Published:Updated:

`2004, 2009ல் 90% பொய்யாகியுள்ளது!'- கருத்துக்கணிப்புகளை ஏற்க மறுக்கும் நாராயணசாமி

ஜெ.முருகன்
`2004, 2009ல் 90% பொய்யாகியுள்ளது!'- கருத்துக்கணிப்புகளை ஏற்க மறுக்கும் நாராயணசாமி
`2004, 2009ல் 90% பொய்யாகியுள்ளது!'- கருத்துக்கணிப்புகளை ஏற்க மறுக்கும் நாராயணசாமி

”வாக்கு எண்ணிக்கைக்குப் பின் கருத்துக்கணிப்புகள் பொய்த்துப்போகும்” என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்திருக்கிறார்.

`2004, 2009ல் 90% பொய்யாகியுள்ளது!'- கருத்துக்கணிப்புகளை ஏற்க மறுக்கும் நாராயணசாமி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் நாளை அனுசரிக்கப்பட இருக்கிறது. அதையொட்டி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து புறப்பட்ட நினைவு ஜோதி யாத்திரை, இன்று புதுச்சேரி வந்தடைந்தது. கடற்கரைச் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் நாராயணசாமி பங்கேற்று நினைவு ஜோதிக்கு வரவேற்பு அளித்தார். அதில் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர். அதனையடுத்து, அங்கிருந்து புறப்பட்ட நினைவு ஜோதி, இன்று இரவு ராஜீவ் காந்தி நினைவிடம் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர் சென்றடையும்.

`2004, 2009ல் 90% பொய்யாகியுள்ளது!'- கருத்துக்கணிப்புகளை ஏற்க மறுக்கும் நாராயணசாமி

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, ”நாட்டில் 80 கோடி மக்கள் தொகையில் 5 லட்சம் பேரிடம் மட்டுமே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. 2004 மற்றும் 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது வெளியான கருத்துக்கணிப்புகள் 90% பொய்த்துப்போனது. அதனால், தற்போது வெளியாகியிருப்பது குறித்துக் கூற முடியாது. கருத்துக்கணிப்புகள் பல்வேறு மாநிலங்களில் நம்ப முடியாத அளவிற்கு வந்துள்ளது. அதனால், வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகே முழுமையான முடிவுகள் தெரியவரும்” என்று தெரிவித்தார்.

Vikatan