Published:Updated:

`சாதாரணத் தொண்டனாக அ.தி.மு.க-வில் தொடர்வேன்!' - `தோப்பு' வெங்கடாச்சலம்

`சாதாரணத் தொண்டனாக அ.தி.மு.க-வில் தொடர்வேன்!' - `தோப்பு' வெங்கடாச்சலம்
`சாதாரணத் தொண்டனாக அ.தி.மு.க-வில் தொடர்வேன்!' - `தோப்பு' வெங்கடாச்சலம்

`சாதாரணத் தொண்டனாக அ.தி.மு.க-வில் தொடர்வேன்!' - `தோப்பு' வெங்கடாச்சலம்

`சாதாரணத் தொண்டனாக அ.தி.மு.க-வில் தொடர்வேன்!' - `தோப்பு' வெங்கடாச்சலம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் தோப்பு வெங்கடாச்சலம். இவர் கடந்த 2016 தேர்தலின்போது ஈரோடு மாவட்டத்தின் ஒரே அமைச்சராகவும், ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். 2016 தேர்தலின் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா, பெருந்துறை தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்தான் வெளியிட்டார். அந்தத் தேர்தலில் மாவட்டத்தின் ஒரே அமைச்சராகக் களத்தில் இறங்கி வேலை செய்த தோப்பு வெங்கடாச்சலம், மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளிலும் அ.தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பைப் பெற்றுத் தந்தார்.

ஆனால், தேர்தலுக்குப் பின்னர் தோப்பு வெங்கடாச்சலத்துக்கு மாவட்டச் செயலாளர் பதவி மற்றும் அமைச்சர் பதவி என எதுவும் ஜெயலலிதாவால் கொடுக்கப்படவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமைச்சர் பதவி கேட்டு, எடப்பாடியாரிடம் தோப்பு வெங்கடாச்சலம் போர்க்கொடி தூக்கினார். எதுவும் வேலைக்காகவில்லை. இதையடுத்து, கடந்த சில மாதங்களாகவே பதவி கிடைக்காத கோபத்தில் இருந்த தோப்பு வெங்கடாச்சலம், தன்னுடைய கட்சிப் பதவிகளில் இருந்து விலகுவதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

அந்தவகையில், தான் வகித்து வரும் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக, சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடியைச் சந்தித்து, தோப்பு வெங்கடாச்சலம் கடிதம் கொடுத்திருக்கிறார். விரைவில் அ.தி.மு.க-விலிருந்து விலகி வேறு கட்சியில், தோப்பு வெங்கடாச்சலம் இணையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

`2016 தேர்தலுக்கு முன்பு அமைச்சர் பதவி, மாவட்டச் செயலாளர் பதவி எனப் பந்தாவாக வலம் வந்த தோப்பு வெங்கடாச்சலம், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்சியில் எந்தப் பெரிய பொறுப்பிலும் இல்லாமல் இருக்கிறார். இதனால் அவருக்குக் கட்சியிலும், தொண்டர்கள் மத்தியிலும் செல்வாக்கு இல்லை. இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க, அமைச்சர் பதவி கேட்டு முதலமைச்சரை மிரட்டிப் பார்க்கவே தோப்பு வெங்கடாச்சலம் இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்’ என்கின்றனர் அ.தி.மு.க-வினர்.

இதுகுறித்து எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலத்திடம் பேசினோம். ``நான் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக முதலமைச்சரிடம் கடிதம் கொடுத்தது உண்மைதான். மற்றபடி நான் கட்சியில் இருந்து விலகவிருப்பதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை. நான் ஒரு சாதாரண அடிப்படை உறுப்பினராக அ.தி.மு.க-வில் தொடர்வேன்'' என்றார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு