Published:Updated:

`` `ஜானு... அம்மு வீட்டுக்கு வருது; ஸ்பெஷல் சமையல் செய்!'னு சொன்ன எம்.ஜி.ஆர்!" - விஜயகுமாரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`` `ஜானு... அம்மு வீட்டுக்கு வருது; ஸ்பெஷல் சமையல் செய்!'னு சொன்ன எம்.ஜி.ஆர்!" - விஜயகுமாரி
`` `ஜானு... அம்மு வீட்டுக்கு வருது; ஸ்பெஷல் சமையல் செய்!'னு சொன்ன எம்.ஜி.ஆர்!" - விஜயகுமாரி

முதல்வரா இருந்தபோதும், வீட்டு வேலைகள் செய்வதை அக்கா வழக்கமா வச்சிருந்தாங்க. `என் வீட்டு வேலையை நான் செஞ்சா என்ன தப்பு'னு கேட்பாங்க. அண்ணனின் மறைவுக்குப் பிறகு, அக்காவுக்கு உடல்நிலை சரியில்லாம போச்சு. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ம்.ஜி.ஆர் சினிமாவிலும் அரசியலிலும் ஜொலித்த காலங்களில், அவருக்கு நிழலாக இருந்து கவனித்துக்கொண்டவர், அவரின் துணைவியார் வி.என்.ஜானகி. அரசியலில் நாட்டமில்லாதவர் ஜானகி. ஆனால், எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, சிலகாலம் முதல்வர் பதவியை வகித்தார் ஜானகி. எனவே, தமிழக அரசியல் வரலாற்றில் இவரின் பெயரும் நிலைத்துவிட்டது. வி.என்.ஜானகியின் நினைவு தினமான இன்று (மே 19), அவருடன் பழகிய நினைவுகளைப் பகிர்கிறார் நடிகை விஜயகுமாரி.

``எம்.ஜி.ஆர் என் உடன்பிறவா அண்ணன் என்பது பலருக்கும் தெரியும். அவர் துணைவியார் ஜானகியை நான் அக்கானுதான் கூப்பிடுவேன். எம்.ஜி.ஆர் உச்ச நடிகராகவும் முதல்வராகவும் ஜொலித்த காலங்களில் மிக எளிமையாகவே வாழ்ந்தார் ஜானகி அக்கா. வீட்டு வேலைக்குப் பணியாளர்கள் இருந்தாலும், அக்காவும் நிறைய வேலைகளைச் செய்வாங்க. எம்.ஜி.ஆரின் சினிமா, அரசியல் பணிகள்ல அக்கா தலையிடவே மாட்டாங்க. அவங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம், எம்.ஜி.ஆர் மற்றும் குடும்பம் மட்டுமே!  

`` `ஜானு... அம்மு வீட்டுக்கு வருது; ஸ்பெஷல் சமையல் செய்!'னு சொன்ன எம்.ஜி.ஆர்!" - விஜயகுமாரி

ஒவ்வொரு பொங்கல் பண்டிகையின்போதும் எம்.ஜி.ஆர் வீட்டுக்குப் போவேன். அவர் எங்களுக்கு 100 ரூபாய் கொடுப்பார். ஜானகி அக்கா எனக்கு ஒரு புடவை கொடுப்பார். நானும் அக்காவுக்குப் புடவை கொடுப்பேன். எம்.ஜி.ஆர் குடும்பத்தில் நானும் ஓர் அங்கமா இருந்தேன். ஒருநாள் அதிகாலையில 5 மணிக்கு எனக்குப் போன் பண்ணினார் எம்.ஜி.ஆர். வழக்கத்துக்கு மாறாக, `சம்பந்தி... என்ன பண்றீங்க? மீதி விஷயத்தை அக்கா சொல்வாங்க'னு சொல்லிட்டு போனை ஜானகி அக்காகிட்ட கொடுத்திட்டார். எனக்கு ஒண்ணுமே புரியலை. அப்புறம் பேசிய ஜானகி அக்கா, `உன் பையனுக்கு எங்க பேத்தியைக் கல்யாணம் பண்ணிக்கொடுக்கலாம்னு ஆசைப்படறோம்'னு சொன்னார். அது சரிவராதுனு நான் சொன்னதும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகி இருவருமே என் சூழ்நிலையைக் கனிவோடு புரிஞ்சுகிட்டாங்க.  

