Published:Updated:

``சேவை நோக்கத்துக்காகவே தேர்தல் பணிகளில் ஈடுபட்டேன்!'- நாடோடிகள் புகழ் அபிநயா

``சேவை நோக்கத்துக்காகவே தேர்தல் பணிகளில் ஈடுபட்டேன்!'- நாடோடிகள் புகழ் அபிநயா
``சேவை நோக்கத்துக்காகவே தேர்தல் பணிகளில் ஈடுபட்டேன்!'- நாடோடிகள் புகழ் அபிநயா
``சேவை நோக்கத்துக்காகவே தேர்தல் பணிகளில் ஈடுபட்டேன்!'- நாடோடிகள் புகழ் அபிநயா


 

டந்த ஆண்டு இறுதியில் தெலங்கானா மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அப்போது மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்குப் பல்வேறு சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டது, அம்மாநிலத் தேர்தல் ஆணையம். கேட்கும் திறன் மற்றும் பேச்சுத் திறனிலுள்ள குறைபாடுகளைப் புறந்தள்ளி சினிமாவில் சாதித்தவர், நடிகை அபிநயா. இவர், தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பிராண்டு அம்பாசடராக நியமிக்கப்பட்டார். இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. அதனால், தற்போது முடிந்திருக்கும் தெலங்கானா மாநில நாடாளுமன்றத் தேர்தலிலும் பிராண்டு அம்பாசடராகப் பணியாற்றியிருக்கிறார், அபிநயா.

இதுகுறித்து அவரிடம் வாட்ஸ்அப் வாயிலாக உரையாடினோம்.``மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் வாக்களிக்க வரணும். அது அவர்களின் உரிமை. இதை வலியுறுத்தி, நடந்து முடிந்திருக்கும் இரு தேர்தலிலும் தெலங்கானா மாநில தேர்தல் ஆணையம் நிறைய நல்ல முயற்சிகளைச் செய்தாங்க. இப்போ நாடாளுமன்றத் தேர்தலிலும் என்னை பிராண்டு அம்பாசடரா நியமிச்சிருந்தாங்க. இது பெருமையான விஷயம். தேர்தல் ஆணையத்தினரின் ஏற்பாட்டில், என்னாலான சில முயற்சிகளைச் செய்தேன். குறிப்பா, பல ஆயிரம் பேர் கலந்துகிட்ட  பெரிய நடைப்பயண நிகழ்வையும் நடத்தினோம். அதில் நிறைய பிரபலங்களுடன், மாற்றுத்திறனாளிகளும் கலந்துகிட்டாங்க. தவிர, பல கருத்தரங்கிலும் கலந்துகிட்டு சைகை மொழியில் மாற்றுத்திறனாளிகளிடம் விழிப்புணர்வு கொடுத்தேன். இவை முழுக்கவே சேவை நோக்கத்துக்காகவே செய்தேன். 

``சேவை நோக்கத்துக்காகவே தேர்தல் பணிகளில் ஈடுபட்டேன்!'- நாடோடிகள் புகழ் அபிநயா

மாற்றுத்திறன் வாக்காளர்களுக்கு இலவசப் போக்குவரத்து மற்றும் வீல் சேர் வசதி உட்பட பல ஏற்பாடுகளை மாநிலத் தேர்தல் ஆணையம் செய்தாங்க. இதனால் இப்போ முடிந்திருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளின் வாக்கு சதவிகிதம் ரொம்பவே அதிகரிச்சிருக்கு. இதனால் எனக்கும், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும் ரொம்பவே மகிழ்ச்சி. கேட்கும்திறன் மற்றும் பேச்சுத் திறன் குறைபாடுள்ளவங்க, தங்களுக்குப் பிடித்தத் துறையில் சாதிக்கணும். அதற்கு ஊக்கம் கொடுக்கும் வகையில விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருக்கேன். அதுக்கான முயற்சிகள் நடந்துகிட்டிருக்கு. தொடர்ந்து நடிப்பதுடன், சமூக சேவைகள் செய்யணும்ங்கிற ஆர்வம் அதிகரிச்சிருக்கு" என்று உற்சாகமாகக் கூறுகிறார், அபிநயா.