Published:Updated:

`பிரக்யாவை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்' - காந்தி விவகாரத்தில் கொதித்த மோடி!

`பிரக்யாவை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்' - காந்தி விவகாரத்தில் கொதித்த மோடி!
`பிரக்யாவை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்' - காந்தி விவகாரத்தில் கொதித்த மோடி!

அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார், அதில், `சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே' என அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரின் பேச்சுக்கு சர்ச்சைகள் ஏற்பட்டு வரும் அதேவேளையில் சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர். குறிப்பாகப் பா.ஜ.க, அ.தி.மு.க சார்பிலிருந்து அதிக எதிர்ப்புகள் வந்தன. ஒருகட்டத்தில் மோடியே இந்த விவகாரத்தில் கமலை சாடும் விதமாகப் பதிலளித்திருந்தார். போதாக்குறைக்குக் கமல் மீது இரண்டு வழக்குகளும் பதியப்பட்டன.

`பிரக்யாவை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்' - காந்தி விவகாரத்தில் கொதித்த மோடி!

இதற்கிடையே, திருப்பரங்குன்றம் பிரசாரத்தில் இந்த சர்ச்சைகளுக்கு கமல் விளக்கம் அளித்தார். அதில் ``நான் கூறியது சரித்திர உண்மை. உண்மைகள் கசக்கும். தீவிரவாதி என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள்" எனக் கூறியிருந்தார். இந்நிலையில், போபால் மக்களவைத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பிரக்யா சிங்கிடம் கமலின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ``நாதுராம் கோட்சே ஒரு தேசப்பக்தராக இருந்தார். இருக்கிறார். இன்னும் இருப்பார். அவரைத் தீவிரவாதி என்று சொல்பவர்கள் உற்றுநோக்க வேண்டும். கோட்சேவை தீவிரவாதி என்று அழைத்தவர்களுக்கு இந்தத் தேர்தலில் தக்க பதிலடி தரப்படும்" எனக் கூறினார். கோட்சேவை தேசபக்தர் எனச் சொல்லி காந்தியை அவமதிக்கும் வகையில் அவரது பேச்சு அமைந்தது.

`பிரக்யாவை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்' - காந்தி விவகாரத்தில் கொதித்த மோடி!

பிரக்யா கூறிய அரைமணி நேரத்துக்குள்ளாகவே பா.ஜ.க மேலிடம் அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்தது. பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் நரசிம்ஹ ராவ், ``பா.ஜ.க இந்தக் கருத்துடன் ஒத்துப் போகாது. இப்படி ஒரு கருத்தை வெளியிட்ட பிரக்யாவை நாங்கள் கண்டிக்கிறோம். இதுகுறித்து கட்சி சார்பில் விளக்கம் கேட்கப்படும். இப்படி ஒரு கருத்தை வெளியிட்டதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்" எனக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதே கருத்தைதான் அமித் ஷாவும் தெரிவித்திருந்தார். சொந்தக் கட்சியில் இருந்தே எதிர்ப்பு வந்ததைத் தொடர்ந்து, ``இது என்னுடைய சொந்தக் கருத்து. யாரையும் புண்படுத்தும் நோக்கில் இந்தக் கருத்தை நான் சொல்லவில்லை. அப்படி யாராவது காயப்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்கிறேன். காந்தி இந்த நாட்டுக்கு என்ன செய்தார் என்பதை யாரும் மறக்கமுடியாது" எனக் கூறினார்.

`பிரக்யாவை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்' - காந்தி விவகாரத்தில் கொதித்த மோடி!

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து நியூஸ் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த பிரதமர் மோடி, பிரக்யாவுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்ததுடன் ``காந்தியை அவமதித்த பிரக்யாவை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். அவரது பேச்சு மன்னிக்க முடியாத குற்றம்" எனக் கூறியுள்ளார். இதற்கிடையே, காந்தி குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்த பிரக்யா சிங் உள்ளிட்ட 3 பேருக்கு பா.ஜ.க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேபோல் காந்தி பாகிஸ்தானின் தந்தை எனக் கூறிய அணில் சவுமித்ரா என்பவர் பா.ஜ.க-வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Vikatan