Published:Updated:

`தி.மு.க‍-வை அழைக்கல, நாங்கள் சண்டியாகம் நடத்துறோம்!'- காங். முன்னாள் எம்.எல்.ஏ யசோதா

இ.லோகேஷ்வரி
`தி.மு.க‍-வை அழைக்கல, நாங்கள் சண்டியாகம் நடத்துறோம்!'- காங். முன்னாள் எம்.எல்.ஏ யசோதா
`தி.மு.க‍-வை அழைக்கல, நாங்கள் சண்டியாகம் நடத்துறோம்!'- காங். முன்னாள் எம்.எல்.ஏ யசோதா

ந்தியத் திருநாட்டில் நல்லாட்சி மலர்ந்திட, `ஶ்ரீமகா சண்டி யாகம்'. இப்படி ஒரு பிரமாண்ட கட் அவுட், காங்கிரஸ் சார்பில் சென்னை `அண்ணா சாலை'யில் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த கட் அவுட்டில் காங்கிரஸ் தலைவர்களின் படங்களுடன், மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா தோற்றுவித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் தலைவர்களின் படங்களும் இடம்பெற்றிருக்கின்றன. 

`தி.மு.க‍-வை அழைக்கல, நாங்கள் சண்டியாகம் நடத்துறோம்!'- காங். முன்னாள் எம்.எல்.ஏ யசோதா

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்தச் சண்டி யாகம் நடத்தப்பட இருக்கிறது. நாளை தொடங்கி மூன்று நாள்கள் இந்த யாகம் நடக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில், யாகம் தொடங்கப்பட்டு, சரியாகத் தேர்தல் முடிவுகள் வரும் தினத்தன்று யாகம் முடிவடைகிறது. இந்தச் சண்டி யாகத்தை முன்னின்று நடத்துகிறார், காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யசோதா. இந்த யாகத்தில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் திருநாவுக்கரசு மற்றும் கே.வி.தங்கபாலு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

`தி.மு.க‍-வை அழைக்கல, நாங்கள் சண்டியாகம் நடத்துறோம்!'- காங். முன்னாள் எம்.எல்.ஏ யசோதா

இதற்கான அனைத்து வேலைகளும் சென்னை காமராஜர் அரங்கத் திடலில் நடைபெற்றுவருகிறது. இந்த யாகத்துக்கான அழைப்பிதழ் மற்றும் சுவரொட்டிகளில் காங்கிரஸ் தலைவர் படங்களுடன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதி மற்றும் தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. பகுத்தறிவு பேசும் தி.மு.க-வும், தேர்தலில் வெற்றிபெற சண்டி யாகத்தில் கலந்துகொள்கிறதா என்ற பேச்சு இப்போதே அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகிவிட்டது.

`தி.மு.க‍-வை அழைக்கல, நாங்கள் சண்டியாகம் நடத்துறோம்!'- காங். முன்னாள் எம்.எல்.ஏ யசோதா


இந்த யாகத்தை ஒருங்கிணைத்து நடத்தும் யசோதாவிடம் இதுகுறித்து பேசினோம். ``கூட்டணியில் இருப்பதால்தான் அவர்கள் படத்தை வைத்தோம். அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் பரவாயில்லை. எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. தி.மு.க தலைவர் வீட்டில் உள்ளவர்களுக்கும் இறை நம்பிக்கை இருக்கிறது. அதேசமயம், தி.மு.க தரப்பில் நாங்கள் யாரையும் இந்த யாகத்தில் பங்குபெற அழைக்கவில்லை'' என்றார்.

Vikatan