Published:Updated:

எப்படி இருந்தது பிரதமர் பிரஸ்மீட்? - டெலிகிராஃப் பத்திரிகையின் வித்தியாசமான விமர்சனம்!

எப்படி இருந்தது பிரதமர் பிரஸ்மீட்? - டெலிகிராஃப் பத்திரிகையின் வித்தியாசமான விமர்சனம்!
எப்படி இருந்தது பிரதமர் பிரஸ்மீட்? - டெலிகிராஃப் பத்திரிகையின் வித்தியாசமான விமர்சனம்!

பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு நேற்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். உடன், பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷாவும் இருந்தார். பெரும்பாலான கேள்விகளுக்கு அமித்ஷாவிடம் கேளுங்கள் என்று கூறிவிட்டு பிரதமர் பதில் அளிக்காமல்  ஒதுங்கிக்கொண்டார். நேற்று முதலே பிரதமரின் இந்தச் செயல்  விவாதத்துக்குள்ளானது. இந்நிலையில், கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் டெலிகிராப் பத்திரிகை பிரதமரின் பிரஸ்மீட்டை வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளது. 

எப்படி இருந்தது பிரதமர் பிரஸ்மீட்? - டெலிகிராஃப் பத்திரிகையின் வித்தியாசமான விமர்சனம்!

கடந்த 5 ஆண்டுகளில் மோடி , செய்தியாளர்களுக்கு மொத்தமாகப் பேட்டியளிப்பது இதுவே முதன்முறை. எனவே, டெலிகிராப்பின் எடிட்டோரியல் குழு, மோடியின் பேட்டிக்கு முதல் பக்கத்தில் இடம் ஒதுக்கியிருந்தது. ஆனால், செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் நேரடியாக முறையாகப் பதில் அளிக்கவில்லை. அமித் ஷாவிடம் கேள்விகளைத் தள்ளிவிட்டார். இதைச் சுட்டிக்காட்டும் வகையில், டெலிகிராப் முன் பக்கத்தில் மோடி அமித்ஷாவை நோக்கி கை காட்டும் 7 புகைப்படங்களைப் பல்வேறு முக பாவனைகளுடன் பிரசுரித்துள்ளது.

புகைப்படங்களுக்கு மேலே, பிரதமர் வாய் திறக்கவில்லை என்பதைக் குறிக்கும் வகையில், ஹாரன் புகைப்படத்தை கிராஸ் குறியீட்டுடன் டெலிகிராப் வெளியிட்டுள்ளது. பிரதமர் பேசாத காரணத்தால்,  அவரின் பேட்டிக்கு என்று ஒதுக்கப்பட்ட மொத்த இடத்தையும் காலியாக விட்டுவிட்டது. அதோடு, 'பிரதமரின் பிரஸ்மீட் தேசத்தைப் பேச விடாமல் செய்துவிட்டது. 1817 நாள்கள் கழித்து மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதிக்குப் பிறகு செய்தியாளர்களைப் பிரதமர் மோடி இப்போதுதான் சந்திக்கிறார்' என்று புகைப் படங்களின் மேல் கேப்சனாக டெலிகிராப் பத்திரிகை தெரிவித்துள்ளது. 

அதோடு, இணையபதிப்பில் 'மோடி ஒரு மௌனப்படம்' என்றும் டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. 

Vikatan