Published:Updated:

`அப்போது என்ன நடந்தது?' - 2004ஐ நினைவுபடுத்தும் பினராயி விஜயன்

கலிலுல்லா.ச
`அப்போது என்ன நடந்தது?' - 2004ஐ நினைவுபடுத்தும் பினராயி விஜயன்
`அப்போது என்ன நடந்தது?' - 2004ஐ நினைவுபடுத்தும் பினராயி விஜயன்

தேர்தல் கருத்துக்கணிப்புகள் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துகளைத் தெரிவித்துவரும் நிலையில், பினராயி விஜயன் தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

`அப்போது என்ன நடந்தது?' - 2004ஐ நினைவுபடுத்தும் பினராயி விஜயன்

மக்களவைத்தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. நேற்றுடன் தேர்தல் முடிவடைந்த நிலையில், மாலை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று வெளியாகின. பல்வேறு ஊடகங்கள் வெளியிட்ட தேர்தல் கருத்துக்கணிப்புகளிலும், பா.ஜ.க வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்படிருந்தது. இந்தக் கருத்துக் கணிப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா, `இந்தப் புரளியை யாரும் நம்ப மாட்டார்கள்’ என்று எதிர்வினையாற்றியிருந்தார். `பா.ஜ.க வென்றாலும் தோற்றாலும் உலகம் முடியப்போவதில்லை. ஊடகங்களின் தரங்கள் சரிந்துவிட்டன” என்றார்.

`அப்போது என்ன நடந்தது?' - 2004ஐ நினைவுபடுத்தும் பினராயி விஜயன்

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், ``நாங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுவோம். சபரிமலை விவகாரம் தேர்தலில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எல்லோருக்கும் தெரியும், இந்த விவகாரத்துக்குக் காரணம் என்று. ஒரு குறிபிட்ட குழுவினர்தான் பிரச்னையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டனர். கருத்துக்கணிப்பு முடிவுகள் இதற்கு முன் தவறாகவே அமைந்துள்ளன. 2004-ஐ எடுத்துக்கொள்வோம். அப்போது பா.ஜ.க-தான் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகின. ஆனால், உண்மையில் நடந்து என்ன. எனவேதான் 23-ம் தேதி வரை பொறுத்திருப்போம். கேரளாவில் நாங்கள் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம்” என்றார்.