`` `ஜானு... அம்மு வீட்டுக்கு வருது; ஸ்பெஷல் சமையல் செய்!'னு சொன்ன எம்.ஜி.ஆர்!" - விஜயகுமாரி

எம்.ஜி.ஆர் சுடப்பட்டபோதும், பல வருடங்களுக்குப் பிறகு அப்போலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோதும். தினமும் ஜானகி அக்காவுக்குச் சாப்பாடு கொண்டுபோய் கொடுத்துட்டு, சிகிச்சையில் இருந்த எம்.ஜி.ஆர் அண்ணனைப் பார்த்துட்டு வருவேன். ஜானகி அக்காவுக்கு ஆன்மிகத்துல அதிக ஆர்வம். அவங்க என்னை நிறைய கோயில்களுக்குக் கூட்டிப்போவாங்க. அவர் வீட்டுக்கு நான் அடிக்கடிப் போவேன். அவங்க என் வீட்டுக்கும் அடிக்கடி வருவாங்க. நேரம் போவதே தெரியாம, நிறைய விஷயங்களைப் பத்திப் பேசுவோம். ஆனால், எங்க உரையாடலில் சினிமா, அரசியல் விஷயங்கள் அதிகம் இடம்பெறாது. 

நான் எம்.ஜி.ஆர் வீட்டுக்குப் போனால், `வா! சாப்பிடலாம்'னு சொல்லுவாங்க ஜானகி அக்கா. `அக்கா, கருவாடு சமைச்சிருக்கீங்களா'னு கேட்பேன். `நீயும் உன் அண்ணனும் கருவாடு இல்லைன்னா சாப்பிட மாட்டீங்களா'னு கேட்பாங்க. எனக்காக ஸ்பெஷலா சமைச்சுப் பரிமாறுவாங்க. அக்காவுக்கு அப்போ நடிப்பில் ஆர்வமில்லைனாலும், சினிமா பார்க்க ரொம்ப ஆசைப்படுவாங்க. `நாளைக்குப் புதுப்படம் ரிலீஸாகுது. நீ கண்டிப்பா வரணும்'னு என்னை வலியுறுத்திக் கூப்பிடுவாங்க. என் ஷூட்டிங் பணிகள் பாதிக்காத வகையில், முதல்நாள் முதல் காட்சினு அக்காவும் நானும் நிறைய படங்களுக்குத் தோழிகளுடன் போவோம். சிறப்புச் சலுகைகளைப் பயன்படுத்தாமல், சாதாரண மக்கள்போல படம் பார்ப்போம். 

`` `ஜானு... அம்மு வீட்டுக்கு வருது; ஸ்பெஷல் சமையல் செய்!'னு சொன்ன எம்.ஜி.ஆர்!" - விஜயகுமாரி

எந்தப் பாதுகாப்பும் இல்லாம, அக்காவும் நானும் அடிக்கடி கார்ல பயணம் செய்வோம். சினிமா, கட்சிப்பணினு எம்.ஜி.ஆர் அண்ணன் தன் வேலைகளை முடிச்சுட்டு பலநாள்கள் வீட்டுக்குத் தாமதமா வருவார். அப்போ ஜானகி அக்கா, எனக்கு போன் பண்ணுவார். `எனக்குத் தூக்கம் வருது'னு சொன்னாலும், அடம்பிடிச்சு எம்.ஜி.ஆர் வரும்வரை என்கிட்ட மணிக்கணக்கில் கதை பேசுவார். 

`ஜானு (ஜானகி)... இந்தப் பக்கம் ஷூட்டிங் வரும் அம்மு (ஜெயலலிதா), நம்ம வீட்டுக்குச் சாப்பிட வருது. அம்முவுக்கு ஸ்பெஷலா சமைச்சு வை'னு அக்காகிட்ட சொல்லுவார் எம்.ஜிஆர். கணவரின் சொல்லே அக்காவுக்கு வேதவாக்கு. ஜானகி அக்காவும் சமைச்சு வைப்பார். ஜானகி அக்கா தன் தம்பிக் குழந்தைகளை ரொம்பக் கட்டுக்கோப்புடன் வளர்த்து ஆளாக்கினார். எம்.ஜி.ஆர் கடைசி காலகட்டத்தில் உடல்நிலை சரியில்லாம இருந்தார். அப்போ குளிப்பாட்டிவிடுறதுல இருந்து அவரைக் குழந்தைபோல கவனிச்சுகிட்டாங்க ஜானகி அக்கா. 

