Published:Updated:

``சோனியா, ராகுலுடன் சந்திப்பு இல்லை!” - மாயாவதி முடிவால் காங்கிரஸ் அதிர்ச்சி

பிரேம் குமார் எஸ்.கே.
``சோனியா, ராகுலுடன் சந்திப்பு இல்லை!” - மாயாவதி முடிவால் காங்கிரஸ் அதிர்ச்சி
``சோனியா, ராகுலுடன் சந்திப்பு இல்லை!” - மாயாவதி முடிவால் காங்கிரஸ் அதிர்ச்சி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரை இன்று டெல்லியில் மாயாவதி சந்திப்பார் என்று கூறப்பட்ட நிலையில், அப்படி எந்தச் சந்திப்பிலும் மாயாவதி இன்று கலந்துகொள்ளவில்லை என அக்கட்சி அறிவித்துள்ளது. 

``சோனியா, ராகுலுடன் சந்திப்பு இல்லை!” - மாயாவதி முடிவால் காங்கிரஸ் அதிர்ச்சி

மக்களவைத் தேர்தலின் அனைத்துக் கட்ட வாக்குப்பதிவும் முடிந்துவிட்டது. பதிவான வாக்குகளை எண்ணி முடிவை அறிவிக்க வேண்டியது மட்டுமே தேர்தல் ஆணைத்தின் மீதம் இருக்கும் பணி. மத்தியில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்ற கேள்விகளுக்கு மே 23 -ம் தேதி விடை கிடைத்துவிடும். வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கு முன்னதாகவே எதிர்க்கட்சிகள் பா.ஜ.க வுக்கு எதிராக ஒன்றிணைந்து ஆட்சியைக் கைப்பற்ற பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. 

முக்கியமாக மாநிலக் கட்சிகளை இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. மோடி எதிர்ப்பு மன நிலையில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த சனிக்கிழமை அன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில்தான் நேற்று மாலை மாயாவதி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்துப் பேசுவார் என்ற தகவல் வெளியானது. 

``சோனியா, ராகுலுடன் சந்திப்பு இல்லை!” - மாயாவதி முடிவால் காங்கிரஸ் அதிர்ச்சி

மேலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க மாயாவதி ஆதரவு அளிப்பார் என்ற தகவலும் வெளியானது. தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மாயாவதி விமர்சித்து இருந்தாலும் ராகுலையோ சோனியாவையோ விமர்சித்துப் பேசவில்லை. இவை அனைத்தும் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி அமைப்பதற்கான விஷயங்களாகப் பார்க்கப்பட்டது. மாயாவதி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தால் அது நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் உதவியாக இருக்கும். இதன் காரணமாக ராகுல், சோனியாவுடனான மாயாவதியின் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று காலை ஏ.என்.ஐ செய்தி ஊடகத்துக்குப் பேட்டியளித்த பி.எஸ்.பி கட்சியின் மூத்த தலைவர் எஸ்.சி மிஷ்ரா, ``இன்று மாயாவதி எந்தச் சந்திப்பிலும் ஈடுபடப்போவதில்லை. அவருக்கு டெல்லியில்  இன்று எந்த நிகழ்ச்சியும் இல்லை. அவர் லக்னோவில்தான் இருப்பார்” என்றார். 

மாயாவதியின் இந்த முடிவு காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்குச் சற்று அதிர்ச்சி அளித்திருக்கும். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக உள்ள நிலையில், மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளிலும் காங்கிரஸ் தோல்வியடைந்து வருவதாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக மம்தா பானர்ஜியும் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என ஒதுங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க கூட்டணிக்கோ அல்லது காங்கிரஸ் கூட்டணிக்கோ ஆட்சி அமைக்கத் தேவையான எண்ணிக்கை கிடைக்காத பட்சத்தில் மத்தியில் ஆட்சி அமைப்பதில் மாநிலக் கட்சிகளின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Vikatan