Published:Updated:

`மிகப்பிரமாதம்' - மோடியின் பிரஸ்மீட்டைக் கிண்டல் செய்த ராகுல்காந்தி!

`மிகப்பிரமாதம்' - மோடியின் பிரஸ்மீட்டைக் கிண்டல் செய்த ராகுல்காந்தி!
`மிகப்பிரமாதம்' - மோடியின் பிரஸ்மீட்டைக் கிண்டல் செய்த ராகுல்காந்தி!

`வெற்றிகரமாக பா.ஜ.க ஆட்சியின் தோல்விகளை மக்களிடம் கொண்டு சேர்த்துவிட்டோம். அவரது வெற்றி வாய்ப்புக்கான கதவுகளை அடைக்க அவரே காரணமாகிவிட்டார்' என்று மோடி குறித்து ராகுல் பேசியுள்ளார். 

`மிகப்பிரமாதம்' - மோடியின் பிரஸ்மீட்டைக் கிண்டல் செய்த ராகுல்காந்தி!

மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. தேர்தல் பரப்புரை ஓய்ந்ததையடுத்து பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் ஒரே நேரத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். மோடி பத்திரிகையாளர்களைச் சந்தித்தது பேசுபொருளாகியது. ``நான் ஒரு நேர்மையான பாதுகாவலன். கட்சித் தலைவர்தான் எனக்கு எல்லாமும்'' என்றார் மோடி. அமித்ஷா பேசுகையில், ``நான் உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறேன். பிரதமர் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் என்று அவசியமில்லை'' எனக்கூறினார்.

`மிகப்பிரமாதம்' - மோடியின் பிரஸ்மீட்டைக் கிண்டல் செய்த ராகுல்காந்தி!

இது தொடர்பாக ராகுல்காந்தி ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், ``வாழ்த்துகள் மோடி ஜி. மிகப்பிரமாதமான பிரஸ்மீட். அடுத்த முறை மிஸ்டர் ஷா ஒரு சில கேள்விகளுக்குப் பதிலளிக்க உங்களை அனுமதிக்கலாம். வெல்டன்!' என்று பதிவிட்டுள்ளார். தவிர பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ராகுல், ``இது ஒரு முன்னுதாரணமற்ற ஒரு நிகழ்வு. மோடியின் பிரஸ்மீட்டுக்குள் நுழையவிடாமல் சில பத்திரிகையாளர்கள் தடுக்கப்பட்டதாக எனக்குத் தகவல் வந்தது. நான் இங்கிருந்துகொண்டே அவருக்குச் சில கேள்விகளைக் கேட்கிறேன்.

ஏன் நீங்கள் ரஃபேல் தொடர்பான எனது கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுக்கிறீர்கள்; என் விவாதத்துக்கு ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள் என்பதைத் தெளிவுபடுத்துங்கள். பா.ஜ.க வன்முறையை ஆதரிக்கும் கட்சி. அகிம்சையை அல்ல. மோடி என்னவேண்டுமானாலும் கூறலாம். ஆனால், அதையே மற்ற கட்சிகள் கூறினால் தண்டனை. நாங்கள் எதிர்க்கட்சியாக சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம். மோடி என்ற பிம்பத்தை எங்களால் முடிந்த அளவுக்குக் கலைத்து, மக்களிடம் இந்த அரசின் தோல்விகளைக் கொண்டுசென்றுவிட்டோம். பா.ஜ.க-வின் வெற்றி வாய்ப்புக் கதவுகளை நாங்கள் 90 சதவிகிதம் அடைத்துவிட்டோம். மீதியை மோடியே அடைத்துவிட்டார்'' என்றார் கிண்டலாக. 

முன்னாள் மத்திய அமைச்சர் ப,சிதம்பரம், ``மக்களவைத்தேர்தல் முடிவுகள் பா.ஜ.கவுக்கு பாதகமானால், அமித்ஷாவை காரணம் காட்டவே மோடி செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அமைதியிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்பதற்கு மோடியின் இன்றைய பிரஸ்மீட் சாட்சி'' என்று பதிவிட்டுள்ளார். 

Vikatan