`` `ஜானு... அம்மு வீட்டுக்கு வருது; ஸ்பெஷல் சமையல் செய்!'னு சொன்ன எம்.ஜி.ஆர்!" - விஜயகுமாரி

கருத்து வேறுபாடு காரணமாக என் கணவரைப் பிரிஞ்சு வந்த பிறகு, நான் தனிமையில் ரொம்பவே வேதனையிலும் கஷ்டத்திலும் இருந்தேன். அப்போ எனக்குப் பக்கபலமா இருந்தார் ஜானகி அக்கா. எனக்கு வழிகாட்டியாக இருந்து, மீண்டும் நான் நடிக்கிறதுக்கு ஊக்கம் கொடுத்தார். பிறகு, எனக்கு ஒரு தாய்போல அரவணைப்புடன் இருந்தார். எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்தபோது, ஒவ்வொரு நாளும் எனக்கு போன் பண்ணிப் பேசுவார் ஜானகி அக்கா. அவரின் கஷ்ட காலத்தில் நானும் ஆறுதலாக இருந்தேன். அக்கா ரொம்ப இரக்கக் குணம் கொண்டவங்க. யார் உதவினு கேட்டாலும், முன்வந்து உதவி செய்வார்" என்கிறார் விஜயகுமாரி.

வி.என்.ஜானகி வழங்கிய நிலத்தில்தான் தற்போதைய அ.தி.மு.க அலுவகம் செயல்படுகிறதாம். ``என் அண்ணன் அரசியல் இருந்த காலகட்டம். அப்போ தன் சொந்த வீட்டை, கட்சி அலுவலகம் கட்ட எம்.ஜி.ஆர் கிட்ட இலவசமா கொடுத்தாங்க ஜானகி அக்கா. அந்த இடத்துலதான், இப்போ சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகம் அமைந்திருக்கு. அக்காவுக்கு துளிகூட அரசியலில் ஆர்வமில்லை. ஆனா, சூழ்நிலையால் சில நாள்கள் முதல்வராக இருந்தாங்க. அப்போ அடுத்தடுத்த அரசியல் சூழல்களால், அவங்க கவலைப்பட்டாங்க. அதனால, `ஏன் அக்கா உங்களுக்கு இந்த வேண்டாத வேலை'னு கேட்டேன். `என் தலையெழுத்து. நான் ஒரு சூழ்நிலைக் கைதி'னு சொல்லி வருத்தப்பட்டாங்க. முதல்வரா இருந்தபோதும், வீட்டு வேலைகள் செய்வதை அக்கா வழக்கமா வச்சிருந்தாங்க. `என் வீட்டு வேலையை நான் செஞ்சா என்ன தப்பு'னு கேட்பாங்க. அண்ணனின் மறைவுக்குப் பிறகு, அக்காவுக்கு உடல்நிலை சரியில்லாம போச்சு. 

`` `ஜானு... அம்மு வீட்டுக்கு வருது; ஸ்பெஷல் சமையல் செய்!'னு சொன்ன எம்.ஜி.ஆர்!" - விஜயகுமாரி

ஜானகி அக்காவின் தம்பியின் பேத்திக்குப் பிறந்த நாள் நிகழ்ச்சி. மதியம் வீட்டுக்குச் சாப்பிட வரச்சொல்லி என்னைக் கூப்பிடிருந்தார்  அக்கா. நான் போறதுக்கு ஒருமணிநேரம் தாமதமாகிடுச்சு. அதுக்குள் நிகழ்ச்சி முடிந்துடுச்சு. அப்போ, சாப்பிட்டு முடிச்ச உடனே அக்காவின் தலை தொங்கி, இறந்துட்டாங்க. நான் அவங்க வீட்டுக்குள் போகும்போது, `அம்மா இறந்துட்டாங்க'னு காவலாளி சொன்னார். பதறிப்போய் வீட்டுக்குள் போனேன். முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அங்க வந்து, அரசு மரியாதையுடன் அக்காவின் உடல் அடக்கத்துக்கு ஏற்பாடு செய்தார். 

அக்காவின் உடல் அடக்கம் நடந்தபோது. என் விரலில் இருந்த மோதிரம் ஒன்றைக் கழற்றி அக்காவின் உடல்மீது போட்டுட்டு என் வீட்டுக்கு வந்தேன். பிறகு, இதுவரை ராமாவரம் தோட்டத்துக்கு நான் போகவேயில்லை. ஒவ்வொரு நாளும் என் அண்ணனையும் அக்காவையும் நினைச்சுப் பார்ப்பேன். அவங்க என் மனதில் நீங்கா புகழுடன் இருப்பாங்க. எம்.ஜி.ஆருக்காக ஒரு மெழுகுவர்த்தி போல தன்னையே உருக்கிக்கிட்டு வாழ்ந்து மறைஞ்சிட்டாங்க ஜானகி அக்கா" என்று உருக்கமாகக் கூறுகிறார் விஜயகுமாரி.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு