சூழல்கள் எப்படியிருக்கும்?' என்பதை அறிந்துகொள்வதில் தீவிரம் காட்டி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். `கருத்துக் கணிப்புகள் சொல்வதைவிட களநிலவரம் எப்படியிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்' என்கின்றனர் மக்கள் மன்ற நிர்வாகிகள். 

`யார் யார்... ஜெயிப்பா?' - `தர்பார்' பிரேக்கில் ரஜினியின் டிஸ்கஷன்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்துக்குக் கடந்த ஓரிரு நாள்களாக அரசியல் பிரமுகர்களின் வருகை அதிகரித்தபடியே இருக்கிறது. `சட்டமன்றத் தேர்தல் வரும்போது ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார்' என அவரின் ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர். லைகா தயாரிப்பில் முருகதாஸ் இயக்கும் `தர்பார்' படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு வரும் 29-ம் தேதி தொடங்க இருப்பதாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது லைகா. நாடாளுமன்றத் தேர்தலைவிடவும் தமிழக அரசைத் தீர்மானிக்கக்கூடிய 22 சட்டமன்றத் தொகுதிகளின் முடிவுகளும் மே 23 அன்று வெளியாக இருக்கிறது. `தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அரசியல் சூழல்கள் எப்படியிருக்கும்?' என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறார் ரஜினி. இதற்காகக் கடந்த சில நாள்களாக அரசியல் பிரமுகர்கள், விமர்சகர்கள் என அனைத்துத் தரப்பினரையும் அழைத்து மணிக்கணக்கில் விவாதித்து வருகிறார். இன்று காலை ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சியின் நிறுவனர் பொன்ராஜ். 

`யார் யார்... ஜெயிப்பா?' - `தர்பார்' பிரேக்கில் ரஜினியின் டிஸ்கஷன்

காலை 9.30 மணிக்குத் தொடங்கிய விவாதம் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நீண்டுள்ளது. அரசியல் பிரமுகர்களுடனான சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து, ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளிடம் கேட்டோம். ``சட்டமன்றத்துக்குத் தேர்தல் வரும்போது புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் ரஜினி. அதில் எந்தவித மாற்றமும் இல்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான சூழல்களைப் பற்றித்தான் நண்பர்களுடனான சந்திப்பில் விவாதிக்கிறார். அதிலும், தமிழக அரசியலில் அவர் தீவிர ஆர்வம் காட்டுவதால், அரசியல் சூழ்நிலைகள் எப்படியிருக்கிறது என்பதைக் கேட்டறிந்தார்.

`யார் யார்... ஜெயிப்பா?' - `தர்பார்' பிரேக்கில் ரஜினியின் டிஸ்கஷன்

இன்று நடந்த விவாதத்தில், `தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டிலும் மத்தியிலும் என்ன மாதிரியான மாற்றங்கள் வரும், மற்ற மாநிலங்களில் எந்தெந்தக் கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும், மக்கள் மனநிலை எப்படியிருக்கிறது, தேர்தல் முடிவுகள் எதை நோக்கிப் போகும்' என ஏராளமான கேள்விகளைக் கேட்டிருக்கிறார். `இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், யார் தோற்பார்கள், கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது, உண்மையான நிலவரம் எப்படியிருக்கிறது?' என விசாரித்தார். இதில், தனக்குக் கிடைத்த தகவல்களையும் பரிமாறிக் கொண்டார். இந்தச் சந்திப்புகளில், `என்ன செய்தால் நதிநீர் இணைப்பு சாத்தியமாகும், இதை மட்டும் செயல்படுத்திவிட்டால் அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும்' என நம்பிக்கையோடு பேசியிருக்கிறார். 

`யார் யார்... ஜெயிப்பா?' - `தர்பார்' பிரேக்கில் ரஜினியின் டிஸ்கஷன்

`தர்பார்' அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு இன்னும் 13 நாள்கள் இருப்பதால் அதற்குள் அரசியல் கட்சிக்கான பணிகளுக்கு வடிவம் கொடுத்துவிட வேண்டும் என நினைக்கிறார். தமிழக சட்டமன்றத்தில் சூழல்கள் மாறிவிட்டால், அடுத்தகட்ட அறிவிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிடுவதற்குத் திட்டமிட்டிருக்கிறார். `போர் வரும்போது வருவேன்' என அவர் கூறியதை விரைவில் சாத்தியப்படுத்துவார். மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் சில ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்" என்கின்றனர் நிதானமாக. 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு